சுவாமி நாராயண் அக்சர்தாம் (காந்திநகர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுவாமி நாராயண் அக்சர்தாம் (Swaminarayan Akshardham) இந்தியாவின் குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டம், காந்திநகரில் சுவாமி நாராயணுக்கு 2 நவம்பர் 1992 அன்று அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோவில் ஆகும்.[1]சுவாமி நாராயண் அக்சர்தாம் கோயில் வளாகம் 23 ஏக்கர் பரப்பளவில், 6,000 மெட்ரிக் டன் இளஞ்சிவப்பு மணற்கற்களால் கட்டப்பட்டது.[2]
இக்கோயில் வளாகம் 108 அடி உயரம், 131 அடி அகலம், 240 அடி நீளம், 97 அழகிய தூண்கள், 17 குவிமாடங்கள், 8 உப்பரிகைகள், 264 சிற்பங்கள் கொண்டது. இக்கோயில் கட்டிடக் கலை இந்து சமய [[வேதம்]வேதங்கள் அடிப்படையில் கட்டப்பட்டதால், இரும்பு போன்ற உலோகங்கள் பயன்படுத்தப்படவில்லை. இதன் 20 அடி நீளம் கொண்ட உத்திரங்கள் ஒவ்வொன்றும் 5 டன் எடை கொண்டது.
இக்கோயில் மூலவரான சுவாமி நாராயண் திருவுருச் சிலை, 3 அடி உயர மேடை மீது நிறுவப்பட்டுள்ளது. இக்கோயிலின் நான்கு மூலைகளில் சுவாமி நாராயணின் சீடர்களின் சனனதிகள் உள்ளது.[3]இக்கோயிலின் முதல் தளத்தில் அமைந்த விபூதி மண்டபம், தாமரை வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பிரசாதி மண்டபம் எனும் அடித்தளம் சுவாமி நாராயணின் வாழ்க்கையை விளக்கும் சிற்பங்களைக் கொண்டுள்ளது.
Remove ads
தீவிரவாத தாக்குதல்
சுவாமி நாராயண் கோயிலில் 24 செப்டம்பர் 2002 அன்று மாலை முதல் 25 செப்டம்பர் 2002 காலை வரை, பாகிஸ்தான் நாட்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது இயக்க தீவிரவாதிகள் புகுந்து நடத்திய துப்பாக்கிச் சூட்டிலும், குண்டு வீச்சிலும் 33 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 70 பேர் காயமடைந்தனர்.[4] [5][6][7] [8] தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குஜராத் காவல் துறையினரும், தேசிய பாதுகாப்பு படையினரும் நடத்திய எதிர்தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ் சே முகமது இயக்கத்தின் தீவிரவாதிகள் முர்துசா ஹபீஸ் யாசின் மற்றும் அஷ்ரப் அலி முகமது பரூக் ஆகிய இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த எதிர் தாக்குதலில் மூன்று பாதுகாப்பு படையினரும் கொல்லப்பட்டனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads