சு. இராமகிருஷ்ணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் சு. இராமகிருஷ்ணன் (Dr. S. Ramakrishnan-SRK) (02 ஏப்ரல்1921-24 சூலை 1995), இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் இலக்கியப் பேச்சாளர், காந்தியம் மற்றும் மார்க்சியப் பொதுவுடமை சிந்தனையாளர் மற்றும் தமிழ் & ஆங்கில எழுத்தாளர் ஆவார். தனது பேச்சு திறனால் வள்ளுவன், கம்பன், இளங்கோ மற்றும் பாரதியைத் தமிழ் மக்களின் நெஞ்சில் நிலைபெறச் செய்தவர். அரசியல் மற்றும் இலக்கிய மேடைகளில் கேட்பவர் மனம் கிறுகிறுக்க வகையில் உரையாற்றுபவர். கமலா எனும் மருத்துவரை மணந்து மதுரையில் குடிபெயர்ந்தார். மதுரையில் சங்கரநாராயணன் என்பவர் நடத்திய தனியார் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியாக பணிபுரிந்தார்.[1]இராமகிருஷ்ணன் தஞ்சை மண்ணில் பிறந்து, மதுரை மண்ணில் மறைந்தவர். இவரின் மில்டன் மற்றும் கம்பன் இடையேயான ஒப்பீட்டு ஆய்வு நூலுக்காக முனைவர் பட்டம் பெற்றவர்.

Remove ads

இளமை & கல்வி

சென்னை மாகாணத்தின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த மயிலாடுதுறை - தரங்கம்பாடிக்கு இடையே உள்ள கிள்ளிமங்கலம் எனும் சிற்றூரில் வி. கே. சுந்தரம்-மங்களம் தம்பதியருக்கு 2 ஏப்ரல் 1921 அன்று இராமகிருஷ்ணன் மகனாகப் பிறந்தார். இராமகிருஷ்ணன் தமது 15வது வயதில் பொதுவுடமைக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கா. பாலதண்டாயுதம் தலைமையிலான மாணவர் அணியில் இணைந்து செயல்பட்ட போது, மார்க்சிய சிந்தனையில் ஈடுபாடு ஏற்பட்டது.[2]

பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் துணைவேந்தராக இருந்த காலத்தில், 1940-41ஆம் ஆண்டுகளில் இராமகிருஷ்ணன் அறிவியல் மாணவராகச் சேர்ந்தார். இராமகிருஷ்ணன் மாணவர் சங்கத்தில் இந்திய விடுதலை உணர்ச்சி ஊட்டும் சொற்பொழிவு ஆற்றியதால், பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்களால் கைது செய்யப்பட்டு வாரணாசி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். விடுதலையான இராமகிருஷ்ணன் தனது கிராமத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என தடை விதிக்கப்பட்டார்.

தமிழ்நாடு மாணவர் சம்மேளனம் என்ற அமைப்பின் தென் மண்டல மாநாடு சேலம் நகரத்தில் நடைபெற்ற போது, இராமகிருஷ்ணனுக்கு மோகன் குமாரமங்கலம், பார்வதி, கா. பாலதண்டாயுதம், சங்கரய்யா ஆகியோரின் நட்பு கிட்டியது. அம்மாநாட்டில் இராமகிருஷ்ணன் தமிழ்நாடு மாணவர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

திருச்சி தேசியக் கல்லூரியில் மாணவராகச் சேர்ந்தார்.சனவரி 1943ல் சென்னை சென்று மாணவர் சம்மேளனத்தை வலுப்பெறும் பணியில் ஈடுபட்டார். 1944ஆம் ஆண்டில் ஜனசக்தி இதழில் பணிபுரிந்த காலத்தில் எம். இஸ்மத் பாட்சா, மாயாண்டி பாரதி, சி. எஸ். சுப்பிரமணியம்[3], ஜெ. எம். கல்யாணம் ஆகியோர்களுடன் இணைந்து இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் வளர்ச்சிக்கு துணைபுரிந்தார் [4] பின் பா. ஜீவானந்தத்தின் நட்பு கிடைத்தது.

Remove ads

திருமணம் & இலக்கியப் பணி

மருத்துவர் கமலாவை மே 1944ஆம் ஆண்டில் காதல் மணம் செய்து கொண்ட இராமகிருஷ்ணன், குழந்தைகளுடன் மதுரைக்கு குடிபெயர்ந்தார். 1954ஆம் ஆண்டில் பேராசிரியர் சங்கரநாராயணனுடன் தனிப்பயிற்சி கல்லூரியில் (Tutorial College) இராமகிருஷ்ணன் ஆங்கிலப் பேரராசிரியாகப் பணியில் சேர்ந்தார். அரசியலைவிட இலக்கியத்தில் பெரிதும் நாட்டமுற்ற இராமகிருஷ்ணன், கம்பன் கழகம் நிறுவிய சா. கணேசனுடன் நெருங்கிய நட்பு பாராட்டினார். இராமகிருஷ்ணன் கம்ப இராமாயணம் குறித்து ஆற்றிய சொற்பொழிவுகள், விளக்க உரைகள், ஆய்வு நூல்கள் இலக்கிய உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சிறியன சிந்தியாதான்[5] என்ற தலைப்பில் இராமகிருஷ்ணன் ஆற்றிய உரை கேட்டவர்களைச் சொக்க வைத்தது. இராமகிருஷ்ணனின் கம்பனும் மில்ட்டனும் - ஒரு புதிய பார்வை [6] எனும் ஆய்வு நூலுக்காக முனைவர் பட்டம் பெற்றார்.1965ஆம் ஆண்டில் கருத்து வேறுபாடுகளால் பொதுவுடமைக் கட்சியிலிருந்து விலகினார். இதனால் தமிழ் இலக்கியக் கூட்டங்கள், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் சொற்பொழிவுகள் ஆற்றினார்.[7]

Remove ads

மறைவு

1983ஆம் ஆண்டு முதல் நடுக்குவாதம் நோயால் அவதிப்பட்ட இராமகிருஷ்ணன் தமது 74வது அகவையில் 24 சூலை 1995 அன்று காலமானார்.[8]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads