சு. ராஜம்
தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
எஸ். ராஜம் என்று பரவலாக அறியப்பட்ட சுந்தரம் ராஜம் (பெப்ரவரி 10, 1919 - ஜனவரி 29, 2010) ஒரு தமிழக ஓவியர், திரைப்பட நடிகர் மற்றும் கருநாடக இசைக்கலைஞர் ஆவார். இவர் பாபநாசம் சிவனின் மாணவரும், திரைப்பட இயக்குநர் வீணை எஸ். பாலசந்தரின் தமையனும் ஆவார். 1934 இல் வெளியான சீதா கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார். சில திரைப்படங்களில் மட்டும் நடித்த இவர் பின் முழு நேர ஓவியர் மற்றும் இசைக்கலைஞரானார். அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். இசை மும்மூர்த்திகள் குறித்த இவரது ஓவியங்கள் பரவலாக அறியப்படுகின்றன. கோடீஸ்வர ஐயரின் இசைப் படைப்புகளை பிரபலப்படுத்தியதிலும் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சென்னை இசை அகாதமியின் இசை வல்லுனர் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1991 இல் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[1][2][3][4][5][6][7]

Remove ads
நடித்த திரைப்படங்கள்
விருதுகள்
- சங்கீத கலாசிகாமணி விருது - 2008 இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads