சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூசைட் ஸ்க்வாட்[1] (ஆங்கிலம்: Suicide Squad) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன்-சூப்பர்வில்லன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய சூப்பர்வில்லன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், அட்லஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
இந்த படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் மூன்றாவது திரைப்படம் ஆகும். டேவிட் ஆயர் என்பவரால் எழுதி இயக்கிய இந்த படத்தில் வில் சிமித், ஜாரெட் லெடோ, மார்கோட் ரொப்பி, ஜோயல் கின்னமன், வியோல டேவிஸ், ஜெய் கோர்ட்னி, ஜெய் ஹெர்னாண்டெஸ், அடேவாலே அகின்னுயோ-அக்பாஜே, ஐகே பாரின்ஹோல்ட்ஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட் மற்றும் காரா டெலிவிங்னே ஆகியோர் நடித்துள்ளார்கள்.
பிப்ரவரி 2009 க்குள் வார்னர் புரோஸ். என்ற நிறுவனத்தின் மூலம் 'சூசைட் ஸ்க்வாட்' என்ற படம் உருவாக்குவது பற்றி டேவிட் ஆயர் உடன் திட்டமிடப்பட்டது. செப்டம்பர் 2014 இல் இப்படத்தை எழுதவும் இயக்கவும் டேவிட் ஆயர் என்பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏப்ரல் 13, 2015 அன்று ஒன்ராறியோவின் தலைநகரான ரொறன்ரோவில் முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டு சிகாகோவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்டில் நிறைவு பெற்றது.[2]
சூசைட் ஸ்க்வாட் படம் ஆகஸ்ட் 1, 2016 அன்று நியூயார்க் நகரில் திரையிடப்பட்டது, ஆகஸ்ட் 5, 2016 அன்று ஐக்கிய அமெரிக்காவில் ரியல் 3டி, ஐமாக்ஸ் மற்றும் ஐமாக்ஸ் 3டி ஆகியவற்றில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்து உலகளவில் 746 மில்லியன் வசூல் செய்தது. இந்த படம் 2016 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய பத்தாவது படமாக அமைந்தது. இந்த படம் 89ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கார் விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முதல் அகாதமி விருது வென்ற படமாகும். இந்த திரைப்படத்தை தொடந்து 2020 ஆம் ஆண்டில் பேர்ட்ஸ் ஆஃப் பிரே என்ற படம் வெளியானது.
Remove ads
நடிகர்கள்
- வில் சிமித் - ஃபிலாய்ட் லாட்டன் / டெட்ஷாட்
- மார்கோட் ரொப்பி - டாக்டர் ஹார்லீன் குயின்செல் / ஹார்லி குயீன்
- ஜோயல் கின்னமன் - ரிக் பிளக்
- வியோல டேவிஸ் - அமண்டா வாலர்
- ஜெய் கோர்ட்னி - ஜார்ஜ் "டிகர்" ஹர்க்னஸ் / கேப்டன் பூமராங்
- ஜெய் ஹெர்னாண்டெஸ் - சாட்டோ சந்தனா / எல் டையப்லோ
- அடேவாலே அகின்னுயோ-அக்பாஜே[3] - வாய்லன் ஜோன்ஸ் / கில்லர் கிரா
- ஐகே பாரின்ஹோல்ட்ஸ் - கேப்டன் ஹண்டர் கிரிக்ஸ்
- ஸ்காட் ஈஸ்ட்வுட் - "GQ" எட்வர்ட்ஸ்
- காரா டெலிவிங்னே - டாக்டர் ஜூன் மூன் / மந்திரிப்பவர்
- ஜாரெட் லெடோ[4] - ஜோக்கர்
- ஆடம் பீச்[5] - கிறிஸ்டோபர் வெயிஸ் / ஸ்லிப்காட்
- கரேன் ஃபுகுஹாரா - தட்சு யமாஷிரோ / கட்டானா
Remove ads
நடிப்புத் தெரிவுகள்
அக்டோபர் 2014 இல் வார்னர் புரோஸ். நிறுவனம் ரையன் காசுலிங்கு, டோம் ஹார்டி, மார்கோட் ரொப்பி மற்றும் வில் சிமித் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்திருந்தது.[6] உடனடியாகவே டோம் ஹார்டி மற்றும் வில் சிமித்தும் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக அறிவிக்கப்பட்டதுட்டன், மார்கோட் ரொப்பியும் இதற்காக ட்ரீம்வொர்க்கின் 'கோஸ்ட் இன் தி ஷெல்' என்ற படத்தின் நடிப்பிலிருந்து விலகினார்.
நவம்பரில் 'திவர்ப்ப' என்ற செய்தி இணையத்தில் ஜோக்கர் என்ற கதாபாத்திரத்திற்கு ரையன் காசுலிங்கு என்பவருக்கு பதிலாக நடிகர் ஜாரெட் லெடோ என்பவரை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியானது. நவம்பர் இறுதியில் மார்கோட் ரொப்பி என்பவர் ஹார்லி குயீன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2014 இல் வில் சிமித், ஸ்காட் ஈஸ்ட்வுட், காரா டெலிவிங்னே, ஜெய் கோர்ட்னி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[7]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads