சூடாமணி விகாரம்

இந்தியாவில் உள்ள கோயில் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சூடாமணி விகாரம் என்பது தமிழ்நாட்டில் நாகை மாவட்டத்தில் அமைந்திருந்த பத்மசம்பவர் padmasambhava வழி வந்த ஒரு பௌத்த விகாரமாகும்.

வரலாறு

மலாய் நாடு ( சுமத்ரா தீவு, நவீன இந்தோனேசியா) என்று இந்நாளில் குறிப்பிடப்படும் தீபகற்பம் அக்காலத்தில் ஸ்ரீவிஜயம் என்னும் பெயரால் பிரசித்தி பெற்று இருந்தது. அந்த நாட்டின் தலைநகரம் கடாரம் ஆகும். இதனை சைலேந்திர வம்சத்தினர் ஆண்டு வந்தனர் .

இவ்வம்சத்தில் மகரத்துவஜன் சூடாமணிவர்மன் எனும் மன்னன் புகழ்பெற்று விளங்கினான். அவனது மகன் விஜயோத்துங்கவர்மன் தன் தந்தையின் திருநாமத்தை நிலைநாட்ட இராஜராஜ சோழன் (கி.பி.985-1014) ஆட்சிக் காலத்தில் நாகப்பட்டினத்தில் சூடாமணி விகாரத்தைக் எழுப்பினான்.[1].

Remove ads

நினைவுக்குறிப்பு

சீன அறிஞர்கள் யுவான் சுவாங், யீஜிங் போன்றோரின் பயணக் குறிப்புகளிலும், நினைவுக் குறிப்புகளிலும் ஸ்ரீ விஜய அரச வம்சத்தை தோற்றுவித்த சைலேந்திர வம்சத்தினர் மலாயா, ஜாவா, சுமாத்திரா மற்றும் அதையொட்டிய நீரிணைப் பகுதிகளை ஆட்சி செய்ததை உருதிப்படுத்துகிறார்கள். இவர்கள் கடல் கடந்து கி.பி 8ஆம் நூற்றாண்டுகளில் தூரக்கிழக்கு நாடுகளில் ஆதிக்கம் செலுத்தியுள்ளது தெரிய வருகிறது[2][3].

செப்பேடுகள்

நெதர்லாந்து நாட்டில் லெய்டன் பல்கலைக்கழகத்தில் (Leiden University) இருக்கும் செப்பேடுகளில் 16 தமிழ் மொழியிலும் சூடாமணி விகாரம் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் 21 செப்பேடுகள் பெரியதாகவும், 3 செப்பேடுகள் சிறியதாகவும் உள்ளது. இந்த செப்பேடுகளில் புத்த விக்கரத்திற்கு கூடுதல் மானியம் வழங்கப்பட்டது பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்பு கம்பியால் வளையம் செய்யப்பட்டு 21 செப்பேடுகளும் கோர்க்கப்பட்டுள்ளது. இதில் ராஜமுத்திரை இடப்பட்டுள்ளது. வட்டமான வளையத்துக்குள் இணைக்கப்பட்டு சோழர்களின் புலிச் சின்னம், 2 விளக்குகள், மீன் வடிவங்கள், கோர்க்கப்பட்டு ராஜமுத்திரை இடப்பட்டிருக்கிறது.

இடிப்பு

19ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஏசு சபையினர் இந்த புத்த விகாரத்திற்கு பக்கத்தில் குடியேறினர். அவர்கள் இந்த கோபுரம் தங்களுக்கு அச்சுருத்தலாக இருப்பதாக கூறினார்கள். ஆகையால் ஆங்கிலேய அரசு 1867ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அந்த புத்த விகாரத்தை இடிக்க ஆங்கிலேய அரசு உத்தரவிட்டது. இந்த விபரத்தை சர் டபிள்யூ. எலியட் தனது குறிப்பில் எழுதியுள்ளார். [4]


மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads