ஆபீர நாடு

From Wikipedia, the free encyclopedia

ஆபீர நாடு
Remove ads

பரத கண்டத்தின் மேற்கில் சரஸ்வதி ஆற்றின் அருகில் இருந்த ஆபீர நாடு (Abhira kingdom) குறித்து மகாபாரத காவியத்தில் பல இடங்களில் குறிக்கப்பட்டுள்ளது. ஆபீர நாடு, இந்தியாவின் தற்கால குசராத்து மாநிலத்தின் வடக்குப் பகுதியிலும், இராஜஸ்தான் மாநிலத்தின் தெற்குப் பகுதியிலும் இருந்தது. இப்பகுதியில் அபீரர்கள் அல்லது சுரபீரர்கள் எனும் மக்கள் வாழ்ந்தனர். சிவதத்தன் எனும் மன்னர் ஆபீர நாட்டை நிறுவியதாக கருதப்படுகிறது.[1][2] ஆபீரர்கள் யாதவ குலத்தின் ஒரு கிளையினர் என்றும் கருதப்படுகிறது.

Thumb
இதிகாச கால பரத கண்ட நாடுகள்
Remove ads

இதிகாசக் குறிப்புகள்

ஆபீரர்கள் யது குலத்தின் ஒரு பிரிவினர் ஆவார். ஆபீர நாட்டவர்கள் குருச்சேத்திரப் போரில், கௌரவர் அணி சார்பாக போரிட்டனர்.[3][4] கிருட்டிணன் தனது யது குலப் படைகளை துரியோதனனுக்கு வழங்கியதுடன், தான் மட்டும் போர் ஆயுதங்களை கையாளமால், பாண்டவர் அணியில் அருச்சுனனின் தேரோட்டியாக இருந்து விடுகிறார்.[5] ஆபீரர நாட்டு மக்கள், மிலேச்சர்கள் போன்ற தாழ்குடி மக்கள் என இராமாயணம் கூறுகிறது.[6][7] பண்டைய சமஸ்கிருத மொழியின் இலக்கண ஆசிரியரான பாணினி, ஆபீரர்களை, விராதர்கள் எனும் கொள்ளைக் கூட்டத்தினர் எனக் குறிப்பிட்டுள்ளார். துவாரகை நாட்டு மக்கள், சாம்பனால் தங்களுக்குள் போரிட்டு அழிந்து போன பின்பு, எஞ்சியவர்களை அருச்சுனன் தன்னுடன் குரு நாட்டிற்கு, பஞ்சாப் பகுதி வழியாக அழைத்துச் செல்கையில் கௌரவர்களின் ஆதரவாளர்களான ஆபிரர்கள், அருச்சுனனை [8] துவாரகை மக்களின் பெருஞ்செல்வத்தை கொள்ளையிட்டனர்.[9]

மேற்கில் நகுலனின் படையெடுப்புகள்

தருமனின் இராசசூய வேள்விக்கான செலவிற்கு திறையை வசூலிக்க நகுலன் இந்திரப்பிரஸ்தத்திற்கு மேற்கில் உள்ள நாட்டு மன்னர்கள் மீது போரிட்டார். நகுலனிடம் போரில் தோல்வி அடைந்தவ மன்னர்களில் ஆபீர நாட்டு மன்னரும் ஒருவராவார். (மகாபாரதம், சபா பருவம், அத்தியாயம், 2: 31)

மார்கண்டேயரின் கணிப்பு

மார்கண்டேயர், பரத கண்டத்தின் மேற்குப் பகுதி இன மக்களான ஆபீரர்கள், காம்போஜர்கள், பாக்லீகர்கள், சிதியர்கள், பார்த்தியர்கள், கலியுகத்தில் பெரும் ஆட்சியாளர்களாக வருவர் என வன பருவத்தின் போது, தருமனிடத்தில் கணித்துக் கூறுகிறார். (மகாபாரதம், வன பருவம் 3: 187)

குருச்சேத்திரப் போரில்

குருச்சேத்திரப் போரில், துரோணர் வகுத்த கருட வியூகத்தின் கழுத்துப் பகுதியில் மற்ற நாட்டுப் படைத்தலைவர்களுடன், ஆபீர நாட்டு மன்னரும் தனது படைகளுடன் நின்று, பாண்டவர்களுக்கு எதிராகப் போரிட்டான். (மகாபாரதம் துரோண பருவம் 7: 20)

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads