சூரத்கல் கடற்கரை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூரத்கல் கடற்கரை (NITK Beach) என்றும் தேசிய தொழில்நுட்பக் கழகக் கடற்கரை என்றும் அழைக்கப்படுவது அரபிக் கடலில் இந்தியாவின் கர்நாடகாவின் தெற்கு கன்னடா மாவட்டத்தில், மங்களூர் நகரின் மையத்திற்கு வடக்கே 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கடற்கரையாகும். இது ஒரு தனியார் கடற்கரையாகும். இது அருகிலுள்ள தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகாவின் பெயரால் அழைக்கப்படுகிறது.


1972ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம் இக்கடற்கரை அருகில் உள்ளது.[1]
Remove ads
அருகிலுள்ள கல்வி நிறுவனங்கள்
- தேசிய தொழில்நுட்பக் கழகம், கர்நாடகா, சூரத்கல், மங்களூர்
- சிறீனிவாசு மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையம், முக்கா, மங்களூர்
- சிறீனிவாசு பல் மருத்துவ அறிவியல் நிறுவனம், முக்கா, மங்களூர்
- சிறீனிவாசு பல்கலைக்கழக பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, முக்கா, மங்களூர்
மருத்துவமனைகள்
அணுகல்
தேசிய தொழில்நுட்பக் கழகம் கர்நாடகம் கடற்கரை பொது போக்குவரத்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. மங்களூர் நகர ஸ்டேட் வங்கியில் உள்ள பிரதான பேருந்து நிறுத்தத்திலிருந்து பல நகரப் பேருந்து சேவைகள் (2,2A,41) உள்ளன. தேசிய தொழில்நுட்பக் கழக கடற்கரைக்கு விரைவு உடுப்பி, மணிப்பால் செல்லும் விரைவு பேருந்து அல்லாத சாதாரண பேருந்துகளிலும் செல்லலாம். பேருந்திலிருந்து இறங்கியதும், 15 நிமிடம் நடந்து சென்று கடற்கரையினை அடையலாம்.
அருகில் உள்ள நகரிலிருந்து தூரம்
- சூரத்கல், மங்களூர் - 5 கி.மீ.
- பனம்பூர் கடற்கரை, மங்களூர் - 8 கி.மீ.
- புதிய மங்களூர் துறைமுகம், மங்களூர் - 10 கி.மீ.
- தண்ணீர்பாவி கடற்கரை, மங்களூர் - 15 கி.மீ.
- கத்ரி பார்க், மங்களூர் - 16 கி.மீ.
- பம்ப்வெல், மங்களூர் - 20 கி.மீ
- பிலிகுலா நிசர்கதாமா, மங்களூர் - 22 கி.மீ.
- இன்போசிசு டிசி, முடிபு, மங்களூர் - 37 கி.மீ.
- மணிப்பால் - 51 கி.மீ.
- மல்பே - 52 கி.மீ.
- தர்மஸ்தலா - 84 கி.மீ.
- குக்கி சுப்பிரமணியசுவாமி கோவில் - 118 கி.மீ.
அருகிலுள்ள தொடருந்து நிலையங்கள்:
- சூரத்கல் தொடருந்து நிலையம், சூரத்கல், மங்களூர் - 4 கி.மீ.
- மங்களூர் மத்திய ரயில் நிலையம், ஹம்பன்கட்டா, மங்களூர் - 20 கி.மீ.
- மங்களூர் சந்திப்பு ரயில் நிலையம், பாடில், மங்களூர் - 21 கி.மீ.
விமான நிலையம்:
- மங்களூரூ பன்னாட்டு வானூர்தி நிலையம் (இந்தியா) - 19 கி.மீ.
காலநிலை
மங்களூர் வெப்பமண்டல பருவமழை காலநிலையைக் கொண்டுள்ள பகுதியாகும். தென்மேற்கு பருவமழையின் அரபிக் கடல் நேரடி பாதிப்பின் கீழ் உள்ளது.
விபத்துக்கள்
இந்த கடற்கரை 2000களிலிருந்து நீரில் மூழ்கி இறக்கும் நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றது.
- வாரங்கல் தேசிய தொழில்நுட்பக் கழக மாணவி 21 சனவரி 2020 அன்று இங்கு மூழ்கி இறந்தார்
- எஸ்விஐடி இறுதியாண்டு மாணவர் 2008ல் நீரில் மூழ்கி இறந்தார்
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads