செட்டித்திருக்கோணம்
அரியலூர் மாவட்டத்திலுள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செட்டித்திருக்கோணம் என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் அரியலூர் ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். இக்கிராமம் பெரியதிருக்கோணம் ஊராட்சியின் கீழ் இயங்குகிறது. இக்கிராமத்திற்கு மதுராந்தக சோழபுரம் என்ற பழம்பெயரும் உண்டு.[சான்று தேவை]
Remove ads
மக்கள் தொகை கணக்கெடுப்பு
இக்கிராமத்தில் சுமார் 500 வீடுகளுடன் 1500 பேர் மக்கள் தொகையுடன் வசிக்கின்றனர். [சான்று தேவை]
கல்விக் கூடங்கள்
- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
- ஒரு பாலர் பள்ளி
கோயில்கள்
இக்கிராமத்தில் அறம் வளர்த்த நாயகி உடனுறை இரணேஸ்வரர் சிவாலயம் அமைந்துள்ளது. இச்சிவாலயம் ஆயிரமாண்டு பழமை வாய்ந்ததாகும். மேலும் இக்கிராமத்தில் விநாயகர், திரௌபதையம்மன் மற்றும் கங்கை முத்து மாரியம்மன் கோயில்களும் உள்ளன.
தொழில்கள்
இக்கிராமத்தில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. பாசனத்திற்கு மருதையாற்றை நம்பி உள்ளனர். நெல், வேர்க்கடலை, கரும்பு, கம்பு, கேழ்வரகு. சோளம், எள், உளுந்து, துவரை, ஆமணக்கு போன்ற பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
இக்கிராமத்தின் பகுதிகளில் உள்ள நிலங்களில் சிமெண்ட் உற்பத்திக்குப் பயன்படும் சுண்ணாம்புக்கல் இருக்கும் காரணத்தினால், கிராமத்திற்கு அருகே உள்ள பகுதிகளில் (பிர்லா, செட்டிநாடு, அரசு) போன்ற சிமெண்ட் தொழிற்சாலைகள் உள்ளன.
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads