செந்தலைக் கொக்கு

From Wikipedia, the free encyclopedia

செந்தலைக் கொக்கு
Remove ads

செம்முடிக் கொக்கு என்பது கொக்குகள் அனைத்தினும் மிகப்பெரிய கொக்கு. இது சப்பான் கொக்கு, மஞ்சூரியக் கொக்கு என்ற பெயர்களாலும் வழங்கப்படுகிறது. கொக்கினங்களில் இதுவே இரண்டாவது அரிதான கொக்கு. நன்கு வளர்ந்த நிலையில் இதன் உடல் வெண்ணிறமாகவும் இதன் தலையில் உள்ள தோல் சிவப்பு நிறத்தில் காணப்படும். இப்பறவை கோபமான நிலையிலோ அல்லது உணர்ச்சிவயப்பட்ட நிலையிலோ இருக்கையில் இச்சிவப்பு நிறமானது மேலும் சிவந்து காணப்படும்.

Thumb
செம்முடிக் கொக்கு
விரைவான உண்மைகள் செந்தலைக் கொக்கு, காப்பு நிலை ...

இந்த இனம் அளவில் பெரிய கொக்கினங்களுள் ஒன்று. சராசரியாக 158 செ.மீ உயரமும் 7.7 முதல் 10 கிலோ எடையும் இருக்கும்.

Remove ads

மாந்தப் பண்பாட்டில் செந்தலைக் கொக்கு

சீனத்தில்

சீனப் பண்பாட்டில் இக்கொக்கு நீண்ட வாழ்நாளுக்கும் இறவாத் தன்மைக்கும் குறியீடாக உள்ளது. இலக்கியங்களில் இறவாத் தன்மை பெற்றோர் கொக்கின் மீதமர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

சப்பான்

சப்பானியப் பண்பாட்டில் இக்கொக்கு 1000 ஆண்டுகள் வாழ்வதாகக் கருதப்படுகின்றது.[3]

கொரியா

கொரியப் பண்பாட்டில் இக்கொக்கு நீண்ட ஆயுளுக்கும் தூய்மைக்கும் அமைதிக்கும் குறியீடாக உள்ளது. கொரிய நாணயமொன்றின் ஒரு புறம் இக்கொக்கு பொறிக்கப்பட்டுள்ளது.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads