செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான்
பறவை இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் (Chestnut-headed Bee-eater, Merops leschenaulti) என்பது மரங்களை அண்டி வாழும், பூச்சிகளை உண்ணும் பஞ்சுருட்டான் பறவையாகும். இது இந்திய உபகண்டம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்காசியா வரையான பகுதிகளை வாழ்விடமாகக் கொண்டுள்ளது.
இவ்வினங்கள் ஏனைய பஞ்சுருட்டான்கள் போன்று பிரகாசமாக நிறத்தைக் கொண்ட மெலிதான வடிவம் கொண்ட பறவையாகும். பச்சை நிறத்தை அதிகம் கொண்டும் நீல நிறத்தை பின்பகுதியிலும் வாயிற்றின் கீழ்ப்புறத்திலும் கொண்டும் காணப்படும். அதன் முகமும் தொண்டையும் மஞ்சலுடன் கருப்புக் கோடுகளுடனும் தலையுச்சி மற்றும் பிடறி ஆகிய பகுதிகள் உயர் செந்தவிட்டு நிறத்திலும் காணப்படும். மெல்லிய வளைந்த சொண்டு கருப்பு நிறமாகவிருக்கும். இருபால் பறவைகளும் ஒரே தோற்றத்தில் இருப்பினும், இள வயது பறவைகள் மங்கலான நிறத்தைக் கொண்டு காணப்படும்.
இவை 18-20செமீ நீளமுடையவை. இப்பறவைகள் அதிகமாக மலைப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படுகிறது.[2]
Remove ads
விளககம்
செம்பழுப்புத் தலைப்பஞ்சுருட்டான் பறவையானது கொண்டைக்குருவியை விடச் சற்றுச் சிறியதாக சுமார் 18–20 செ. மீ நீளம் இருக்கும். இதன் அலகு கறுப்பாகவும், விழிப்படலம் ஆழ்ந்த சிவப்பாகவும், கால்கள் நல்ல கறுப்பாகவும் இருக்கும். தலையும் மேல் முதுகும் செம்பழுப்பு நிறத்திலும், எஞ்சிய உடலின் மேற்பகுதிகள் புல் பச்சை நிறத்திலும் இருக்கும். மோவாயும் தொண்டையும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேல் மார்பில் ஒரு செம்பழுப்பு வளையம் காணப்படும். உடலின் பிற கீழ்ப்பகுதிகள் நீலங் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும்.
Remove ads
நடத்தை
இவை அயன அயல் மண்டல அடர்ந்த காடுகளில், பெரும்பாலும் தண்ணீருக்கு அருகில் இனப்பெருக்கம் செய்கின்றன. இவை மலைப்பகுதிகளிலும் 1000 மீட்டர் வரை காணப்படுகின்றன. இரவில் கூட்டமாக இலைகளடர்ந்த மரங்களில் தங்குகின்றன. இவை தேனீக்கள், குளவிகள் போன்ற பூச்சிகளை பறந்தபடி பிடித்து உணவாக கொள்கின்றன.
இனப்பெருக்க காலத்தில் கூட்டமாக மண் திட்டுகளிலும், மணல் திட்டுகளிலும் காட்டாறுகளை ஒட்டி நீளமான சுரங்கத்தைக் குடைந்து அதில் கூடு அமைக்கின்றன. அதில் ஐந்து முதல் ஆறு வரையிலான வெண்மையான முட்டைகளை இடுகின்றன. ஆண் பெண் பறவைகள் இணைந்து முட்டையைப் பார்த்துக் கொள்கின்றன.
Remove ads
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads