1822 இல் சென்னை மாகாணத்தில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் மாகாணத்தின் மக்கள் தொகை 13,476,923 எனக் கணக்கிடப்பட்டது. 1836–37 இல் நடைபெற்ற இரண்டாவது கணக்கெடுப்பில் மக்கள் தொகை 13,967,395 ஆக உயர்ந்திருந்தது. 1851 இல் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தும் வழக்கம் ஆரம்பமானது. 1851-52 இல் நடைபெற்ற முதல் ஐந்தாண்டு மக்கத்தொகைக் கணக்கெடுப்பில் மக்கள் எண்ணிக்கை 22,031,697 ஆக இருந்தது. அடுத்த கணக்கெடுப்புகள் 1856–57, 1861–62 மற்றும் 1866–67 இல் நடைபெற்றன. மக்கள் தொகை, 1861–62 இல் 22,857,855 ஆகவும் 1866–67 இல் 24,656,509 ஆகவும் உயர்ந்திருந்தது.[1]
பசுமலையில் மக்கள் தொகை கணக்கெடுப்பாளர்களும் ஆய்வாளரும் (1911)
பிரித்தானிய இந்தியாவில் முதல் ஒருங்கிணைக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு 1871 இல் நடைபெற்றது. அதன்படி சென்னை மாகாண மக்கள் தொகை 31,220,973. இதன் பின்னர் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்றது. பிரித்தானிய இந்தியாவில் இறுதியாக நடைபெற்ற கணக்கெடுப்பின் படி (1941) சென்னை மாகாண மக்கள் தொகை 49,341,810.[2]
மேலதிகத் தகவல்கள் சென்னை மாகாணத்தின் மாவட்டங்களும் முகமைகளும், மாவட்டம் ...