செபு மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

செபு மாகாணம்
Remove ads

செபு (/ sɛˈbuː /), அல்லது அதிகாரப்பூர்வமாக செபு மாகாணம் (செபுவானோ: Lalawigan sa Sugbo; தகலாகு: Lalawigan ng Cebu), மத்திய விசயாசு (மண்டலம் VII) பிராந்தியத்தில் அமைந்துள்ள பிலிப்பைன்சின் ஒரு மாகாணமாகும், இம்மாகாணமானது ஒரு முக்கிய தீவு மற்றும் சுற்றியுள்ள 167 தீவுகள் மற்றும் சிறுதீவுகள் ஆகியவற்றைகொண்டுள்ளது[1]. அதன் தலைநகரம், "தென்னகத்தின் அரசி" என்றழைக்கப்படும், செபு நகரம் ஆகும்[2]. இந்நகரம் பிலிப்பைன்சின் மிக பழமையான நகரமும் முதல் தலைநகரமும் ஆகும். இது மாகாண அரசாங்கத்திலிருந்து அரசியல் ரீதியாக தற்சார்புடையதாக உள்ளது.

விரைவான உண்மைகள் செபு Sugbo, நாடு ...

செபு பெருநகர பகுதி அல்லது மெட்ரோ செபு என்பது பிலிப்பைன்சில் (மெட்ரோ மணிலாவுக்குப் பிறகு) இரண்டாவது பெரிய பெருநகரப் பகுதியாகும், இப்பகுதி செபு நகரத்துடன் இணைந்து, விசயாசு பிராந்தியத்தில் வணிக, வர்த்தக , கல்வி மற்றும் தொழில்துறையின் முக்கிய மையமாக உள்ளது. பிலிப்பைன்சில் மிகவும் வளர்ந்த மாகாணங்களில் ஒன்றாக இருப்பதால், கடந்த பத்தாண்டுகளில் இது வணிக செயலாக்க சேவைகள், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து, தளபாடங்கள் தயாரித்தல் மற்றும் கனரக தொழில் ஆகியவற்றிற்கான உலகளாவிய மையமாக மாறியுள்ளது[5]. மாக்டன் தீவில் அமைந்துள்ள மாக்டன்-செபு பன்னாட்டு வானூர்த்தி நிலையம் பிலிப்பைன்சின் இரண்டாவது பரபரப்பான வானுர்த்தி நிலையமாகும்[6].

Remove ads

வரலாறு

"செபு" என்ற பெயர் பழைய செபுவானோவிலிருந்து வந்தது: சிபு (sibu) அல்லது சிபோ (sibo) ("வர்த்தகம்"), இது sinibuayng hingpit (வர்த்தகத்திற்கான இடம் ) என்பதன் சுருக்கப்பட்ட வடிவம். இது முதலில் செபு நகரத்தின் பண்டைய துறைமுகங்களை குறிக்க பயன்படுத்தப்பட்டது. 13 முதல் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் வணிகர்களால் ஹெபு, ஸிபுய், சுபு அல்லது செபு ஆகிய பெயர்களால் வழங்கப்பட்டது. சுக்பு அல்லது சுக்போ எனும் பெயர், பழைய செபுவானோ வார்த்தையிலிருந்து "எரிந்த பூமி" அல்லது "பெரிய தீ" என்பதிலிருந்து பெறப்பட்டது.

Thumb
மகலன் கடல்வழி உலகை சுற்றிவந்த பாதையை காட்டும் ஓர் வரைபடம்.

எசுப்பானியர்களின் வருகைக்கு முன்னர் செபுவில் செபு அரசகம் எனும் அரசு ஆண்டு வந்தது. சுமாத்ராவை தீவை வெற்றி கொண்ட சோழ வம்சாவளியைச் சார்ந்த தமிழ் இளவரசரான ஸ்ரீ லுமே அல்லது இளவரசர் லுமயாவால்[7] இந்த அரசாங்கம் தோற்றுவிக்கப்பட்டது. உள்ளூர் அரசுகளை அடிபணியச் செய்வதற்கு பயணப் படைகளுக்கு ஒரு தளத்தை அமைப்பதற்காக சோழ பேரரசரால் அனுப்பப்பட்ட அவர், செபுவை அடைந்த பின்னர் கிளர்ந்தெழுந்து தனக்கென்று ஒரு சுதந்திர அரசை நிறுவினார்.

பின்னர் 1521 இல் போர்த்துகீசிய மாலுமி பெர்டினண்ட் மகலனின் வருகை, எசுப்பானிய முற்றாய்வு மற்றும் காலனித்துவத்தின் துவக்கமாக அமைந்தது[8].

ஐரோப்பாவிலிருந்து மேற்கு நோக்கி பயணிப்பதன் மூலம் மலுக்கு தீவுகளை அடைந்துவிடலாம் என்ற தன் திட்டத்திற்கு போர்த்துக்கல் மன்னர் முதலாம் மானுவல் இசைவளிக்காததால், தனது சேவைகளை எசுப்பானிய மன்னர் முதலாம் சார்லசுக்கு மகலன் வழங்கினார். அதனால் கி.பி. 1519 ஆம் ஆண்டு , செப்டம்பர் திங்கள் 20 ஆம் நாள், அமெரிக்கா மற்றும் பசிபிக் பெருங்கடல் வழியாக தென்கிழக்கு ஆசியாவை சென்றடைய , எசுப்பானியாவின் சான் லேகர் தே பாரமெடா கோட்டையிலிருந்து ஐந்து கப்பல்களில் 250 பேருடன் மகலன் புறப்பட்டார். நீண்ட பயணத்திற்கு பின் கி.பி. 1521 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 16 ஆம் நாள் பிலிப்பைன்சு நாட்டை வந்தடைந்தனர் . செபுவிற்குப் பயணம் செய்தால் வணிகம் செய்து பொருளீட்ட முடியும் என .. மசாவா பிரதேசத்தின் மன்னரான கோலாம்பு அறிவுருத்தவே, செபு நோக்கி கப்பல்களை செலுத்தினர்.

தனது மொழிபெயர்ப்பாளராக மலாக்காவை சேர்ந்த என்ரிக்கு என்பவருடன் மகலன், செபூ நகரத்தில் நுழைந்து, செபு மன்னரான அரசர் ஹுமபோனுடன் நட்பு கொண்டார், மேலும் எசுப்பானிய மன்னர் சார்லசுடன் நட்பு கொள்ளும்படி செபு மக்களையும் வற்புறுத்தினார்.

Remove ads

சுற்றுலா

செபு நகரம் பிலிப்பைன்சின் ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார மையமாகும். எசுப்பானிய மற்றும் உரோமன் கத்தோலிக்க கலாச்சாரத்தின் முத்திரை மிக தெளிவாக செபு நகரமெங்கும் பதிந்திருக்கிறது. . வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல காட்சிகள் இம்மாகாணம் முழுவதும் உள்ளன.

படத்தொகுப்பு

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads