செயிண்ட் மார்ட்டின்

From Wikipedia, the free encyclopedia

செயிண்ட் மார்ட்டின்map
Remove ads

செயிண்ட் மார்டின் (Saint Martin,French: Saint-Martin; டச்சு: Sint Maarten) வடகிழக்கு மேற்கிந்தியத் தீவுகளில் உள்ளதோர் தீவு ஆகும். இது புவேர்ட்டோ ரிக்கோவிற்கு கிழக்கே ஏறத்தாழ 300 km (190 mi) தொலைவில் உள்ளது. 87-சதுர-கிலோமீட்டர் (34 sq mi) பரப்பளவுள்ள இந்தத் தீவு கிட்டத்தட்ட 60/40 விகிதத்தில் பிரான்சுக்கும் (53 km2, 20 sq mi)[1] நெதர்லாந்திற்கும் (34 km2, 13 sq mi);[2] இடையே பிரிபட்டுள்ளது; இரு பகுதிகளிலும் உள்ள மக்கள்தொகை ஏறத்தாழ சமமாகும். இருநாடுகளுக்கும் இடையே பகிர்ந்துகொண்டுள்ள தீவுகளில் இதுவே மிகச்சிறிய மக்கள்வாழும் தீவாகும். இந்தப் பிரிவு 1648 முதல் உள்ளது. தெற்கத்திய டச்சுப் பகுதி சின்டு மார்தின் எனப்படுகின்றது; இது நெதர்லாந்து இராச்சியத்தில் உள்ளடங்கிய நான்கு நாடுகளில் ஒன்றாகும். வடக்குப் பகுதி கலெக்டிவிடி டெ செயின்ட்-மார்டின் (செயிண்ட் மார்டின் தொகுப்பு) எனப்படுகின்றது;இது பிரான்சிய கடல்கடந்த தொகுப்புகளில் ஒன்றாகும்.

விரைவான உண்மைகள் உள்ளூர் பெயர்: Sint Maarten (டச்சு)Saint-Martin (பிரெஞ்சு) Nickname: நட்பான தீவு, புவியியல் ...

சனவரி 1, 2009இல் முழுமையான இத்தீவின் மக்கள்தொகை 77,741 ஆக இருந்தது;, டச்சுப் பகுதியில் 40,917 பேரும்,[3] பிரான்சியப் பகுதியில் 36,824 பேரும் உள்ளனர்.[4]

Remove ads

மேற்சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads