செரி இசுகந்தர்

From Wikipedia, the free encyclopedia

செரி இசுகந்தர்map
Remove ads

செரி இசுகந்தர் (ஆங்கிலம்: Seri Iskandar; மலாய்: Seri Iskandar; சீனம்: 斯里依斯干达; ஜாவி: سري إسكندر) என்பது மலேசியா, பேராக் மாநிலம், பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District) அமைந்துள்ள ஒரு நகர்ப்பகுதி ஆகும். இது பேராக் தெங்கா மாவட்டத்தின் தலைபட்டணமும் ஆகும்.

விரைவான உண்மைகள் செரி இசுகந்தர்Seri Iskandar பேராக், நாடு ...

ஈப்போ-லுமுட் விரைவுசாலையில் ஈப்போ க்கு தென்மேற்கே சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த நகரம்; கடல் மட்டத்திலிருந்து சராசரியாக 29 மீட்டர் உயரத்திலும் அமைந்துள்ளது. மாரா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (Universiti Teknologi MARA) கிளை வளாகமும்; மற்றும் மாரா தொழில்நுட்பக் கல்லூரியின் (Kolej Profesional MARA) கிளை வளாகமும் இந்த நகரில் டான்அமைந்துள்ளன.[1]

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, நகரத்தின் மொத்த மக்கள் தொகை 14,827.[2]

Remove ads

பெயரின் தோற்றம்

பண்டார் பாரு செரி இசுகந்தர் (Bandar Baru Seri Iskandar) எனும் பெயர், பேராக் மாநிலத்தின் 30-ஆவது சுல்தான் இசுகந்தர் ஷாவின் பெயரில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த சுல்தான் பேராக் மாநிலக் குடியிருப்பாளர்களிடையே மிகவும் பிரபலமானவர். இவர் இரண்டாம் உலகப் போருக்கு முன்னர் பொது மக்களின் நலன்களில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். முதியவர்கள் பலர், குறிப்பாக கீழ் பேராக் பகுதிகளில் வாழ்கிறவர்கள், இந்த சுல்தானைக் "சுல்தான் இஸ்கண்டோ" என்று அழைக்கிறார்கள்.

சுல்தான் இசுகந்தர் ஷா திசம்பர் 1918 முதல் 14 ஆகஸ்டு 1938 வரை பேராக் சுல்தானாகப் பதவி வகித்தார். அவரின் முழுப் பெயர் டூலி யாங் மகா மூலியா பதுக்கா செரி சுல்தான் இசுகந்தர் ஷா இப்னி சுல்தான் இட்ரிஸ் ஷா (Duli Yang Maha Mulia Paduka Seri Almarhum Sultan Iskandar Shah ibni Sultan Idris Shah). இவர் மே 10, 1876-இல் முடிசூட்டப்பட்டார்; மற்றும் ஆகஸ்டு 14, 1938-இல் காலமானார்.

Remove ads

மந்திரி பெசார்

சுல்தான் இசுகந்தரின் ஆட்சியின் போது, ​​பேராக் மாநிலத்தில் மந்திரி பெசார் எனும் முதல்வர் பதவி தோற்றுவிக்கப்படவில்லை. மாநிலத்தின் நிர்வாகம் பெரும்பாலும் பிரித்தானிய ஆளுநர்களர்களால் நிர்வகிக்கப்பட்டது.

பேராக் மாநிலத்டின் பிரித்தானிய ஆளுநர்கள்

  • 1919 - 1920 சார்ஞ் மெக்சுவல் (George Maxwell)
  • 1920 - 1921 வில்லியம் ஜேம்சு பாட்க் இயூம் (William James Parke Hume)
  • 1921 - 1926 சிசில் வில்லியம் சேசு பார் (Cecil William Chase Parr)
  • 1926 - 1927 ஆசுவால்டு பிரான்சிசு செரார்டு சுடோனர் (Oswald Francis Gerard Stonor)
  • 1927 - 1929 என்றி வாக்சுடாவு தாம்சன் (Henry Wagstaffe Thomson)
  • 1929 - 1930 சார்லசு அமில்டன் கொக்ரீன் (Charles Walter Hamilton Cochrane)
  • 1931 - 1932 பி.டபிள்யூ எலிசு (B.W. Ellis)
  • 1932 - 1939 ஜி.இ. காட்டர் (G.E. Cater)[3]
Remove ads

மேற்கோள்கள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads