சேமக்கோட்டை ஊராட்சி

இது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia

Remove ads

சேமக்கோட்டை ஊராட்சி (Semakottai Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, பண்ருட்டி[6] மற்றும் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [7] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2140 ஆகும். இவர்களில் பெண்கள் 1059 பேரும் ஆண்கள் 1081 பேரும் உள்ளனர்.

விரைவான உண்மைகள்
Remove ads

அடிப்படை வசதிகள்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[7]

மேலதிகத் தகவல்கள் அடிப்படை வசதிகள், எண்ணிக்கை ...
Remove ads

சிற்றூர்கள்

இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[8]:

  1. ஏரிபாளையம்
  2. ஏரிபாளையம் காலனி
  3. சேமக்கோட்டை
  4. சேமக்கோட்டை காலனி
  5. வையாபுரிபட்டினம்
                                 ==சேமக்கோட்டை கிராமம்==

சேமக்கோட்டை கிராமமம் பண்ருட்டி வட்டம் கடலூர் மாவட்டத்தில், சேலம் கடலூர் முக்கிய சலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முக்கிய தொழிலே வேளாண்மையாகும். மக்கள் தொகை தோறாயமாக இண்டாயிரத்தி ஐணூறூ முதல் மூவாயிறமாக இருக்கலாம் என கருதுகிறேன். இங்கு ஒரு ஆதி திராவீடர் நல மேனிலை மற்றூம் ஆரம்ப பள்ளீகள் உள்ளன. தண்ணீர் ஆதாரமாக இரண்டு ஏரிகள் உள்ளன. இது நிலத்தடி நீர், விவசாயம், மீன் வளர்ப்பு ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது. ' '

''இந்து கோவில்கள்-மாரியம்மன், அங்காளம்மன், பெரியாண்டவன், வீரன் மற்றூம் வராகியம்மன் ஆகியன.

பள்ளீ வாசல்-1 வேளாண் பயிர்கள்-நெல், கரும்பு,பருத்தி, மல்லாட்டை[வேர்கடலை]கம்பு,உளூந்து, பச்சை பயறூ மற்றூம் கராமணீ ஆகியன.

சமூக அமைப்பு

இங்கு பல்வேறூ சமூகங்கள் ஓற்றூமையுடன் வாழ்கின்றனர்.பெரும்பாண்மை சமூகம் பட்டியல் இனமும் [ஆதி திராவிடர்,அருந்ததியர்,வள்ளூவர் மற்றூம் புத்திரை வண்ணான்], இரண்டாவது பெரிய சமூகம் மிகவும் பிர்ப்படுத்தப்பட்ட சமூகமாகும் [வன்னியர்,இசை வேளாளர்] மூன்றாவதாக இசுலாமீய சமூகத்தை கூறலாம். அதர்க்கடுத்து சைவப்பபிள்ளை ஆகிய்யோர் உள்ளனர்.

மக்களின் வாழ்வாதாரம்

விவசாயிகள்,கூலிகள், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினர் உள்ளனர். 60% பேர் நிலம் வைத்துள்ளனர், ஏரிப்பாசனத்தில் நெல் விவசாயம் செய்கின்ரனர். மழை இல்லாத காலங்கlல் தண்ணீர் வாரதிர்க்கும், மணி கணக்கிலும் பாசனம் செய்கின்ரனர். மற்றவர்கள் விவசாய கூலி வேலை செய்கின்ரனர்.பெரும்பான்மையோர் நூறு நாள் வேலை செய்து வருவாய் ஈட்டுகிறார்கள்.

கோவில் திருவிழாக்கள்

இரண்டு பிரசித்திப் பெற்ற திருவிழக்கள் உண்டு. சித்திரை மாதத்தில் அங்காளம்மன் கோவிலுக்கும், ஆடி மாசத்தில் மாரியம்மன் கோவிலுக்கும் திருவிழா நடக்கும். மாரியம்மன் கோவில் சற்று விமரிசையாக நடக்கும். அடுத்து அங்காளம்மன் திருவிழா சிறப்பானது. இதில் மயனக்ககொள்ளை திருவிழா மிகுந்த ஆராவாரத்துடன் நடக்கும்.அனைத்து தரப்பு மக்களும் ஆர்வமுடன் கலந்துகொள்வர், இதில் கொழுக்கட்டை, மல்லாட்டை, சுண்டல் போன்ற பொருட்கள் தூக்கி வீசுவார்கள் அல்லது நேரடியாக கைகலளிலேயே கொடுத்துவிடுவர். மாரியம்மன் மற்றும் அங்காளம்மன் திருவிழாக்களில் மஞ்சள் நீராட்டு என்பது பொதுவானது. இதில் திருமணம் செய்யும் முறை உள்ளவர்கள், அண்ணி, அத்தை, மாமா, கொழுந்தனார்,கொழுந்தியா என ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் தண்ணீர் ஊற்றி வேடிக்கையாக விளையாடுவர்.

கலை நிகழ்ச்சிகள்

கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடக்கும்.

தெருக்கூத்து--- இரவு நேரங்களில் பதினொரு மணிக்கு ஆரம்பித்து காலை ஏழு மணிவரை நடைபெரும். புராண கால கூத்துக்கள் ஆகவே இது இருக்கும். முதியவர்கள் விரும்பி பர்ப்பர் ஆனால் இளைஞர்கள் நண்பர்களோடு எள்ளி நகையாடி மகிழ்ந்திருப்பர்.

கரக ஆட்டம்--- இதுவும் இரவு நேரத்திலேயே நடைபெறும் இளைஞர்களை பெரிதும் ஈர்க்கும் ஒரு கலை நிகழ்ச்சி. இதில் ஆண் பெண் இருபாலரும் குரவன் குரத்தி வேடமிட்டு, தெம்மாங்கு அல்லது நையாண்டி பாட்டுப் பாடி அனைவரையும் மகிழ்விப்பர். ஆட்டம் காலைவரை நடைபெறும், இளைஞர்கள் அதிக கூட்டம் கூடுவர்,

நையாண்டி மேளம்---இது முழுக்க மேளக்கச்சேரியாகவே நடைபெறும், தெருத்தெருவாக சென்று நையாண்டி மேளம் வாசித்து நாயணமோ அல்லது ஏதாவது குழல் கருவிகளை வாசித்து பெருங்கூச்சல் எழுப்பி ஆடுவர். இளைஞர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும்.

பேரிடர்கள்

சாலை விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது, ஏனெனில் இது ஒரு சாலை ஓர கிரமமாகையால் இதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மழை காலங்களில் ஏரிகளில் உடைப்பு ஏற்படவோ அல்லது உபரி நீர் குடியிருப்பு பகுதிகளில் பாய்நது சேதம் ஏற்படுத்தவோ வாய்ப்புகள் அதிகம்.



Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads