சேரன்மகாதேவி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேரன்மகாதேவி (Cheranmahadevi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி நகரமாகும். இந்நகரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
Remove ads
கோயில்கள்
சேரன்மகாதேவி நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் ஏராளமான வரலாற்று காலக் கோயில்கள் உள்ளன. இங்குள்ள அம்மநாத சுவாமி கோயில் நவ கைலாசக் கோயில்களில் ஒன்றாகும். இது ஒரு பழங்கால சிவன் கோயிலாகும். இந்த கோவிலில் உள்ள பைரவர் என்ற நாய் சிவனுடன் காணப்படுவதில்லை. சேரன்மாதேவியின் வைத்தியநாத சுவாமி கோயில் மற்றொரு பழங்கால சிவன் கோயிலாகும். இந்த கோயிலின் மகா மண்டபம் 1322-ஆம் ஆண்டில் சாதவர்மா திருபுவன சக்ரவர்த்தி குலசேகரனால் கட்டப்பட்டது.
மேலும், தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பக்தவச்சல விஷ்ணு கோயில் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு சோழர் மற்றும் பாண்டிய மன்னர்களின் காலத்தைக் குறிக்கும் இடைக்கால கல்வெட்டுகள் கிடைத்துள்ளது. கி.பி 1012-1044-ஆம் ஆண்டில் இந்த கோயில் கட்டப்பட்டது.
மேலும், இது கொலுந்தாரா மலையில் ஒரு முருகன் கோயிலைக் கொண்டுள்ளது. அனுமான் சஞ்சீவி மலையை இலங்கைக்கு எடுத்துச் சென்றபோது, மலையின் ஒருசிறிய துண்டு சேரன்மகாதேவியில் விழுந்தது என்றும், எனவே, இம்மலைக்கு கொலுந்தரா மலை என்று பெயர் ஏற்பட்டது என்றும் ஒரு கதை கூறப்படுகிறது. ("கொலுந்து" என்றால் 'பறிக்கப்பட்ட கிளை' என்று பொருள்) இன்றும், இந்த மலையில் பல்வேறு ஆயுர்வேத சிகிச்சையில் பயன்படுத்தப்படும் நிறைய மருத்துவ தாவரங்கள் உள்ளன.
இங்கு கட்டப்பட்டுள்ள ஒரு கனேடிய கால்வாய் தாமிரபரணி ஆற்றில் முதன்முதலில் கட்டப்பட்ட கால்வாய் என்று தெரிகிறது. சேரன்மகாதேவி பல கிராமங்களைக் கொண்ட ஒரு வட்டமாகும். சேரன்மாகாதேவி திருநெல்வேலியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. நகரம் நாகர்கோவிலிலிருந்து தென்காசி வரை செல்லும் ஒரு முக்கியமான சந்திப்பாகும். மேலும் திருநெல்வேலியை பாபநாசத்துடன் இணைக்கிறது. திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் துணை ஆட்சியர் அலுவலகம் இங்கே அமைந்துள்ளது.
Remove ads
புள்ளிவிவரங்கள்
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி,[2] சேரன்காதேவியின் மக்கள் தொகை 16,320 என்ற அளவில் இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 49 சதவீதமும், பெண்கள் 51 சதவீதமும் ஆகும். சேரன்மகதேவியின் சராசரி கல்வியறிவு விகிதம் 77 சதவீதம் ஆகும். இது தேசிய சராசரியான 59.5 சதவீதத்தை விட அதிகமாகும். ஆண்களின் கல்வியறிவு 83 சதவீதமும் மற்றும் பெண் கல்வியறிவு 71 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. மக்கள் தொகையில் 9 சதவீதம் பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
Remove ads
அரசியல்
சேரன்மகாதேவி சட்டமன்றத் தொகுதி திருநெல்வேலியின் ஒரு பகுதியாகும். [3]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads