சேவா கிராமம்

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு கிராமம் From Wikipedia, the free encyclopedia

சேவா கிராமம்map
Remove ads

சேவா கிராமம் (Sevagram) என்பது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் வார்தா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் ஆசிரமம் அமைந்த இடமாக, 1936 இல் இருந்து 1948 இல் அவரது இறப்பு வரை இருந்தது.[1]

விரைவான உண்மைகள் சேவா கிராமம் Sevagram, Country ...
Remove ads

கண்ணோட்டம்

வர்தாவிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ள இந்த புறநகரில் மகாத்மா காந்தி தனது சேவா கிராமம ஆசிரமத்தை அமைத்தார். அப்போது அங்குள்ள கிராமத்தில் ஆயிரம் பேர் வழ்ந்துவந்தனர். மகாத்மா காந்தியின் ஒரு சீடனான வார்தாவின் ஜம்னாலால் பஜாஜ் என்பவர் கொடையாக அளித்த 300 ஏக்கர் நிலப்பகுதியில் இது உருவாக்கப்பட்டது.[2] ஆசிரமத்திற்கு அருகில் இந்திய சுதந்திரப் போராட்டக்கால கலைப்பொருட்கள் பாதுகாக்கப்படும் ஒரு அருங்காட்சியகம் உள்ளது.

Remove ads

வரலாறு

1930இல் உப்பு சத்தியாகிரகத்துக்காக சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தண்டிக்கு நடைப்பயணம் சென்ற காந்தி, அதன் பிறகு இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைக்கும்வரை மீண்டும் சபர்மதி ஆசிரமத்துக்குத் திரும்புவதில்லை என்று முடிவெடுத்தார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் கழித்தார். விடுதலைக்குப் பிறகு இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு இந்தியாவின் மையப் பகுதியில் இருந்தபடி இயங்க விரும்பினார். 1934இல் ஜம்னாலால் பஜாஜ்ஜின் அழைப்பின் பெயரில் மகாராஷ்டிரத்தில் இருந்த வர்தா நகரத்துக்குச் சென்றார். அங்கு பஜாஜின் பங்ககளாவின்[3] ஒரு அறையில் தங்கினார்.

வராதாவின் பறநகரப் பகுதியான ஷேகான் என்ற கிராமத்தில் 1936 ஏப்ரலில் காந்தி தனது ஆசிரமத்தை நிறுவினார்.[4] ஷேகான் கிராமத்துக்கு ‘சேவா கிராமம்’ என்று பெயர் மாற்றப்பட்டது. சேவாகிராமம் வந்தபோது காந்தி 67 வயதானவராக இருந்தார். இந்த ஆசிரமத்தில் காந்தி மற்றும் கஸ்தூர்பாய் ஆகியோருக்கும், அவரது ஆதரவாளர்களும் கிராமப்புற வீடுகளை ஒத்த சிறுவீடுகள் கட்டப்பட்டன. சாதி வேறுபாட்டை ஒழிக்கும் விதமாக ஆசிரமத்தில் இருந்த பொது சமையலறையில் சில அரிசனர்கள் பயன்படுத்தப்பட்டனர். டாம் ஆற்றின் கரையில் இருந்த வினோபா பாவேவின் பரம் தம் ஆசிரமமானது இதற்கு அருகிலேயே இருந்த‍து. தேசியம் சார்ந்த பல முக்கியமான விஷயங்கள் மற்றும் இயக்கம் பற்றிய பல முடிவுகள் சேவாகிராமில் எடுக்கப்பட்டன. நாட்டின் உள்ளார்ந்த வலிமைக்காக காந்தி உருவாக்கிய தேசிய கட்டுமானப் பணிகளுக்கான பல நிறுவனங்களின் மையமாக இது இருந்த‍து.

சேவாகிராம‍மானது வார்தாவிலிருந்து 8 கி.மீ, மற்றும் நாக்பூரிலிருந்து 75 கி.மீ தொலைவில் உள்ளது. பல நடைமுறை சிக்கல்கள் இருந்தபோதிலும், இங்கே குடியேற காந்தி முடிவு செய்தார். அவரது மனைவி கஸ்தூரிபாயைத் தவிர வேறு யாரையும் அவர் உடன் வைத்துக்கொள்ள விரும்பவில்லை என்றாலும், சேவாக்கிராம் ஆசிரமம் ஒரு முழுமையான நிறுவனமாக ஆகும் வரை அவருடன் பலர் பணியாற்றினர். சேவா கிராமத்தில் அப்போது ஒரு வசதியும் இல்லை, ஒரு தபால் தந்தி அலுவலகம்கூட இல்லை. கடிதங்கள் வர்தாவில் இருந்து கொண்டவரப்பட்டன. புனிதரான கஜானான் மஹாராஜ் என்பவரின் வசிப்பிடமான ஷாகோ என்ற பெயருடைய மற்றொரு பிரபல கிராமம்மும் அப்பகுதியில் இருந்த‍து. இதனால் காந்திக்கு வரும் கடிதங்கள் தவறாக அங்கு கொண்டுசெல்லப்பட்டன. எனவே, 1940 ஆம் ஆண்டில் இந்த கிராமத்தின் பெயரை சேவா கிராமம்[5] என பெயர் மாற்ற முடிவு செய்யப்பட்டது.

Remove ads

போக்குவரத்து

சேவா கிராம‍மானது தொடருந்து மற்றும் பேருந்து மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சேவாகிராம தொடருந்து நிலையமானது பிரதான கிராமத்திலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. முன்னர் இந்த நிலையமானது வார்தா கிழக்கு தொடருந்து நிலையம் என்ற பெயரோடு இருந்த‍து. இந்த நிலையமானது ஹௌரா-நாக்பூர்-மும்பை வழித்தடத்தில் உள்ளது. வடக்கிலிருந்து தெற்காகவும், கிழக்கிலிருந்து மேற்காகவும், இந்தப் பாதையில் பெரும்பாலான தொடருந்துகள் செல்கின்றன. அருகில் உள்ள வானூர்தி நிலையம் 55 கி.மீ தொலைவில் நாக்பூரில் உள்ளது.

கல்வி

இந்தியாவில் முதல் கிராமப்புற மருத்துவக் கல்லூரியான, மகாத்மா காந்தி இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் மற்றும் ஒரு பொறியியல் கல்லூரியான, பபுரா தேஷ்முக் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகியவை சேவாகிராமத்தில் உள்ளன, இவை கிராமப்புற அறக்கட்டளையால் நடத்தப்படுகின்றன.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads