சைக்கிளடெசு

ஏஜியன் கடலில் உள்ள கிரேக்க தீவுக் கூட்டம் From Wikipedia, the free encyclopedia

சைக்கிளடெசு
Remove ads

சைக்லேட்ஸ் (Cyclades, கிரேக்கம் : கிரேக்கம்: Κυκλάδες , Kykládes , [kikˈlaðes] ) என்பது ஏஜியன் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது கிரேக்கத்தின் பிரதான நிலப்பரப்பின் தென்கிழக்கே உள்ளது. இது கிரேக்கத்தின் முன்னாள் நிர்வாக மாகாணமாகும். இது ஏஜியன் தீவுக்கூட்டத்தை உருவாக்கும் தீவுக் குழுக்களில் ஒன்றாகும். இந்தப் பெயர் டெலோஸ் புனித தீவை சுற்றியுள்ள தீவுகளை ("சுழற்சி", κυκλάς) குறிக்கிறது. சைக்லேட்சில் மிகப்பெரிய தீவு நக்சஸ் ஆகும். இருப்பினும் அதிக மக்கள்தொகை கொண்ட தீவு சிரோஸ் ஆகும்.

விரைவான உண்மைகள் சைக்லேட்ஸ் Νομός Κυκλάδων, நாடு ...
Remove ads

நிலவியல்

சைக்லேட்சில் சுமார் 220 தீவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை அமோர்கோஸ், அனாஃபி, ஆண்ட்ரோஸ், ஆன்டிபரோஸ், டெலோஸ், ஐயோஸ், கியா, கிமோலோஸ், கித்னோஸ், மிலோஸ், மைகோனோஸ், நக்சோஸ், பாரோஸ், ஃபோலெகாண்ட்ரோஸ், செரிஃபோஸ், சிஃப்னோஸ், சிஃப்னோஸ், சிஃப்னோஸ் மற்றும் திரா அல்லது சாண்டோரினி ஆகியவை ஆகும். மேலும் இத்தீவுக் கூட்டத்தில் டோனௌசா, எஸ்காட்டி, கியாரோஸ், இராக்லியா, கூஃபோனிசியா, மக்ரோனிசோஸ், ரினியா, ஸ்கோயினூசா உள்ளிட்ட பல சிறிய தீவுகளும் உள்ளன . "சைக்லேட்ஸ்" என்ற பெயரானது டெலோஸ் என்ற புனித தீவைச் சுற்றி வட்டமாக ("வட்ட தீவுகள்") உள்ள தீவுகளைக் குறிக்கிறது. இதில் உள்ள பெரும்பாலான சிறிய தீவுகள் மக்கள் வசிக்காதவை.

சிரோஸில் உள்ள எர்மௌபோலி நகரானது இந்த முன்னாள் மாகாணத்தின் முக்கிய நகரம் மற்றும் நிர்வாக மையமாகும்.

மிலோஸ் மற்றும் சாண்டோரினி ஆகிய இரண்டு எரிமலை தீவுகளைத் தவிர, இங்கு உள்ள தீவுகள் நீரில் மூழ்கிய மலைகளின் சிகரங்களாகும். இதன் காலநிலை பொதுவாக வறண்ட மற்றும் மிதமானது. நக்சோஸ் தவிர, இத்தீவுகளின் மண் மிகவும் வளமானதாக இல்லை. இதன் வேளாண் உற்பத்தி பொருட்களில் வைன், பழங்கள், கோதுமை, ஆலிவ் எண்ணெய், புகையிலை ஆகியவை அடங்கும். குறைந்த வெப்பநிலையானது அதிக உயரத்தில் பதிவு செய்யப்படுகின்றன. மேலும் இந்த பகுதிகளில் பொதுவாக குளிர்கால வானிலை இருக்காது.

சைக்லேட்ஸ் தெற்கே கிரீட் கடலால் சூழப்பட்டுள்ளது. [1]

Thumb
சைக்லேட்ஸ் புனித தீவான டெலோசைச் சுற்றியுள்ளவை
Remove ads

நிர்வாகம்

சைக்லேட்ஸ் மாகாணம் ( கிரேக்கம்: Νομός Κυκλάδων ) கிரேக்கத்தின் மாகாணங்களில் ஒன்றாக இருந்தது. 2011 ஆண்டு கல்லிக்ராடிஸ் அரசாங்க சீர்திருத்தத்தின் ஒரு பகுதியாக, மாகாணம் கலைக்கப்பட்டது. மேலும் இந்தப் பிரதேசம் தெற்கு ஏஜியன் பிராந்தியத்தின் ஒன்பது பிராந்திய அலகுகளாக பிரிக்கப்பட்டது.

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads