சோக்தியானா

From Wikipedia, the free encyclopedia

சோக்தியானாmap
Remove ads

சோக்தியானா (Sogdiana) அல்லது சோக்தியா (Sogdia); புதிய பாரசிக மொழி:: سُغْد, சோகிது) பண்டைய இந்தோ ஐரோப்பிய பாரசீக மக்கள் வாழ்ந்த தற்கால தாஜிகிஸ்தான், மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளை உள்ளடக்கியதாகும். அகாமனிசியப் பேரரசில் சோக்தியானா ஒரு மாகாணமாக விளங்கியது. கி மு 328இல் மாசிடோனியாவின் மன்னர் அலெக்சாண்டர் சோக்தியானவை கைப்பற்றினார். பின்னர் கிரேக்க பாக்திரியா பேரரசு மற்றும் சாசானியப் பேரரசுகளில் சோக்தியானா ஒரு பகுதியாக விளங்கியது.

விரைவான உண்மைகள் மொழிகள், சமயம் ...
Thumb
கிரேக்க பாக்திரியா பேரரசில் சோக்தியானா
Remove ads

அமைவிடம்

சோக்தியானா பகுதியின் முக்கிய நகரம் சமர்கந்து ஆகும். ஆமூ தாரியா ஆறு இப்பகுதியை வளப்படுத்துகிறது.

சமயங்கள்

சோக்தியானா பகுதி மக்கள் பௌத்தம், சரத்துஸ்திர சமயங்களைப் பயின்றனர். பின்னர் சாமனித்து பேரரசின் இறுதி காலத்தில், கிபி 999ல் சோக்தியானா மக்கள் இசுலாமிய சமயத்திற்கு மாற்றப்பட்டனர்.

மொழிகள்

இப்பகுதியில் பாரசீக மொழி மற்றும் துருக்கிய மொழிகள் வழக்கில் இருந்தது.

நடு ஆசியாவும் பட்டுப்பாதையும்

நடு ஆசியாவின் சோக்தியானா பகுதியில் பட்டுப்பாதை செல்வதால், சீனாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே முக்கிய வணிக மையமாக சோக்தியானா விளங்கியது.

Thumb
சோக்தியன் புத்தாண்டு நிகழ்ச்சியில் மக்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads