கிரேக்க பாக்திரியா பேரரசு

ஹெலனிஸ்டிக்-சகாப்தம்- கிரேக்க இராச்சியம் (256-100BCE) From Wikipedia, the free encyclopedia

கிரேக்க பாக்திரியா பேரரசு
Remove ads


கிரேக்க-பாக்திரியா பேரரசு (Greco-Bactrian Kingdom) ஹெலனிய காலத்தில் [2] [3][4] அலெக்சாண்டரின் மறைவுக்குப் பின்னர் கிரேக்கப் பேரரசை கி மு 323 முதல் கி மு 31 முடிய, அவரது படைத்தலைவர்கள் பங்கிட்டுக் கொண்டு ஆட்சி செய்த பகுதிகளில் ஒன்றாகும். [5] [6]

விரைவான உண்மைகள் கிரேக்க பாக்திரியா பேரரசு, தலைநகரம் ...
Remove ads

கிரேக்க-பாக்திரியா நாட்டின் தோற்றம்

Thumb
மன்னர் டயடோட்டசின் உருவம் பொறித்த தங்க நாணயம், கி மு 245

செலூக்கியப் பேரரசின் பாக்திரியா பகுதிகளின் ஆளுநராக இருந்த டயடோட்டஸ், கி மு 250இல் கிரேக்க பாக்திரியா பகுதிகளின் மன்னராகத் தானே அறிவித்துக் கொண்டார்.[7] டயடோட்டஸ் தனது இராச்சியத்தைக் கிழக்கிலும், மேற்கிலும் விரிவாக்கினார். கிரேக்க பாக்திரியா பேரரசின் தலைநகராக பாக்திரியாவின் பால்க் நகரம் விளங்கியது.

கிரேக்க பாக்திரியா நாட்டின் பரப்புகள்

கிரேக்க பாக்திரிய நாடு, தற்கால பாரசீகம், ஆப்கானித்தான், பாக்கித்தான், கசகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பாக்கித்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் மற்றும் சீனாவின் சிஞ்சியாங் மாகாணத்தின் சில பகுதிகளை கொண்டிருந்தது.

மொழிகளும், சமயங்களும்

கிரேக்க பாக்திரியா பேரரசில் மக்கள் கிரேக்கம், பாக்திரியம், பழைய அரமேயம், சோக்டியன் மொழி மற்றும் பார்த்திய மொழிகளைப் பேசியும்; பண்டைய கிரேக்க சமயம், சரத்துஸ்திர சமயம் மற்றும் பௌத்த சமயங்களையும் பின்பற்றினர்.

வீழ்ச்சி

கி மு 125இல் சிதியர்கள் கிரேக்க பாக்திரியா பேரரசை வீழ்த்தி சிதியப் பேரரசை நிறுவினர்.

கிரேக்க பாக்திரியா மன்னர்கள்

  • முதலாம் டயடோட்டஸ் கி மு 250–240
  • இரண்டாம் டயடோட்டஸ் கி மு 240–230
  • முதலாம் யுதிடெமஸ் கி மு 223-200
  • முதலாம் டெமிட்ரிஸ் கி மு 200–180
  • இரண்டாம் யுதிடெமஸ் கி மு 180 - 185
  • முதலாம் ஆண்டிமச்சூஸ் கி மு 185–170 BC
  • முதலாம் பாந்தலியன் கி மு 190- 180)
  • முதலாம் அப்போல்லோடோட்டஸ் கி மு 180–160
  • இரண்டாம் ஆண்டிமசூஸ் கி மு 160–155
  • இரண்டாம் டெமிட்ரிஸ் கி மு 155–150
  • மெனாண்டர் கி மு 155–130
  • முதலாம் இயூக்ரெடைடிஸ் கி மு 170
  • பாக்தியாவின் பிளாட்டோ கி மு 166
  • இரண்டாம் இயூக்ரெடைடிஸ் கி மு 145–140
  • ஹெலியொகிலிஸ் கி மு 145–130
Remove ads

பாக்திரியாவில் கிரேக்கப் பண்பாடு பரவல்

கிரேக்கர்கள் ஆண்ட பாக்திரியா பேரரசில் கிரேக்கக் கட்டிடக் கலை, போர்க்கலை நன்கு பரவியது. புத்தரின் சிலைகள்,பௌத்த மடாலயங்கள் கிரேக்க கட்டிட கலைநயத்தில் வடிவமைக்கப்பட்டது.

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads