சோடியம் குரோமேட்டு

From Wikipedia, the free encyclopedia

சோடியம் குரோமேட்டு
Remove ads

சோடியம் குரோமேட்டு (Sodium chromate) என்பது Na2CrO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். மஞ்சள் நிறத்துடன் நீருறிஞ்சும் திண்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தால் நான்கு, ஆறு மற்றும் பத்து நீரேற்றுகளாக உருவாக முடியும். தாதுக்களில் இருந்து குரோமியத்தைப் பிரித்தெடுக்கும்போது ஒரு இடைநிலைப் பொருளாக சோடியம் குரோமேட்டு உருவாகிறது. பிற ஆறு இணைதிறன் குரோமியம் சேர்மங்களைப் போல இச்சேர்மமும் நச்சுத்தன்மையுடனும் புற்றுநோய் ஊக்கியாகவும் செயல்படுகிறது.[1]

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

தயாரிப்பு முறை

சோடியம் கார்பனேட்டு முன்னிலையில் குரோமியம் தாதுக்களை காற்றில் வறுக்கும் போது சோடியம் குரோமேட்டைப் பெருமளவில் தயாரிக்க முடியும்.

Cr2O3 + 2 Na2CO3 + 3/2 O2 → 2 Na2CrO4 + 2 CO2

இரும்பு ஆக்சைடுகளில் இருந்து பிரித்து, தண்ணீரால் பிரித்தெடுக்க இயலும் குரோமியமாக மாற்ற இச்செயல்முறை உதவுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டவுடன் குரோமேட்டு உப்பு அடுத்ததாக சோடியம் இருகுரோமேட்டு உப்பாக மாற்றப்படுகிறது. இவ்வுப்பே பெரும்பாலான குரோமியம் சேர்மங்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகும். தொழிற்சாலைகளில் குரோமியம் ஆக்சைடை சோடியம் குரோமேட்டுடன் கந்தகம் சேர்த்து தயாரிக்கிறார்கள்.

Remove ads

அமிலக் காரப் பண்புகள்

அமிலங்களுடன் சேர்த்து வினைப்படுத்தும்போது சோடியம் குரோமேட்டு, சோடியம் இருகுரோமேட்டாக மாற்றப்படுகிறது.

2 Na2CrO4 + 2 H+ → + H2O + Na2Cr2O7

கூடுதலாக அமிலம் சேர்க்கும் அமிலமாக்கல் வினையின் போது குரோமியம் மூவாக்சைடைத் தருகிறது.

Na2CrO4 + H2SO4 → CrO3 + Na2SO4 + H2O

பயன்கள்

குரோமியத்தை அதன் தாதுக்களில் இருந்து பிரித்தெடுப்பதில் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைத் தவிர்த்து, பெட்ரொலியத் தொழிற்சாலைகளில் சோடியம் குரோமேட்டு அரிமானத் தடுப்பியாகப் பயனாகிறது.[1] நெசவுத் தொழிற்சாலைகளில் சாயமேற்றும் துணைப்பொருளாகவும், மரச்சாமான்கள் பாதுகாப்பிலும் பயன்படுகிறது.[1] and a wood preservative.[2] இரத்தச் சிவப்பு அணுக்களின் கன அளவை உறுதிப்படுத்தும் மருந்துப் பொருளாகவும் நோயறியும் மருந்தியலில் பயன்படுகிறது.[3]

கரிம வேதியியலில், முதன்மை ஆல்ககால்களை கார்பாக்சிலிக் அமிலங்களாகவும், இரண்டாம் நிலை ஆல்ககால்களை கீட்டோன்களாகவும் மாற்றுவதில் ஆக்சிசனேற்றியாகவும் பயன்படுகிறது.[4]

மேற்கோள்கள்

உசாத்துணை

இவற்றையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads