பேரியம் குரோமேட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பேரியம் குரோமேட்டு (Barium chromate) என்பது BaCrO4 என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிம வேதியியல் சேர்மம் ஆகும். ஐயுபிஏசி முறையில் இதை டெட்ராக்சோகுரோமேட்டு(VI) என்ற பெயரிட்டு அழைக்கிறார்கள். மஞ்சள் நிற மணல் தூளாக பேரியம் குரோமேட்டு காணப்படுகிறது. நன்கு அறியப்பட்ட ஆக்சிசனேற்ற முகவரான இதை சூடுபடுத்தும்போது பேரியம் அயனிகள் காரணமாக பச்சை நிற சுவாலை உற்பத்தியாகிறது.
Remove ads
வரலாறு
இயற்கையான முறையில் தோன்றும் முதலாவது பேரியம் குரோமேட்டு யோர்டான் நாட்டில் கண்டறியப்பட்டது. யோர்டானின் ஏசெமைட்டு இராச்சியத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் பழுப்பு படிகங்கங்களாக பேரியம் குரோமேட்டு காணப்பட்ட பாறைகளுக்கு ஏசெமைட்டுகள் எனப்பெயரிட்டனர். ஏசெமைட்டுப் படிகங்களின் நிறம் இளமஞ்சள் கலந்த பழுப்பில் தொடங்கி அடர் பச்சை கலந்த பழுப்பு நிறம் வரை வீச்செல்லை கொண்டதாக உள்ளது. பொதுவாக இப்படிகங்கள் 1 மிமீ அளவை விடக் குறைவாக இருந்தன[1].
ஏசெமைட்டு படிகங்கள் முற்றிலும் பேரியம் குரோமேட்டால் ஆக்கப்பட்டிருக்கவில்லை. அவற்றுடன் சிறிதளவு கந்தகமும் உள்ளடங்கியிருந்தது. வேறுபடுகின்ற படிக வகைகளில் காணப்படும் கந்தக மாசின் வீச்சும் வெவ்வேறு அளவுகளில் மாறுபட்டது. தூய்மைநிறைந்ததாகக் கருதப்படும் அடர் படிகங்கள் Ba1.00(Cr0.93, S0.07)1.00O4 என்ற இயைபும் தூய்மை குறைந்ததாகக் கருதப்படும் படிகங்கள் Ba1.00(Cr0.64, S0.36)1.00O4 என்ற இயைபும் கொண்டிருந்தன [2]. BaWO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட பேரைட்டு கனிமத்துடன் சம கட்டமைப்பு ஒற்றுமையை ஏசெமைட்டு பெற்றுள்ளது [3].
Remove ads
தயாரிப்பு
பேரியம் ஐதராக்சைடு அல்லது பேரியம் குளோரைடுடன் பொட்டாசியம் குரோமேட்டு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் பேரியம் குரோமேட்டைத் தயாரிக்கலாம்.
மாற்றாக, பேரியம் குளோரைடுடன் சோடியம் குரோமேட்டு சேர்மத்தை வினைபுரியச் செய்யும் முறையிலும் பேரியம் குரோமேட்டைத் தயாரிக்கலாம். வினைகளில் உருவாகும் வீழ்படிவு வடிகட்டப்பட்டு கழுவி உலர்த்தப்படுகிறது.
Remove ads
வினைகள்
தண்ணீரில் கொஞ்சம் கூட கரையாத பேரியம் குரோமேட்டு அமிலங்களில் கரைகிறது.
- 2 BaCrO4 + 2 H+ → 2 Ba2+ + Cr2O72− + H2O
- Ksp = [Ba2+][CrO42−] = 2.1 × 10−10
சோடியம் அசைடு முன்னிலையில் இச்சேர்மம் பேரியம் ஐதராக்சைடுடன் வினைபுரிந்து பேரியம் குரோமேட்டு(V) என்ற புதிய சேர்மத்தை உருவாக்குகிறது. இவ்வினையில் ஆக்சிசனும் நீரும் வெளியேற்றப்படுகின்றன.
Remove ads
பொதுப் பயன்பாடுகள்
பேரியம் குரோமட்டு பலவகைப்பட்ட பயன்களைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரும்பாலும் குரோமியம் அயனிகளைக் கொண்டு செல்லும் கடத்தியாக இது பயன்படுத்தப்படுகிறது. குரோமியம் மின்முலாம் பூசும் நிகழ்வுகளில் பேரியம் குரோமட்டு ஒரு சல்பேட்டு துப்புறவாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது. மின்முலாம் பூசப்படும் நிகழ்வின் இறுதி நேரம் வரை குரோமியத்தின் செறிவு படிப்படியாக குறைந்தவண்ணம் இருக்கும். இதனுடன் பேரியம் குரோமேட்டைச் சேர்ப்பதன் மூலம் குரோமிக் அமிலத்தின் செறிவு அதிகரித்து மின்முலாம் பூச்சு அதிகரிக்கிறது.
பேரியம் குரோமேட்டு ஓர் ஆக்சிசனேற்ற முகவராகும். எனவே வானவேடிக்கை வெடிகளின் இயைபுகளில் சேர்க்கப்படும்போது எரிதல் வீதத்தை தேவைக்கேற்ப திருத்தியமைக்க இதை பயன்படுத்துகிறார்கள். குறிப்பாக தாமத உருகிழைகளில் பேரியம் குரோமேட்டு பயனுள்ளதாக உள்ளது [4]. துத்தநாக மின்முலாம் பூசப்பட்ட மேற்பரப்புகளில் அரிப்புத்தடுக்கும் நிறமியாக பேரியம் குரோமேட்டு பயன்படுகிறது [5].
திண்ம பியூமரிக் அமிலத்துடன் சேர்த்து பெரியம் குரோமேட்டை மாசுக்களை அகற்றவும், கரிம உலர் சலவை கரைப்பான்கள் அல்லது பெட்ரோலியம் எரிபொருள்களின் ஈரப்பதத்தை அகற்றவும் பேரியம் குரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது [6]. ஆல்க்கேன்களிலிருந்து ஐதரசனை நீக்கும் வினைகளில் பயன்படுத்தப்படும் வினையூக்கிகளில் பகுதிக்கூறாக பேரியம் குரோமேட்டு பயன்படுத்தப்படுகிறது [7].
வண்ணச்சாயங்களிலும் பேரியம் குரோமேட்டு பயன்படுகிறது. ஈய சல்பேட்டுடன் பேரியம் குரோமேட்டு கலக்கப்பட்டு எலுமிச்சை மஞ்சள் நிறச் சாயம் தயாரிக்கப்படுகிறது [8]. இளநிறம் காரணமாக இந்த சாயத்தை எண்ணெய்தாள் ஓவியங்களில் பயன்படுத்துவதில்லை [9]. பியரி-ஆகத்தி ரினோயர் மற்றும் கிளாடு மோனெட்டு ஆகியோர் எலுமிச்சை மஞ்சள் நிறத்தை தங்கள் ஓவியங்களில் பயன்படுத்தியதாக அறியப்படுகிறது [10].
Remove ads
ஆய்வு
தனி-படிக ABO4 வகை நுண்கழிகள் உருவாக்குவதற்கான ஒரு தயாரிப்பு முறை 2004 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த தயாரிப்பு முறையானது மாற்றம் மேற்கொள்ளப்பட்ட வார்ப்புரு தொகுப்பு நுட்பத்தை கொண்டிருந்தது, இம்முறை முதலில் கரிம நுண்குழாய்களின் தொகுப்புக்கு பயன்படுத்தப்பட்டது. நானோ துகள்கள் பல்வேறு அளவுகளில் அலுமினா சவ்வு துளைகளில் வளர அனுமதிக்கப்படுகின்றன. துளைகளின் பல்வேறு அளவுகள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும் மற்றும் வடிவங்களை மீண்டும் உருவாக்கவும் அனுமதிக்கிறது. பின்னர் அலுமினா கரைந்து அப்படியே நானோ துகள்கள் விட்டுவிடுகிறது. இத்தொகுப்பு வினை அறை வெப்பநிலையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் விலை மற்றும் செல்வுகளை கட்டுப்படுத்தலாம் [11].
குரோமியத்தின் புற்றுநோய் பண்புகளை சோதிக்க நான்கு ஆறு இணைதிறன் கொண்ட குரோமியம் சேர்மங்களில் ஓர் ஆய்வு 2010 ஆம் ஆண்டில் மேற்கோள்ளப்பட்டது. குரோமியம் அயனிகள் மூச்சுக்குழாய் தளங்களில் குவிந்து திசுக்களில் கட்டிகள் உருவாக்கத்தைத் தூண்டுவதாக அறியப்பட்டது. துத்தநாகக் குரோமேட்டை தர அளவாகக் கொண்டு, பேரியம் குரோமேட்டு மரபணு நச்சுதன்மை மற்றும் செல்நச்சு ஆகிய இரண்டையும் கொண்டுள்ள சேர்மம் என உறுதிபடுத்தப்பட்டது. மரபணு நச்சுதன்மையின் காரணமாகத்தான் செல்நச்சு தோன்றுகிறது என உறுதிபடுத்தப்பட்டாலும் மரபணு நச்சின் விளைவுகள் இதுவரை அறியப்படவில்லை [12]
Remove ads
பாதுகாப்பு
பேரியம் குரோமேட்டு நச்சுத்தன்மை மிகுந்த வேதிப்பொருளாகும், உதை உள்ளிழுக்க நேர்ந்தால் புற்றுநோய் ஆபத்து ஏற்படும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads