சோமாசுகந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சோமாஸ்கந்தர், அறுபத்து நான்கு சிவ உருவத்திருமேனிகளில் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் வடிவமாகும். சிவ பார்வதி தம்பதிகள் தங்கள் குழந்தையான கந்தனுடன் காட்சியளிப்பதை சோமாஸ்கந்தர் என்று அழைக்கிறோம். இவ்வடிவத்தில் சைவம் (சிவன்), சாக்தம் (உமை), கௌமாரம் (கந்தன்) ஆகியவற்றின் பிரதானத் தெய்வங்கள் இடம்பெற்றுள்ளன.[1] மகேசுவர வடிவங்களில் இந்த திருவுருவம், தமிழகத்தில் மட்டும் காணப்படுகின்ற சிறப்பான வடிவமாகும். பஞ்சகுண சிவமூர்த்திகளில் சோமாசுகந்தர் கருணா மூர்த்தி என்று அறியப்பெறுகிறார். சொல்லிலக்கணம்சோமாசுகந்தர் என்பது சமஸ்கிருத மொழிச்சொல். சோமன் எனும் சிவபெருமான் ஸ்கந்தர் எனும் முருகனுடனும், உமையுடனும் இருக்கும் உருவ நிலை சோமாஸ்கந்தர் எனப்படுகிறது. சக உமா ஸ்கந்தர் என்பது சோமாஸ்கந்தர் என்று ஆகியது. வேறு பெயர்கள்
காலம்கி.பி 7 மற்றும் கி.பி 8 ஆம் நூற்றாண்டுகளில் சோமாசுகந்தர் உருவம் வழிபாட்டில் இருந்துள்ளது.[1] ராசசிம்ம பல்லவர் என்ற இரண்டாம் நரசிம்ம வர்மன் தான் எழுப்பிய சிவாலயங்களில் கருவறையின் உள்ளே சோமாசுகந்த புடைப்புச் சிற்பத்தினை செதுக்கியுள்ளார். [1] உருவக் காரணம்சூரபத்மனின் கொடுமைகளை தடுக்கும் பொருட்டு தேவர்கள் சிவனிடம் முறையிட்டார்கள். அவனின் கொடுமைகளை அழிக்க ஆறு முகங்களிலிருக்கும் நெற்றிக் கண்களிலிருந்து ஆறு நெறுப்பு பொறிகளை வெளியிட்டார். அந்நெருப்பு பொறிகள் கங்கையில் விடப்பட்டு சரவணப்பொய்கையை அடைந்தன. அவைகள் ஆறு குழந்தைகளாக மாறின. ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் வளர்த்தார்கள். ஆறுகுழந்தைகளையும் பார்வதி அணைக்கும் போது, ஒரே குழந்தையாக கந்தன் வடிவு பெற்றார். கந்தனுடன் தாயான பார்வதியும், தந்தையான சிவனும் தேவர்களுக்கு காட்சியளித்தமையை சோமாஸ்கந்தர் என்று அழைக்கின்றார்கள். கோயில்கள்
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads