சோயூஸ் திட்டம்

From Wikipedia, the free encyclopedia

சோயூஸ் திட்டம்
Remove ads

சோயூஸ் திட்டம் (Soyuz program, ரஷ்ய மொழி: Союз, தமிழ்: ஒன்றியம்) என்பது 1960களின் ஆரம்பப்பகுதிகளில் சோவியத் ஒன்றியத்தினால் மனிதரை விண்வெளிக்குக் கொண்டு செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு விண்வெளித் திட்டமாகும். இது சோவியத் விண்வெளி வீரரை சந்திரனுக்கு கொண்டுசெல்ல ஆரம்பிக்கப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இருந்தது. சோயூஸ் விண்கலம் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகும். சோவியத் ஒன்றியத்தின் கலைப்புக்குப் பின்னர் ரஷ்ய விண்வெளி நிறுவனம் இத்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.[1][2][3]

Thumb
அப்பல்லோ-சோயூஸ் சோதனைத் திட்டத்தில் சோயூஸ் விண்கலம்
Remove ads

சோயூஸ் விண்கலம்

சோயூஸ் விண்கலங்கள் பல முறை வெவ்வேறு பயணங்களுக்காக மாற்றியமைக்கப்படன. அவையாவன:

  • சோயூஸ் A (1963)
  • சோயூஸ் 7K-OK (1967-1971)
    • சோயூஸ் 7K-L1 சோண்ட் (1967-1970)
    • சோயூஸ் 7K-L3 LOK
    • சோயூஸ் 7K-OKS (1971)
      • சோயூஸ் 7K-T அல்லது "ferry" (1973-1981)
      • சோயூஸ் 7K-TM (1975-1976)
  • இராணுவ சோயூஸ் (7K-P, 7K-PPK, R, 7K-VI ஸ்வெஸ்டா, OIS)
  • சோயூஸ் -T (1976-1986)
  • சோயூஸ் -TM (1986-2003)
  • சோயூஸ்-டிஎம்ஏ (2003-.... )
  • சோயூஸ் TMAT (2009/....)
  • சோயூஸ் ACTS (2012/....)
Remove ads

கிளைத் திட்டங்கள்

  • சோண்ட் விண்கலம் சோயூஸ் திட்டத்தின் ஒரு கிளைத் திட்டமாகும். இது பூமியையும் சந்திரனையும் சுற்றிவர ஆரம்பிக்கப்பட்டது.
  • புரோகிரஸ் மனிதரற்ற சரக்கு விண்கலங்கள். இவை சல்யூட் மற்றும் மீர் விண்வெளி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டவை.
  • 2007 இலிருந்து சோயூசின் கிளைத் திட்டங்கள் அனைத்துலக விண்வெளி நிலையத்துக்கு மனிதரயும் சரக்குகளையும் கொண்டுசெல்ல பயன்படுத்தப்படுகின்றன.
  • சீனாவின் ஷென்ஜோவ் திட்டம் சோயூசின் ஆரம்ப வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads