சௌன யாதவ அரசமரபு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌன யாதவ அரசமரபினர் (Seuna, Sevuna or Yadavas of Devagiri) (கிபி:860–1317) இந்தியாவின் தக்காணப் பீடபூமியின் மேற்கு பகுதியில், வடக்கே நர்மதை ஆறுக்கும் தெற்கே, துங்கபத்திரை ஆறுக்கும் இடைப்பட்ட தற்கால மகாராட்டிரா மற்றும் கர்நாடகா மாநிலப் பகுதிகளைக் கொண்ட தேவகிரி யாதவப் பேரரசை கிபி 860 முதல் கிபி 1317 முடிய 457 ஆண்டுகள் ஆட்சி செய்தனர். சௌன யாதவ அரசமரபினர் தலைநகரமாக தேவகிரி எனும் தௌலதாபாத் இருந்தது.
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ தேவகிரி யாதவப் பேரரசு உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
துவக்கத்தில் இந்த சௌன யாதவர்கள், மேலைச் சாளுக்கியர் ஆட்சியில் சிற்றரசர்களாக இருந்தனர். 12-ஆம் நூற்றாண்டின் நடுவில் சாளுக்கியர்கள் வீழ்ச்சியுற்ற போது, யாதவ மன்னர் ஐந்தாம் பீமதேவன் தன்னாட்சியை அறிவித்துக் கொண்டார். சிங்கண்னன் ஆட்சிக் காலத்தில் (1210 – 1247) தேவகிரி யாதவப் பேரரசை விரிவுபடுத்தினார். கிபி 1317-இல் தில்லி சுல்தான் அலாவுதீன் கில்சியில் படைத்தலைவர் மாலிக் கபூர் என்பவரால் தேவகிரி யாதவ அரசமரபு வீழ்த்தப்பட்டு, தில்லி சுல்தான் ஆட்சியில் சிற்றரசர்களாக இருந்தனர்.
Remove ads
பெயர்க் காரணம்
கண்ணன் பிறந்த யாதவ குலமே தங்கள் அரசமரபு என சௌனக யாதவர்கள் கூறிக்கொண்டனர்.[1]

இலக்கியம்
மராத்தி மொழி
இவர்களது ஆட்சியில் மராத்தி மொழி ஆட்சி மொழியாக இருந்தது.[2] முன்னர் கன்னடம் மற்றும் சமசுகிருத மொழியில் கல்வெட்டுகள் அதிகம் கொண்டிருந்த்தது..[3]
சௌன யாதப் பேரரசில் அமைச்சராக இருந்த ஹேமாத்ரி என்பவர், சமஸ்கிருத மொழி கலந்த மராத்தி மொழியை அரசவை மொழியாக்கினார்.[4] பக்தி இயக்கத்தின் முன்னோடியான மகான் ஞானேஸ்வர் எழுதிய ஞானேஸ்வரி (கிபி 1200) எனும் மராத்திய பக்தி இலக்கிய நூல் பதிகங்கள் கொண்டது. மேலும் ஞானேஸ்வர் சமஸ்கிருத மொழியிலிருந்து, மராத்தி மொழியில் பகவத் கீதையை மொழிபெயர்த்தார். முமுந்தராஜா என்பவர் மராத்தி மொழியில் தத்துவ விசாரணை நூலான பரமாமிருதம் மற்றும் விவேகசிந்து போன்ற நூல்களை இயற்றினார். [5] சௌன யாதவ அரசமரபின் இறுதி காலத்தில் பக்தி இயக்கம் எழுச்சியுற்ற போது தோன்றிய வர்க்காரி எனும் சமயப் பிரிவின் விட்டலர் அடியார்கள் பாடிய பக்திப் பாடல்கள் மராத்திய மொழியில் பிரபலமானது.[5]
கன்னட மொழி
தேவகிரி யாதவப் பேரரசு ஆட்சியின் துவக்கத்தில் கன்னட மொழி அரசவை மொழிகளில் ஒன்றாக இருந்தது என்பதை கன்னட மொழி கல்வெட்டுகள் மூலம் அறியபடுகிறது. மேலும் யாதவ அரசர்கள் கன்னட மொழியை ஆதரித்தனர். இரண்டாம் சிம்மனால் ஆதரிக்கப்பட்ட அழகிதேவர் கன்னட மொழியில் எழுதிய பக்திப் பாடல்கள் பிரபலமானது. 1300-இல் பண்டரிபுரம் சௌந்தராஜர் கன்னட மொழியில் எழுதிய தசகுமார சரிதம் எனும் நூல் புகழ் பெற்றது.[6][7][8]
சமசுகிருதம்
தேவகிரி யாதவப் பேரரசர் சிங்கண்ணா சமசுகிருத மொழியை பெரிது ஆதரித்தார். மேலும் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞரான இரண்டாம் பாஸ்கரர் இயற்றிய நூல்களைக் கொண்டு வானியல் தொடர்பான கல்வி நிலையத்தை நிறுவினார். மேலும் சிங்கண்ணா ஆட்சியின் போது சாரங்க தேவரால் சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட சங்கீத இரத்தினாஹாரம் எனும் கர்நாடக இசை நூல் பிரபலமானது.[9]
சமசுகிருத மொழியில் ஹேமாத்திரி எனும் அறிஞர் சதுர்வர்க்க சிந்தாமணி எனும் சமசுகிருத அகராதியை தொகுத்தார்.[10]மேலும் ஹேமாத்திரி மருத்துவ அறிவியல் தொடர்பாக பல நூல்களை சமசுகிருத மொழியில் எழுதினார். மேலும் இவர் கம்பு வேளாண்மையை ஊக்கிவித்தார். [11]
சௌன யாதவ அரசமரபின் தேவகிரி யாதவப் பேரரசு ஆட்சியில் எழுதப்பட்ட பிற சமசுகிருத இலக்கிய நூல்களும், ஆசிரியர்களும்:
- சுத்திமுக்தாவல்லி - ஜல்ஹனார்
- ஹமிராமாதனா - ஜெயசிம்ம சூரி
- சித்தாந்த சிரோண்மணி - இரண்டாம் பாஸ்கரர்
- வராகமிரரின் பிருகத் ஜாதகம் மற்றும் பிரம்மகுப்தரின் பிருகத்ஸ்பூட சிந்தாமணி போன்ற நுல்களுக்கு ஆனந்ததேவரின் விளக்க உரை
- சங்கீத சூத்திரங்கள் -ஹரிபாலதேவர்.[12][not in citation given]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads