சிங்கண்ணா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் சிங்கண்ணா (Simhana) (ஆட்சிக் காலம்: கிபி 1200 - 1246 அல்லது 1210 - 1246) தற்கால தென்னிந்தியாவின் மகாராட்டிரா, கர்நாடகா, குஜராத், மத்தியப் பிரதேசம் போன்ற பகுதிகளை ஆண்ட தேவகிரி யாதவப் பேரரசர் ஆவார்.

விரைவான உண்மைகள் இரண்டாம் சிங்கண்ணா, தேவகிரி யாதவப் பேரரசர் ...

சௌன யாதவ அரசமரபைச் சேர்ந்தவர்களில் புகழ்பெற்ற மன்னர் சிக்ண்ணா, தேவகிரி பேரரசை தக்காண பீடபூமியில் இருந்த ஹோய்சாலர், சாளுக்கியர், காக்கத்தியர் மற்றும் மத்திய குஜராத்தின் வகேலா வம்சத்தவர்களை வென்று தனது ஆட்சிப் பரப்பை விரிவாக்கினார். மேலும் பராமாரப் பேரரசின் மால்வா பகுதிகளை தேவகிரி யாதவப் பேரரசில் இணைத்தார்.

Remove ads

மொழி & கல்வி வளர்ச்சி

தேவகிரி யாதவப் பேரரசர் சிங்கண்ணா சமசுகிருத மொழியை பெரிது ஆதரித்தார். மேலும் வானியல் மற்றும் கணிதவியல் அறிஞரான இரண்டாம் பாஸ்கரர் இயற்றிய நூல்களைக் கொண்டு வானியல் தொடர்பான கல்வி நிலையத்தை நிறுவினார். மேலும் சிங்கண்ணா ஆட்சியின் போது சாரங்க தேவரால் சமசுகிருத மொழியில் எழுதப்பட்ட சங்கீத இரத்தினாஹாரம் எனும் கர்நாடக இசை நூல் பிரபலமானது.[1]

சமசுகிருத மொழியில் ஹேமாத்திரி எனும் அறிஞர் சதுர்வர்க்க சிந்தாமணி எனும் சமசுகிருத அகராதியை தொகுத்தார்.[2]மேலும் ஹேமாத்திரி மருத்துவ அறிவியல் தொடர்பாக பல நூல்களை சமசுகிருத மொழியில் எழுதினார்.

சிங்கண்ணா அரசவையின் வானியல் அறிஞர்களான ஆனந்ததேவர் மற்றும் சந்திரதேவர் ஆகியோர்களில் ஆனந்ததேவர் வராகமிரரின் பிருகத் ஜாதகம் மற்றும் பிரம்மகுப்தரின் பிருகத்ஸ்பூட சிந்தாமணி போன்ற நுல்களுக்கு விளக்க எழுதியுள்ளார். பேரரசர் சிக்கண்ணா, சந்திரதேவருக்கு அவரது தாத்தா இரண்டாம் பாஸ்கரர் நினைவாக காநதேஷ் பிரதேசத்தின் படானா நகரத்தில் வானவியல் படிப்பிற்கு உயர்கல்வி நிலையம் அமைத்து கொடுத்தார்..[3]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads