சௌவீரதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சௌவீரதேசம் சிந்துதேசத்திற்கு தெற்கிலும்,மாளவதேசத்திற்கு வடமேற்கிலும், மண்ணும், மணலும் கலந்து பரவி இருந்த தேசம்.[1]
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி சௌவீர நாடு கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |

இருப்பிடம்
இந்த தேசம் சிந்துநதியை எல்லையாக வைத்துக்கொண்டு தென்மேற்கில் பாரியாத்ரம் என்னும் மலையின் அடிவாரம் வரையிலும், தென்கிழக்கில் இருக்கும் திரிகூட மலையின் வடமேற்கு பாகம் முழுமைக்கும் மூன்று திசைகளிலும் உயர்ந்தும், மேற்கு பாகத்தில் மட்டும் தாழ்ந்தும் ஒரு பெரிய பூமியாய் இருக்கும்.[2]
மலை, காடு, விலங்குகள்
இந்த தேசத்திற்கு தென் மேற்கு மூலையில் பாரியாத்ரமலை, தென் கிழக்கில் திரிகூடமலையும் உள்ளது. இந்த தேசத்தின் வடகிழக்கில் விதர்ப்பதேசத்தின் அருகில் தேவகிரி என்ற மலையும் உண்டு.
நதிகள்
இந்த சௌவீரதேசத்திற்கு தேவகிரி மலையில் உற்பத்தியாகி இத்தேசத்தை குறுக்காக தாண்டி , இந்த தேசத்தை செழிக்க வைத்து மேற்கு எல்லையில் ஓடும் சிந்து நதியுடன் இணைகிறது.
விளைபொருள்
இந்த தேசத்தில் பட்டு, கரும்பு, பருத்தி, திராட்சை, முதலியன அதிகமாய் விளைந்தும், இந்த தேசத்தவர்கள் மகாராட்டிரம், ஆந்திரம், யவனம், வங்கம், கோசலம், குரு, சூரசேனம் அகிய தேசங்களில் ரத்தினம், பட்டு முதலியனவையும் வியாபாரம் செய்கின்றனர்.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
