மாளவதேசம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாளவதேசம் கூர்சரதேசத்திற்கு வடகிழக்கிலும், அவந்திதேசத்திற்கு வடமேற்கிலும், அஸ்தமனகிரிக்கு கிழக்கிலும், நடுவில் சம்மான,சதுரமான பூமியில் பரவி இருந்த தேசம்.[1]

இருப்பிடம்
இந்த தேசத்தின் தென்கிழக்கு பாகத்தில் மாத்திரம் மண் மிருதுவாகவும், செழிப்பும் நிறைந்தும் காணப்படுகிறது.[2]
மலை, காடு, விலங்குகள்
இந்த மாளவதேசத்திற்கு மேற்கில் அஸ்தகிரி என்னும் மலையும், அஸ்தகிரிக்கும், சிம்மதேசத்தின் தென்கிழக்கில் கடற்கரையை ஒட்டி பிரம்மபுத்திரா நதியை ஒட்டி உதயகிரிக்கும், கிழக்கு மேற்காக திரிகூடம், அஸ்தகிரி மகாகாளமலையும், சிறிய காடுகளும், அவைகளில் மான், கரடி, பன்றி, புலி, யானை, குயில், மயில், அணில் ஆகிய விலங்குகள் அதிகமாக இருக்கும்.
நதிகள்
இந்த தேசத்தின் நதிகள் மேற்கில் உள்ள அஸ்தகிரி மகாகாளமலையிலிருந்தும், வடமேற்கில் உள்ள திரிகூட மலையிலிருந்தும், சிறு, சிறு நதிகள் தெற்கு, வடக்கு பூமியை செழிக்கச்செய்து கிழக்குமுகமாகசென்று சர்மண்வதீ நதியுடன் இணைகிறது.
விளைபொருள்
இந்த தேசத்தில் கடலை, கொள்ளு, முதலியன அதிகமாய் விளைந்தும், தாமிரம், பித்தளை, முதலிய உலோகப் பொருள்களாலான வெகு அழகாய், நேர்த்தியாய் செய்யப்பட்ட பாத்திரங்களையும், இரும்பாலான ஆயுதங்களையும் அம்மக்கள் பயன்படுத்தினர்.
கருவி நூல்
- புராதன இந்தியா என்னும் 56 தேசங்கள் - சந்தியா பதிப்பகம் - சென்னை-83- மூன்றாம் பதிப்பு-2009
சான்றடைவு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
