ஜந்தர் மந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜந்தர் மந்தர் (Jantar Mantar) என்பது, புவியின் அச்சுக்கு இணையாகச் செம்பக்கம் கொண்ட பிரம்மாண்ட செங்கோண முக்கோணவடிவக் கோல் அமைக்கப்பட்டதொரு பகலிரவு சமன்கொண்ட சூரிய மணிகாட்டி ஆகும். இதில் கோலுக்கு இருபுறமும் நிலநடுக்கோட்டின் தளத்திற்கு இணையானதாகவுள்ள ஒரு வட்டக் காற்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இது, நேரத்தை அரைநொடித் துல்லியமாகக் கணிப்பதற்கும், சூரியன் மற்றும் வான்சார் பொருட்களின் சரிவைக் கணக்கிடவும் அமைக்கப்பட்ட கருவியாகும்.[1]

இந்தியாவில், 18 ம் நூற்றாண்டில் ஜெய்ப்பூரில் ஜெய் சிங் அரசரால் ஐந்து ஜந்தர் மந்தர்கள் கட்டப்பட்டன. அவை புதுதில்லி, ஜெய்ப்பூர், உஜ்ஜைன், மதுரா மற்றும் வாரணாசியில் அமைந்துள்ளன.[2]
Remove ads
இவற்றையும் பார்க்க
- ஜந்தர் மந்தர் (ஜெய்ப்பூர்)
- சந்தர் மந்தர், புதுதில்லி
- சந்தர் மந்தர் (வாரணாசி)
- சந்தர் மந்தர் (உஜ்ஜைன்)
மேற்கோள்கள்
வெளிடயிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
