ஜனார்த்தனன் (நடிகர்)

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

ஜனார்த்தனன் (நடிகர்)
Remove ads

ஜனார்த்தனன் பிள்ளை (பிறப்பு 5 மே 1946), என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இந்திய விமானப்படையின் முன்னாள் பணியாளர் ஆவார். மலையாள திரைத்துறையில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் உள்ளார்.

விரைவான உண்மைகள் ஜனார்த்தனன் பிள்ளை, பிறப்பு ...
Remove ads

பிறப்பு மற்றும் குடும்பம்

ஜனார்த்தனன் பிள்ளை 1946 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி வைக்கம் அருகே உள்ள உல்லால கிராமத்தில் கொல்லரக்காட்டு வீட்டில் பரவூர் கே.கோபால பிள்ளை மற்றும் கௌரி அம்மா ஆகியோருக்கு இளைய மகனாகப் பிறந்தார். அவருக்கு நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.[2]

ஜனார்த்தனன், விஜயலட்சுமி என்பவரை மணந்தார். அவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ரெமா ரஞ்சினி மற்றும் லக்ஷ்மி என இருவர் உள்ளனர்.

அவர் தனது ஆரம்பக் கல்வியை வெச்சூரில் உள்ள என்எஸ்எஸ் உயர்நிலைப் பள்ளியிலும், பல்கலைக்கழகத்திற்கு முந்தைய கல்வியை சங்கனாச்சேரியில் உள்ள என்எஸ்எஸ் இந்துக் கல்லூரியிலும் பயின்றார்.‌இந்திய விமானப்படையில் சிறிது காலம் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 1967ல், தனுவாச்சபுரம் வேலுத்தம்பி நினைவு என்எஸ்எஸ் கல்லூரியில் பி.காம் சேர்ந்தார்.

Remove ads

திரை வாழ்க்கை

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய பிரதிசாந்தி என்ற குடும்பக் கட்டுப்பாடு ஆவணப்படத்தில் அறிமுகமானார். 1972 இல் ஆதியதே கத என்ற திரைப்படத்தில் நடித்தார்.

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads