ஜயந்த் நாரளீக்கர்

சாகித்திய அகாதமி விருது பெற்ற மராத்திய எழுத்தாளர் From Wikipedia, the free encyclopedia

ஜயந்த் நாரளீக்கர்
Remove ads

ஜயந்த் விஷ்ணு நாரளீக்கர் (Jayant Vishnu Narlikar) (19 சூலை 1938 - 20 மே 2025) ஒரு இந்திய வானியற்பியலாளரும் அண்டவியலாளரும் ஆவார். நிலை மாறா அண்டவியலை ஆதரிக்கும் இவர், பிரெட்ஆயிலுடன் இணைந்து ஹாயில்-நாரளீக்கர் கோட்பாட்டை உருவாக்கினார்.[1][2]

விரைவான உண்மைகள் ஜயந்த் நாரளீக்கர், பிறப்பு ...
Remove ads

வாழ்க்கைச் சுருக்கம்

சூலை 19, 1938 - ஆம் ஆண்டு மகாராசுடிரத்தில் உள்ள கோலாப்பூரில் பிறந்தார் நருலிகர். அவரது தந்தை விஷ்ணு வாசுதேவ நருலிகர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைத் தலைவராக இருந்தார். அவரது தாயார் சுமதி நருலிகர் சமசுகிருதப் புலவராக இருந்தார். பனாரசு இந்து பல்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்ற சயந்து, பிறகு கேம்பிரிட்சு சென்றார்[3].

படிப்பு

கேம்பிரிட்சில் பல்வேறு பட்டங்களை கணிதத்துறையில் பெற்றார்.

  • இளங்கலை (B.A.) - 1960
  • முனைவர் பட்டம் (Ph.D) - 1963
  • முதுகலை (M.A.) - 1964
  • (Sc.D.) - 1976 [3]

இருப்பினும் சிறப்புத்துறையாக அவர் தேர்ந்தெடுத்தது வானியலையும் வானியற்பியலையும் தான்.

அண்மைக்கால ஆராய்ச்சி

41 கி.மீ. உயரத்தில் மீவளி மண்டலத்தில் (Stratosphere) நுண்ணுயிரிகள் கண்டெடுக்கப்பட்டு, அவற்றின் மூலம் பற்றிய ஆய்வு செய்த குழுவுக்கு தலைமையேற்று வழி நடத்தினார் நருலிகர்.[4]

பெற்ற விருதுகள்

  • பத்ம பூசண் விருது (1965)
  • ராசுட்ரா பூசண் (1981)-எப்.அய்.ஈ அறக்கட்டளை, இச்சால்கரஞ்சி.
  • இந்திய தேசிய அறிவியல் அகாதமி வழங்கிய இந்திரா காந்தி விருது (1990)
  • யுனெசுகோ வழங்கிய காளிங்கா பரிசு (1996)
  • பத்ம விபூசண் விருது (2004)
  • மகாராட்டிர பூசண் விருது (2010)
  • சாகித்ய அகாதமி விருது (தன் வரலாறு, மராத்தி நூலுக்காக) (2014)

இறப்பு

இவர் 2025 ஆம் ஆண்டு மே 20 ஆம் நாள் உறக்கத்தில் இருந்த போது இறந்தார்.[5]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads