ஜல் சக்தி அமைச்சகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜல் சக்தி அமைச்சகம் (Ministry of Jal Shakti) மே, 2019-இல் நரேந்திர மோடியின் இரண்டாவது அமைச்சரவையின் போது நீர் ஆதாரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகங்களை ஒன்றிணைத்து புதிய அமைச்சகமாக நிறுவப்பட்டது.[1] இந்த அமைச்சகத்தின் உருவாக்கம் கடந்த சில சகாப்தங்களாக நாடு எதிர்கொள்ளும் பெருகிவரும் நீர் சவால்களுக்கு இந்தியாவின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது.[2]
Remove ads
பணிகள்
கங்கை ஆற்றை தூய்மை செய்யும் நோக்கத்துடன் ஜல்சக்தி அமைச்சகத்துடன் நீர் ஆராதரங்கள், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகம் மற்றும் குடிநீர் மற்றும் துப்பரவு அமைச்சககளை ஒன்றிணைக்கப்பட்டது. அண்டை நாடுகளுடன் இந்தியா பகிர்ந்து கொள்ளும் நதிகளுக்கு இடையிலான எந்தவொரு சர்வதேச அல்லது தேசிய மோதல்களையும் இந்த அமைச்சகம் எதிர்கொள்ளும்.[3]
கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தம் செய்வதற்காக நாட்டின் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை வழங்குவதற்காக "நமாமி கங்கா" திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.[4]
Remove ads
அமைச்சர்கள்
ஜல்சக்தி அமைச்சகத்தின் அமைச்சராக சந்திரகாந்த் ரகுநாத் பாட்டீல் உள்ளார்.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads