ஜாக் இடிலன் கிரேசர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாக் டிலான் கிரேசர் (ஆங்கிலம்: Jack Dylan Grazer) (பிறப்பு: செப்டம்பர் 3, 2003)[1][2][3] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சியில் கௌரவ வேடங்களில் நடிப்பதன் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் இட் என்ற இசுடீபன் கிங் எழுதிய நாலை தழுவி எடுக்கப்பட்ட இட் (2017) மற்றும் இட் சாப்டர் 2 (2019) போன்ற படங்களில் எடி காஸ்ப்ராக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் 2019 ஆம் ஆண்டும் முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைப்படங்களான ஷசாம்![4] (2019) மற்றும் ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற படங்களில் 'பிரெடி பிமேன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் 2021 பிக்சார் திரைப்படமான லூகா என்ற படத்தில் ஆல்பர்டோவுக்கு குரல் கொடுத்தார் மற்றும் 2021 ஆம் ஆண்டு 20ஆம் சென்சுரி பாக்ஸ் திரைப்படமான ரோன் கோன் ரோங் இல் பார்னிக்கு குரல் கொடுத்தார். இவரை 2018 ஆம் ஆண்டில், தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் 18 வயதிற்குட்பட்ட முதல் 30 நட்சத்திரங்களில் ஒருவராக பட்டியலிட்டது.[5]
Remove ads
தனிப்பட்ட வாழ்க்கை
கிரேசர் செப்டம்பர் 3, 2003 இல் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பெவர் மற்றும் கவின் கிரேசர் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது மாமா தயாரிப்பாளர் பிரையன் கிரேசர் ஆவார்.[6] ஜூலை 2021 இல், இன்ஸ்ட்டாகிராம் நேரடியின் போது தான் ஒரு இருபால்சேர்க்கையாளர் என்று அறிவித்தார்.[7][8]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads