ஜாக் நிக்கல்சன்

From Wikipedia, the free encyclopedia

ஜாக் நிக்கல்சன்
Remove ads

ஜான் ஜோசப்ஜேக்நிக்கல்சன் (பிறப்பு ஏப்ரல் 22, 1937) ஒரு அமெரிக்க நடிகர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.

விரைவான உண்மைகள் ஜாக் நிக்கல்சன், இயற் பெயர் ...

நிக்கல்சன் அகாதமி விருதுகளுக்கு பன்னிரண்டு முறை பரிந்துரை செய்யப் பெற்றுள்ளார். ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூ’ஸ் நெஸ்ட் மற்றும் அஸ் குட் அஸ் இட் கெட்ஸ் ஆகிய திரைப்படங்களுக்காக இரண்டு முறை சிறந்த நடிகருக்கான அகாதமி விருதுகளை வென்றுள்ளார். 1983 ஆம் ஆண்டில் வெளிவந்த டெர்ம்ஸ் ஆஃப் என்டியர்மென்ட் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருதினை வென்றார். நடிப்புக்காக அதிக முறை அகாதமி விருது வென்ற ஆண் நடிகர்களில் வால்டர் ப்ரெனன் உடன் இணைந்த இடத்தில் உள்ளார் (மூன்று). ஒட்டுமொத்தமாய் நடிப்புக்காக வென்றவர்களில் (நான்கு) கேதரின் கெபர்ன்க்கு அடுத்த இடத்தில் உள்ளார். 1960கள் தொடங்கி ஒவ்வொரு தசாப்தத்திலும் நடிப்புக்கான அகாதமி விருதுக்கு (கதாநாயகர் அல்லது துணை நடிகர்) பரிந்துரை செய்யப்பட்டிருக்கக் கூடிய இரண்டே நடிகர்களில் ஒருவர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு (இன்னொருவர் மைக்கேல் கேய்ன்). ஏழு கோல்டன் குளோப் விருதுகளை வென்றிருக்கும் இவர் 2001 இல் கென்னடி மைய கவுரவத்தையும் பெற்றார். 1994 ஆம் ஆண்டில், அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டிடியூட்டின் வாழ்நாள் சாதனை விருதினை இளம் வயதில் வென்றவர்களில் ஒருவர் என்கிற பெருமையும் இவருக்குக் கிட்டியது.

காலவரிசையில் இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை பின்வருமாறு: ஈஸி ரைடர் , ஃபைவ் ஈஸி பீசஸ் , சைனாடவுன் , ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூ’ஸ் நெஸ்ட் , தி ஷைனிங் , ரெட்ஸ் , டெர்ம்ஸ் ஆஃப் என்டியர்மென்ட் , பேட்மேன் , எ ஃப்யூ குட் மென் , அஸ் குட் அஸ் இட் கெட்ஸ் , எபவுட் ஸ்கிமிடிட் , சம்திங்’ஸ் காட்ட கிவ் , ஏங்கர் மேனேஜ்மென்ட் , தி டிபார்ட்டட் , மற்றும் தி பக்கெட் லிஸ்ட் .

Remove ads

ஆரம்ப வாழ்க்கை

நியூயார்க் நகரத்தில் உள்ள செயிண்ட் வின்செண்ட் மருத்துவமனையில், ஜூன் ஃபிரான்செஸ் நிக்கல்சன் (மேடை பெயர் ஜூன் நில்சன்) என்கிற துணைநடிகைக்கு மகனாய் நிக்கல்சன் பிறந்தார்.[1][2] ஆறு மாதங்களுக்கு முன்னர் தான் மேரிலாண்டில் உள்ள எல்க்டன் என்ற இடத்தில் அக்டோபர் 16, 1936 இல் ஜூன் இத்தாலிய அமெரிக்க துணைநடிகரான டோனால்டு ஃபர்சிலோவை (மேடைப் பெயர் டோனால்டு ரோஸ்) திருமணம் செய்து கொண்டிருந்தார்.[3] எல்க்டன் “அவசர”த் திருமணங்களுக்கு பெயர்போன நகரமாய் இருந்தது. ஃபர்சிலோ ஏற்கனவே திருமணமானவர் என்றாலும் குழந்தையைப் பார்த்துக் கொள்ள அவர் சம்மதித்தார். ஆனால் முக்கியமாய் ஜூன் நடன வாழ்க்கையை தொடர வசதியாக தானே குழந்தையை வளர்த்துக் கொள்வதாக ஜூனின் தாய் ஈதெல் தொடர்ந்து வலியுறுத்தினார். தான் தான் நிக்கல்சனின் தந்தை என்றும் ஜூனை திருமணம் செய்ததன் மூலம் இருதாரம் புரிந்து கொண்டதாகவும் டோனால்டு ஃபர்சிலோ கூறினார் என்றாலும் கூட, ஜேக்’ஸ் லைஃப் வாழ்க்கை வரலாற்றில் பேட்ரிக் மெக்கில்லிகன், ஜூனின் மேலாளராய் இருந்த லாட்வியாவில் பிறந்த எடி கிங் (இயற்பெயர் எட்கர் எ.கிறிஸ்ஃபெல்ட்)[4] தான் தந்தையாக இருக்கலாம் என்று உறுதிபடக் கூறினார். நிக்கல்சனுக்கு தனது தந்தை யார் என உறுதியாய் தெரிந்திருக்கவில்லை என்று மற்ற[1] ஆதாரங்களும் கூறுகின்றன. நிக்கல்சனின் தாய் ஐரிஷ், ஆங்கிலேய, மற்றும் டச்சு வம்சாவளியைச் சேர்ந்தவர்,[5] ஆயினும் அவரும் அவரது குடும்பத்தினரும் தங்களை ஐரிஷ் வம்சாவளியாகவே அடையாளம் கண்டு கொண்டனர்.[6][7]

தாத்தா ஜான் ஜோசப் நிக்கல்சன் (நியூ ஜெர்சியின், மனாஸ்குவான் பகுதியில் பல்பொருள் அங்காடியில் பொருட்களை அலங்காரமாய் அடுக்கி வைக்கும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்) மற்றும் பாட்டி ஈதெல் மே ரோட்ஸ் (மனாஸ்குவான் பகுதியில் ஒரு தலையலங்கார கலைஞராகவும், அழகுக் கலைஞராகவும் ஆரம்பநிலை நடிகையாகவும் இருந்தார்) ஆகியோர் தான் தன் பெற்றோர் என்று நம்பிய நிலையில் நிக்கல்சன் வளர்ந்தார். தனது “பெற்றோர்” உண்மையில் தனது தாத்தா பாட்டி என்றும் தான் அக்கா என்று கருதியவர் தான் உண்மையில் தனது தாய் என்றும் 1974 ஆம் ஆண்டில் தான் நிக்கல்சனுக்கு தெரியவந்தது. நிக்கல்சன் தொடர்பான கட்டுரை ஒன்றை டைம் இதழுக்காக தயாரித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியாளர் தான் இந்த விவரத்தை அவருக்குக் கூறினார்.[8] இந்த சமயத்திற்குள்ளாக, அவரது தாய் பாட்டி இருவருமே இறந்து விட்டிருந்தனர் (முறையே 1963 மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில்). தனது தந்தை யார் என்றே தனக்கு தெரியாது என்று நிக்கல்சன் கூறியிருக்கிறார், “ஈதெல் மற்றும் ஜூனுக்குத் தான் தெரியும். ஆனால் அவர்கள் யாருக்கும் சொன்னது கிடையாது”.[8] இதற்காக ஒரு டிஎன்ஏ பரிசோதனை செய்து கொள்வதற்கோ அல்லது இந்த விஷயத்தை இன்னும் தொடர்வதற்கோ அவருக்கு விருப்பமில்லை.

நியூஜெர்சியில் உள்ள நெப்டியூன் நகரத்தில் தான் நிக்கல்சன் வளர்ந்தார்.[4] தாயின் ரோமன் கத்தோலிக்க மதத்தில் தான் அவர் வளர்க்கப்பட்டார்.[5] அருகிலுள்ள மனாஸ்குவான் உயர்நிலைப் பள்ளியில் படித்த நிக் - உயர்நிலைப் பள்ளி நண்பர்கள் இவரை இப்பெயரில் தான் அழைத்தனர் - 1954 ஆம் ஆண்டு வாக்கில் “வகுப்பு கோமாளி” என தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாய் ஒரு தியேட்டர் மற்றும் நாடக விருதுக்கு அவரது பெயரிடப்பட்டுள்ளது.[9] 2004 ஆம் ஆண்டில், நிக்கல்சன் 50 ஆண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மறுசந்திப்பு நிகழ்ச்சியில் தனது அத்தை லோரெய்ன் உடன் கலந்து கொண்டார்.[4]

Remove ads

ஆரம்ப நடிப்பு வாழ்க்கை

Thumb
தி லிட்டில் ஷாப் ஆஃப் ஹாரர்ஸில் வில்பர் ஃபோர்ஸ் ஆக நிக்கல்சன் (1960)

நிக்கல்சன் முதன்முதலில் ஹாலிவுட்டுக்கு வந்தபோது, எம்ஜிஎம் கார்ட்டூன் ஸ்டுடியோவில் வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பெரா போன்ற அசைவூட்டக் காட்சி சிறப்புக் கலைஞர்களுக்கு எடுபிடி போல் பணிபுரிந்தார். ஒரு கலைஞராக அவரது திறமையைக் கண்டபின், நிக்கல்சனுக்கு அவர்கள் அசைவூட்டக் காட்சி கலைஞராக ஆரம்ப நிலை பொறுப்பு ஒன்றை அளித்தனர். ஆயினும், தனக்கு நடிகராகத் தான் ஆசை என்று கூறி, அவர் மறுத்து விட்டார்.[10]

இவரது சினிமா அறிமுகம் 1958 ஆம் ஆண்டில் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட இளைஞர் படமான தி க்ரை பேபி கில்லர் படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்ததன் மூலம் நிகழ்ந்தது. அடுத்து வந்த பதினாண்டு காலத்தில், அந்த படத்தின் தயாரிப்பாளரான ரோஜர் கார்மென் உடன் நிக்கல்சன் ஒத்துழைப்புடன் பணியாற்றினார். கார்மன் பல சந்தர்ப்பங்களில் நிக்கல்சனை இயக்கியிருக்கிறார். இதில் குறிப்பிடத்தக்கவையாக தன்னைத் துன்புறுத்தி இன்பம் காணும் பல் நோயாளியாக (வில்ஃபர் ஃபோர்ஸ்) நடித்த தி லிட்டில் ஷாப் ஆஃப் ஹாரர்ஸ் , மற்றும் தி ராவன் , தி டெரர் மற்றும் தி செயிண்ட் வாலண்டைன்’ஸ் டே மாசகர் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம். இயக்குநர் மோண்டி ஹெல்மேன் உடனும் இவர் தொடர்ந்து பணியாற்றியிருந்தார். இரண்டு குறைந்த பட்ஜெட் படங்கள் (ரைட் இன் தி வேர்ல்விண்ட் , தி ஷூட்டிங் ) இதில் குறிப்பிடத்தக்கவையாய் அமைந்தன. இவை ஆரம்பத்தில் அமெரிக்க திரைப்பட விநியோகஸ்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கத் தவறின என்றாலும் பிரான்சில் கலைத் திரைப்பட வட்டாரங்களில் இது ஒரு வழிமுறைப் படமாக ஆனதையடுத்து தொலைக்காட்சிக்கு பின்னர் விற்கப்பட்டது.

Remove ads

புகழ்பெறுதல்

தனது நடிப்பு வாழ்க்கை எங்கு செல்கிறது என்பதே உறுதியுறாத நிலையில், திரைக்குப் பின்னால் ஒரு கதாசிரியர்/இயக்குநர் வேலையில் நிக்கல்சனுக்கு ஆர்வம் பிறந்தது. 1967 ஆம் ஆண்டின் தி ட்ரிப் படத்திற்கு (கோர்மென் இயக்கியது) திரைக்கதை எழுதியது தான் இவரது முதல் எழுத்து வெற்றி எனக் குறிப்பிடலாம். இப்படத்தில் பீட்டர் ஃபோண்டாவும் டென்னிஸ் ஹாப்பரும் நடித்திருந்தனர். ஹெட் என்னும் திரைப்படத்தையும் நிக்கல்சன் (பாப் ரஃபேல்சன்) உடன் சேர்ந்து எழுதினார், இதில் தி மோங்கீஸ் இசைக்குழுவினர் நடித்திருந்தனர். இதனுடன், படத்துக்கான இசைசேர்ப்புக்கும் இவர் ஏற்பாடு செய்திருந்தார். ஆயினும் ஃபோன்டா மற்றும் ஹாப்பரின் ஈஸி ரைடர் படத்தில் ஒரு இடம் கிடைத்த பிறகு, அது அவரது முதல் நடிப்புத் திருப்புமுனைக்கு அழைத்துச் சென்றது. பெருங்குடிகார வழக்கறிஞரான ஜார்ஜ் ஹேன்சன் பாத்திரத்தில் நிக்கல்சன் நடித்தார். இதற்கு அவருக்கு முதல் ஆஸ்கர் பரிந்துரை கிட்டியது. ஹேன்சன் வேடம் கிட்டியது நிக்கல்சனுக்கு அதிர்ஷ்டவசமாய் அமைந்த ஒரு திருப்புமுனையாகும். உண்மையில் இந்த பாத்திரம் திரைக்கதை ஆசிரியரான டெரி சதர்னின் நெருங்கிய நண்பரான நடிகர் ரிப் டார்னை மனதில் கொண்டு எழுதப்பட்டதாகும். ஆனால் படத்தின் இயக்குநர் டென்னிஸ் ஹாப்பர் உடன் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் இந்த படத்தில் இருந்து டார்ன் விலகிக் கொண்டார், இந்த வாக்குவாதம் ஏறக்குறைய இருவரும் அடித்துக் கொள்ளும் நிலைக்குச் சென்று விட்டது.[11]

அடுத்த வருடத்தில் ஃபைவ் ஈஸி பீசஸ் (1970) படத்தில் இவரது பாத்திரத்திற்கு சிறந்த நடிகருக்கான பரிந்துரை கிட்டியது. அத்துடன் அதே வருடத்தில், ஆன் எ க்ளியர் டே யூ கேன் ஸீ ஃபாரெவர் கதையின் திரைப்பட தழுவலிலும் அவர் தோன்றினார். இந்த படத்தில் அவரது நடிப்பு பெரும்பாலும் வெட்டும் அறையின் தரையில் தான் அமைக்கப்பட்டிருக்கும்.

ஹால் ஆஷ்பியின் தி லாஸ்ட் டீடெயில் (1973) (இதற்கு இவருக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகர் விருது கிட்டியது) மற்றும் ரோமன் போலன்ஸ்கியின் பரபரப்பூட்டும் படமான சைனாடவுன் (1974) ஆகியவை நிக்கல்சன் நடித்த பிற பாத்திரங்கள் ஆகும். இரண்டு படங்களிலுமே அவரது நடிப்புக்காக சிறந்த நடிப்புக்கான அகாதமி விருதுக்கு நிக்கல்சன் பரிந்துரை செய்யப்பட்டார். மேன்சன் குடும்பத்தாரின் கைகளில் சிக்கி போலன்ஸ்கியின் மனைவி ஷரோன் டாடெ உயிர்விடுவதற்கு வெகு காலம் முன்பிருந்தே நிக்கல்சன் இயக்குநருடன் நெருக்கம் பாவித்து வந்திருந்ததால், இறப்பினை தொடர்ந்த நாட்களில் அவரை ஆதரித்தார்.

டாடெயின் மரணத்திற்குப் பிறகு, தனது தலையணையின் அடியில் ஒரு சுத்தியல் வைத்துக் கொண்டு நிக்கல்சன் உறங்கத் துவங்கினார், அத்துடன் மேன்சன் விசாரணையில் கலந்து கொள்வதற்காக வேலைக்கிடையே ஓய்வும் எடுத்துக் கொள்வார்.[12] போலன்ஸ்கி கைது செய்யப்பட்ட நிகழ்வான கற்பழிப்பு சம்பவம் நிக்கல்சனின் வீட்டில் தான் நடந்தேறியிருந்தது.[13]

கென் ரஸல் இயக்கிய தி ஹூ’ஸ் டாமி (1975), மற்றும் மைக்கேலேஞ்சலோ அண்டோனியோனியின் தி பாசஞ்சர் (1975) ஆகிய படங்களிலும் அவர் நடித்தார்.

Remove ads

அமெரிக்கர்களின் அடையாள மனிதராக

Thumb
62வது அகாதமி விருதுகள் நிகழ்ச்சியில் நிக்கல்சன் (வலது) மற்றும் டென்னிஸ் ஹாப்பர், மார்ச் 26, 1990

1975 ஆம் ஆண்டில் மிலோஸ் ஃபார்மேன் இயக்கிய ஒன் ஃப்ளூ ஓவர் தி குக்கூ’ஸ் நெஸ்ட் என்னும் கென் கெஸியின் நாவலின் திரைத் தழுவலில் ரேண்டில் பி.மெக்மர்பியாக நடித்ததற்கு தனது முதல் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை நிக்கல்சன் பெற்றார். நர்ஸ் ரேட்ச்டு பாத்திரத்திற்காக சிறந்த நடிகை விருதை லூய்ஸெ ஃபிளெட்சர் பெற்ற அதே சமயத்தில் இவருக்கு ஆஸ்கார் கிடைத்ததும் பொருத்தமாய் அமைந்தது.

இதற்குப் பிறகு, அவர் மிகவும் அசாதாரணமான பாத்திரங்களை ஏற்கத் துவங்கினார். தி லாஸ்ட் டைகூன் படத்தில் ராபர்ட் டி நிரோவுக்கு ஜோடியாக ஒரு சிறிய பாத்திரத்தை அவர் ஏற்றார். ஆர்தர் பென்னின் தி மிசௌரி பிரேக்ஸ் படத்தில் அனுதாபம் பெறாத ஒரு பாத்திரம் ஒன்றை அவர் ஏற்றார். குறிப்பாக மர்லன் பிராண்டோவுடன் இணைந்து வேலை செய்யும் பொருட்டு இதனை அவர் ஏற்றார். இதனையடுத்து வெஸ்டர்ன் காமெடியான கோயிங்’ சவுத் மூலம் தனது இரண்டாவது இயக்குநர் அறிமுகத்தை இவர் செய்தார். 1971 ஆம் ஆண்டில் வெளியான ட்ரைவ், ஹீ ஸெட் தான் ஒரு இயக்குநராக அவரது முதல் திரைப்படம் ஆகும்.

ஸ்டீபன் கிங்கின் தி ஷைனிங் (1980) நாவலைத் தழுவி ஸ்டான்லி குப்ரிக் எடுத்த திரைப்படத்திற்கு இவர் எந்த அகாதமி விருதையும் பெறவில்லை என்றாலும் அது நிக்கல்சனின் மிக முக்கியமான பாத்திரங்களில் ஒன்றாய் விளங்குகிறது. அவரது அடுத்த ஆஸ்கர், சிறந்த துணை நடிகருக்கான அகாதமி விருது, டெர்ம்ஸ் ஆஃப் என்டியர்மென்ட் படத்தில் இவர் ஏற்றிருந்த ஓய்வுபெற்ற விண்வெளிப் பயண வீரரான கரெட் ப்ரீட்லவ் பாத்திரத்திற்கு கிடைத்தது, இப்படத்தை ஜேம்ஸ். எல். ப்ரூக்ஸ் இயக்கினார். நிக்கல்சன் 80களில் பரபரவென உழைத்துக் கொண்டிருந்தார், தி போஸ்ட்மேன் ஆல்வேஸ் ரிங்ஸ் ட்வைஸ் (1981), ரெட்ஸ் (1981), ப்ரிஸி’ஸ் ஹானர் (1985), தி விட்சஸ் ஆஃப் ஈஸ்ட்விக் (1987), பிராட்கேஸ்ட் நியூஸ் (1987), மற்றும் அயர்ன்வீட் (1987) போன்ற ஏராளமான படங்களில் நடித்தார். அதனையடுத்து மூன்று ஆஸ்கர் பரிந்துரைகளும் வந்தன (ரெட்ஸ் , ப்ரிஸி’ஸ் ஹானர் , அயர்ன்வீட் படங்களுக்காக).

விட்னஸ் படத்தில் ஜான் புக் வேடத்தினை நிக்கல்சன் மறுத்து விட்டார்.[14] நிக்கல்சன் வெறிபிடித்த கொலைகாரராகவும் வில்லனாகவும் நடித்த 1989 ஆம் ஆண்டின் பேட்மேன் திரைப்படமான தி ஜோக்கர் சர்வதேசரீதியாக பெரும் வெற்றி பெற்றது, சதவீத அடிப்படையில் நிக்கல்சன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தம் அவருக்கு சுமார் 60 மில்லியன் டாலர் ஈட்டிக் கொடுத்தது.

அமெரிக்க கடற் படைப் பிரிவில் நடக்கும் ஒரு கொலை குறித்த திரைப்படமான எ ஃப்யூ குட் மென் (1992) திரைப்படத்தில் இவர் ஏற்றிருந்த முன்கோபமுடைய கர்னல் நாதன் ஆர்.ஜெஸப் வேடத்திற்காக, நிக்கல்சன் இன்னுமொரு அகாதமி பரிந்துரையை பெற்றார். இந்த படத்தில் பிரபலமான ஒரு நீதிமன்ற காட்சி வரும், அதில் “உங்களால் உண்மையைக் கையாள முடியாது!” என்று நிக்கல்சன் உரக்கக் கத்துவார், அரோன் ஸோர்கின் எழுதிய மனவசனங்களில் ஒன்றான இது வெகுஜனக் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாய் ஆனது.

1996 ஆம் ஆண்டில், மார்ஸ் அட்டாக்ஸ்! திரைப்படத்தில் பேட்மேன் இயக்குநரான டிம் பர்டன் உடன் நிக்கல்சன் மீண்டுமொரு முறை இணைந்து பணியாற்றினார். இதில் ஜனாதிபதி ஜேம்ஸ் டேல் மற்றும் லாஸ் வேகாஸ் கட்டிட நிறுவன அதிபர் ஆர்ட் லேண்ட் ஆகிய இரண்டு வேறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரட்டைப் பொறுப்பை முடித்தார். முதலில் நிக்கல்சனின் பாத்திரத்தை கொல்லும் யோசனை வார்னர் பிரதர்ஸ் ஸ்டுடியோ நிர்வாகிகளுக்கு பிடிக்காதிருந்தது, எனவே இரண்டு பாத்திரங்களை உருவாக்கிய பர்டன் இருவரையுமே கொன்று விட்டார்.

நிக்கல்சனின் நடிப்பு எல்லாமே நல்ல வரவேற்பை பெற்றதாய் சொல்ல முடியாது. மேன் ட்ரபுள் (1992) மற்றும் ஹோஃபா (1992) ஆகிய திரைப்படங்களுக்காக மோசமான நடிகருக்கான ராஸி விருதுகளுக்கும் இவர் பரிந்துரை செய்யப்பட்டார். ஆனாலும், ஹோஃபா படத்தில் நிக்கல்சனின் நடிப்பு அவருக்கு கோல்டன் குளோப் பரிந்துரையையும் பெற்றுத் தந்தது.

மீண்டும் ஜேம்ஸ் எல்.ப்ரூக்ஸ் இயக்கிய அஸ் குட் அஸ் இட் கெட்ஸ் (1997) காதல்காவியத்தில், மெல்வின் உடால் என்கிற அப்செஸிவ் கம்பள்ஸிவ் டிஸார்டர் (OCD) பாதிப்பு கொண்ட ஒரு முன்கோப எழுத்தாளராக நடித்தார், இந்த வேடத்திற்காக சிறந்த நடிகருக்கான அடுத்த அகாதமி விருதினை நிக்கல்சன் வென்றார். நிக்கல்சனின் ஆஸ்கர் ஹெலன் ஹன்ட்டுக்கு கிடைத்த சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுடன் பொருத்தப்பட்டது, அதில் மன்ஹாட்டன் வெய்ட்ரஸாக அவர் நடித்திருந்தார், இப்படத்தில் இவர் வேலை பார்க்கும் உணவகத்தில் அடிக்கடி சாப்பிட வரும் உடால் உடன் இவருக்கு காதல்/வெறுப்பு நட்பு தோன்றும்.

2001 ஆம் ஆண்டில், “நடிப்பு மற்றும் நேர்மையின் உச்சங்களை தொட்டதற்காக” மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்டானிஸ்லேவ்ஸ்கி விருதினை பெறும் முதல் நடிகராக நிக்கல்சன் ஆனார்.

நிக்கல்சன் ஒரு தீவிர விளையாட்டு ரசிகர். கூடைப்பந்து விளையாட்டுகளில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேகர்ஸ் அணிக்கான ஆதரவு இருக்கைகளில் அவரை எப்போதும் காணமுடியும். 1999 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் அரட்டை நிகழ்ச்சியான பார்கின்சனில் தோன்றி பேசிய இவர், தான் ஒரு “ஆயுள்கால மான்செஸ்டர் யுனைடெட் விசிறி” என்று தன்னை விவரித்தார்.

Remove ads

சமீபத்திய வருடங்கள்

எபவுட் ஸ்கிமிடிட் (2002) திரைப்படத்தில் நிக்கல்சன், தனது மனைவியின் மரணத்திற்குப் பிறகு தனது சொந்த வாழ்க்கையையே கேள்விக்குட்படுத்தும் நெப்ராஸ்கா, ஒமாஹாவில் குமாஸ்தாவாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஒரு அதிகாரியாக நடித்தார். அமைதியாக, ஆர்ப்பாட்டமில்லாமல் இருந்த அவரது நடிப்பு அவரது முந்தைய பல வேடங்களுக்கு மாறுபட்டு அமைந்ததோடு அவருக்கு சிறந்த நடிகருக்கான அகாதமி விருது பரிந்துரையையும் பெற்றுத் தந்தது. ஏங்கர் மேனேஜ்மெண்ட் காமெடித் திரைப்படத்தில், அதீத சாந்தவாதியாக இருக்கும் ஆடம் சாண்ட்லருக்கு உதவியாக வரும் மூர்க்கமான வைத்தியர் வேடத்தில் நடித்திருந்தார். 2003 ஆம் ஆண்டில், சம்திங்’ஸ் காட்ட கிவ் படத்தில், தனது இளம்வயது பெண்நண்பியின் தாயிடம் (டியான் கீடன்) மயங்கும் வயதாகும் பிளேபாய் வேடத்தில் இவர் நடித்தார். 2006 இன் பிற்பகுதியில், “இருண்ட பகுதிக்கு” மீண்டும் திரும்புவதன் அடையாளமாக ஃபிராங்க் காஸ்டெலோ வேடத்தில் நிக்கல்சன் நடித்தார், ஆண்ட்ரூ லௌ’வின் இன்ஃபர்னல் அஃபெர்ஸ் திரைப்படத்தின் ஒரு ரீமேக்கான மார்ட்டின் ஸ்கோஸெஸெ’யின் ஆஸ்கர் வென்ற தி டிபார்டட் திரைப்படத்தில் மாட் டமோன் மற்றும் லியோனார்டோ டிகேப்ரியோவுக்கு தலைமையில் இருக்கும் ஒரு துன்புறுத்தி இன்பம் காணும் குணம் படைத்த பாஸ்டன் ஐரிஷ் கும்பல் தலைவரின் பாத்திரம் இது.

நவம்பர் 2006 இல், நிக்கல்சன் தனது அடுத்த படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். ராப் ரெய்னரின் தி பக்கெட் லிஸ்ட் என்னும் இத்திரைப்படத்தின் பாத்திரத்திற்காக இவர் தனது தலையை மொட்டையடித்துக் கொண்டார். இப்படத்தில் தங்களின் இலக்குகள் பட்டியலை பூர்த்தி செய்கிற இறந்து கொண்டிருக்கும் மனிதர்களின் வேடத்தில் நிக்கல்சனும் மோர்கன் ஃப்ரீமேனும் நடித்திருந்தனர். இந்த படம் டிசம்பர் 25, 2007 (எல்லைக்குள்) மற்றும் ஜனவரி 11, 2008 (பரவலாய்) அன்று வெளியானது. இந்த பாத்திரத்திற்காக ஆய்வு செய்வதற்கு, லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்ட நிக்கல்சன், கேன்சர் நோயாளிகள் எவ்வாறு தங்கள் நோயை ஏற்றுக் கொள்கிறார்கள் என்று ஆய்வு செய்தார்.

Remove ads

சொந்த வாழ்க்கை

மிச்செல் பிலிப்ஸ், பெபெ ப்யுவல், மற்றும் லாரா ஃப்ளின் பாய்ல் உள்பட ஏராளமான நடிகைகள் மற்றும் மாடல்களுடன் இவரை காதல் தொடர்புபடுத்தி செய்திகள் வெளியாகியுள்ளன. திரைப்பட இயக்குநர் ஜான் ஹஸ்டனின் மகளான நடிகை ஏஞ்சலிகா ஹஸ்டன் உடன் 1973 முதல் 1989 வரை 16 வருடங்கள் இருந்த உறவு தான் நிக்கல்சனின் நெடிய உறவாய் அமைந்தது. ஆயினும், ரெபெக்கா ப்ரௌஸார்ட் நிக்கல்சனின் குழந்தையை சுமப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த உறவு முடிவுக்கு வந்தது. நிக்கல்சனுக்கும் பிரௌஸார்டுக்கும் இரண்டு பிள்ளைகள்: லோரெய்ன் நிக்கல்சன் (பிறப்பு 1990) மற்றும் ரேமண்ட் நிக்கல்சன் (பிறப்பு 1992). ஜெனிபர் நிக்கல்சன் (1963 ஆம் ஆண்டில் சாண்ட்ரா நைட்டுக்கு பிறந்தார்) மற்றும் ஹனி ஹோல்மேன் (1981 ஆம் ஆண்டில் வின்னி ஹோல்மேனுக்கு பிறந்தார்) ஆகியவை ஜேக்கின் பிற பிள்ளைகள் ஆவர். நடிகை சூஸன் ஆன்ஸ்பேக் தனது பையன் கலெப் கோடார்ட் (பிறப்பு 1970) ஜேக்கிற்கு பிறந்தவன் தான் என்று கூறியிருக்கிறார். ஆனால் ஜேக் இந்த குற்றச்சாட்டு குறித்து இதுவரை எந்த பொது அறிக்கைகளும் வெளியிட்டதில்லை.[15]

பெவர்லி ஹில்ஸ், முல்ஹோலண்ட் ட்ரைவ் பகுதியில் பல வருடங்களுக்கு மர்லன் பிராண்டோவின் அடுத்த வீட்டில் நிக்கல்சன் வசித்தார். வாரன் பீட்டியும் அருகில் தான் வசித்துக் கொண்டிருந்தார், இதனால் இந்த பாதையே “பேட் பாய் டிரைவ்” என அழைக்கப்பட்டது. பிராண்டோ 2004 இல் உயிர்நீத்த பின், தனது பக்கத்து வீட்டுக்காரரின் பங்களாவை 6.1 மில்லியன் டாலருக்கு வாங்கிய நிக்கல்சன், அதனை இடித்து விடும் நோக்கம் கொண்டிருந்தார். பிராண்டோ மீதுள்ள மரியாதையின் காரணமாக அவ்வாறு செய்வதாகக் கூறிய நிக்கல்சன், இந்த “பாழடைந்த” கட்டிடம் புதுப்பிக்க முடியாத அளவுக்கு மிகவும் செலவுவைப்பதாய் ஆகி விட்டதாய் தெரிவித்தார்.[16]

நிக்கல்சன் நியூயார்க் யாங்கீஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேகர்ஸ் அணிகளின் ரசிகராவார். லேகர்ஸ் விளையாட்டுகளில் அவர் பங்குபெறுவது மரபாகி விட்டது, 1970 ஆம் ஆண்டு முதல் சீசன் டிக்கெட் வைத்திருக்கிறார், தி ஃபோரம் மற்றும் தி ஸ்டேபிள்ஸ் சென்டர் இரண்டிலுமே கடந்த இருபத்தியைந்து வருடங்களாய் சீசன் டிக்கெட்டுகள் வைத்திருப்பதால் அதிக ஆட்டங்களை அவர் தவற விட்டதில்லை. சில சந்தர்ப்பங்களில், விளையாட்டு நிர்வாகிகள் மற்றும் எதிரணி வீரர்களுடன் வாதத்தில் இறங்கியதும், மைதானத்திற்குள்ளேயே இறங்கி சென்றதுமேயான சம்பவங்களும் உண்டு.[17] லேகர்ஸ் ஆட்டங்களை தவறவிட அவர் விடாப்பிடியாய் மறுத்து விடுவார் என்பதால் ஸ்டுடியோக்கள் கூட லேகர்ஸ் ஆட்ட அட்டவணைக்கேற்றவாறு படப்பிடிப்பை மாற்றி வைத்துக் கொள்ள வேண்டும்.[17][18]

ஸ்காட்டிஷ் ஓவியர் ஜேக் வெட்ரியானோவின் படைப்புகள் உட்பட இருபதாம் நூற்றாண்டு மற்றும் சமகால கலைப் பொருட்களை சேகரிப்பதில் நிக்கல்சனுக்கு ஆர்வமுண்டு.[19]

தனது அரசியல் கருத்துகள் குறித்து அவர் அதிகமாய் வெளியில் காட்டிக் கொள்வதில்லை என்றாலும், ஆயுள்காலம் முழுவதும் தான் ஜனநாயகக் கட்சி ஆதரவாளராகவே அவர் தன்னை கருதியிருக்கிறார்.[20] பிப்ரவரி 4, 2008 இல் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான போட்டியில் செனட்டர் ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாய் அவர் கையெழுத்திட்டார்.[21] ரிக் டீஸ்’ ரேடியோ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் நிக்கல்சன் இவ்வாறு தெரிவித்தார்: “திருமதி. கிளிண்டன் சுகாதார பராமரிப்பு முதல், சிறை சீர்திருத்தம், ராணுவத்திற்கு உதவுவது, பெண்கள் மற்றும் அமெரிக்கர்களுக்காக பேசுவது என எல்லா விஷயங்களிலுமே தன்னுடைய ஈடுபாட்டை வெளிப்படுத்தி வந்திருக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இத்தோடு, அழகிய பின்புறத்துடனான ஒரு ஜனாதிபதி நமக்கு வர வேண்டிய நேரமிது.”

வரலாறு, பெண்கள், மற்றும் கலைகளுக்கான கலிபோர்னியா வரலாற்று அருங்காட்சியகத்தில் அமைந்திருக்கும் கலிபோர்னியா பெருமைமிகு கலைகூடத்தில் நிக்கல்சன் அழைக்கப்படுவார் என்று மே 28, 2008 இல் கலிபோர்னியா ஆளுநர் அர்னால்டு சுவார்ஸ்னேகர் மற்றும் முதல் குடிமகள் மரியா ஷ்ரெவர் அறிவித்தனர். சேர்ப்பு விழா டிசம்பர் 15, 2008 அன்று நடந்தது. மற்ற பழம்பெரும் கலிபோர்னியாவாசிகளுடன் இவரும் இக்கவுரவ பொறுப்பில் இடம்பிடித்தார்.

Remove ads

அகாதமி விருதுகள் வரலாறு

Thumb
கிராமேன் சைனீஸ் தியேட்டரில் ஜேக் நிக்கல்சனின் காலடித் தடங்கள் மற்றும் கைத்தடங்கள்.

12 பரிந்துரைகளுடன் (சிறந்த நடிகருக்கு எட்டு, சிறந்த துணை நடிகருக்கு நான்கு) ஜேக் நிக்கல்சன் அகாதமி விருதுகள் வரலாற்றில் அதிக பரிந்துரைகள் பெற்ற நடிகராய் திகழ்கிறார். நிக்கல்சனும் மைக்கேல் கேய்னும் மட்டுமே நடிப்புக்காக 1960கள், 1970கள், 1980கள், 1990கள், மற்றும் 2000கள் [சான்று தேவை] என ஐந்து வெவ்வேறு பதினாண்டுகளில் அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட பெருமை கொண்டிருக்கின்றனர். மூன்று ஆஸ்கர் விருதுகளுடன், நடிப்பு பிரிவில் அதிக ஆஸ்கர் விருதுகளை வென்றவர்கள் வரிசையில் வால்டர் பிரெனன் உடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார் (பிரெனனின் வெற்றிகள் அனைத்துமே சிறந்த துணை நடிகர் பிரிவில் கிட்டியவை).

79வது அகாதமி விருதுகள் நிகழ்ச்சியில், தி பக்கெட் லிஸ்ட் படத்தில் தனது பாத்திரத்திற்காக நிக்கல்சன் தனது தலைமுடியை முழுமையாய் மொட்டையடித்துக் கொண்டிருந்தார். சிறந்த படத்திற்கான அகாதமி விருதினை அந்த விழாக்களில் வழங்குவது அவருக்கு ஏழாவது முறை (1972, 1977, 1978, 1990, 1993, 2006, மற்றும் 2007).[22]

நிக்கல்சன் இந்த அகாதமியின் செயல்பாட்டு மற்றும் வாக்களிப்பு உறுப்பினராய் இருக்கிறார். கடந்த பதினாண்டில், பரிந்துரைக்கப்பட்டாலும் இல்லையென்றாலும், ஒவ்வொரு விருதுவழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றிருக்கிறார்.

Remove ads

திரை சரிதம்

மேலதிகத் தகவல்கள் திரைப்படம், பாத்திரம் ...
Remove ads

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads