ஜாதகம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜாதகம் என்பது 1953-ஆம் ஆண்டு ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், சூரியகலா, ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது ஒரே நேரத்தில் கன்னடத்தில் ஜாதகா பலா என்ற பெயரிலும், தெலுங்கில் ஜாதகபலம் என்ற பெயரிலும் தயாரிக்கப்பட்டது.
Remove ads
கதைச் சுருக்கம்
திருமணமான மூன்றே மாதங்களுக்குள் மணப்பெண் இறந்து விடவாள் என்று சிலர் கதைகட்டி விடுகின்றனர். இந்த வதந்தியால் ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் விளையாடுகிறார்கள். இதனால் ஏற்படும் சிக்கல்களில் இருந்து அப்பெண் எப்படி வெளிவருகிறாள் என்பதே கதை.
நடிப்பு
படத்தின் பாட்டுப் புத்தகத்தில் காணப்பட்ட தகவல்களைக் கொண்டு உருவாக்கபட்ட பட்டியல்[3]
எஸ். ஜி. சுப்பையா, கல்யாணம், சி. வி. ராமச்சந்திரன் |
|
Remove ads
தயாரிப்பு
இப்படம் ஒரே நேரத்தில் கன்னடத்தில் ஜாதகா பலா என்றும் தெலுங்கில் ஜதகபலம் என்றும் உருவாக்கப்பட்டது.[4] படத்தை ஆர். நாகேந்திர ராவ். தயாரித்து இயக்கினார். திரைக்கதை, உரையாடலை டி. எம். வி. பதி எழுதினார். யூசுப் முல்ஜி ஒளிப்பதிவு செய்ய, எஸ். சூர்யா படத்தொகுப்பு செய்தார். கலை இயக்கத்தை ஏ. பாலு மேற்கொண்டார். வழுவூர் பி. இராமையா பிள்ளை மற்றும் ஜெய்சங்கர் நடனத்தை அமைத்தனர். படச்சுருள்கள் மேம்பாடு ஏவிஎம் ஆய்வகத்தில் செய்யயபட்டது.[2]
பாடல்
இப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுக்கான வரிகளை டி. கே. சுந்தர வாத்தியார் எழுதினார், ஆர். கோவர்த்தனம் இசையமைத்துள்ளார். சிந்தனை என் செல்வமே பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு பாடகராக பி. பி. ஸ்ரீனிவாஸ் அறிமுகமானார்.[5][4]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads