ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜான் எஃப். கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையம் (John F.Kennedy International Airport) (IATA: JFK, ICAO: KJFK, FAA LID: JFK) நியூயார்க்கின் குயீன்ஸ் பரோவில் தென் மன்ஹாட்டனிலிருந்து 12 மைல்கள் (19 km)தொலைவில் அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையமாகும். 2010ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மிகுந்த பன்னாட்டுப் பயணிகள் போய்வரும் நுழைமுகமாக விளங்கியது. வட அமெரிக்காவின் பிற எந்த வானூர்தி நிலையத்தைவிட கூடுதலான பன்னாட்டுப் போக்குவரத்தை கையாண்டது.[4] இதுவே அந்நாட்டின் சரக்குப் போக்குவரத்திலும் கூடுதலான மதிப்புள்ள சரக்குகளை கையாண்ட நிலையமாக விளங்குகிறது.[5] 2010இல் இந்த வானூர்தி நிலையம் வழியே 46,514,154 பயணிகள்[2] பயணித்து உலகின் 14வது நெருக்கமிகுந்த நிலையமாகவும் அமெரிக்காவின் ஆறாவது நெருக்கமிகுந்த வானூர்தி நிலையமாகவும் விளங்குகிறது. நியூயார்க் பெருநகர பகுதியில் அமைந்துள்ள ஜேஎஃப்கே, லாகார்டியா மற்றும் நியூவர்க் வானூர்தி நிலையங்கள் மூன்றும் இணைந்து ஐக்கிய அமெரிக்காவின் மிகப்பெரும் வானூர்தி நிலைய அமைப்பை உருவாக்கியுள்ளன. இந்த அமைப்பு பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இரண்டாவது நெருக்கம் மிகுந்த வானூர்தி நிலையமாகவும் மொத்த வான்பயண இயக்கங்களைக் கொண்டு முதலாவதாகவும் .உள்ளது.

Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads