ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன்
மொழியியல் அறிஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜார்ஜ் ஆபிரகாம் கிரியெர்சன் (George Abraham Grierson, 7 சனவரி 1851 – 9 மார்ச் 1941) ஒரு பிரித்தானிய மொழியியல் அறிஞரும், குடிசார் சேவை அலுவலரும் ஆவார். 1898 - 1928 காலப்பகுதியில் செய்யப்பட்ட இந்திய மொழியியல் ஆய்வு இவரால் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் இந்தியாவில் உள்ள 364 மொழிகள், கிளைமொழிகள் என்பவை குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.
Remove ads
வரலாறு
இவர் டப்ளின் கவுன்டியில் உள்ள கிளெனாகியரி என்னும் இடத்தில் பிரந்தார். இவரது தந்தையும் பாட்டானாரும் டப்ளினில் பலருக்கும் தெரிந்த அச்சக உரிமையாளர்களும், பதிப்பாளர்களும் ஆவர். கிரீர்சன் 1871 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமைப் பணிக்கான தேர்வில் திறமையாகச் சித்தி பெற்றார். அவர் டப்ளினில் இருந்த இரண்டாண்டுத் தகுதிகாண் காலத்தில், டிரினிட்டியில், சமசுக்கிருதத்திலும், இந்துஸ்தானியிலும் பரிசுகளை வென்றார்.[1] 1873ல் இந்தியாவில் வங்காள மாநிலத்தை அடைந்தார். முதலில் இவர் பீகாரில் உள்ள பாங்கிப்பூரில் பணியில் அமர்த்தப்பட்டார். இதிலிருந்து, பாட்னாவில் குற்றவியல் நீதிமானாகவும், மாவட்ட ஆட்சியராகவும் உயர்ந்தார். பின்னர் பீகாருக்கான கஞ்சா முகவராகவும் பதவி வகித்தார். 1898 ஆம் ஆண்டில் இவர் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய மொழியியல் ஆய்வகத்தின் கண்காணிப்பாளரானார். இதன் பொருட்டு, ஐரோப்பிய அறிஞர்களின் ஆலோசனைகளைப் பெறுவதற்கும், நூலக வசதிகளுக்காகவும் இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.[2] கிரியெர்சன் 1903ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றபோது பெரும்பாலான தரவுகள் சேகரிக்கப்பட்டுவிட்டன. இதற்குப் பிந்திய 30 ஆண்டுகளையும் சேகரித்த தரவுகளைத் தொகுப்பதில் செலவிட்டார்.[1]
கிரியெர்சன் பல புலமை சான்ற ஆக்கங்களை எழுதி வெளியிட்டுள்ளார். பீகாரின் குடியானவர்கள் வாழ்க்கை, அவர்களது கிளைமொழிகள், இந்தி இலக்கியம், பக்தி, மொழியியல் போன்ற பல விடயங்கள் தொடர்பில் இவரது ஆய்வுகள் அமைந்தன. இவருக்கு அத்துவைத வேதாந்தத்தின்பால் அதிகம் விருப்பு இருக்கவில்லை. இதை அவர் பண்டிதர்களுக்கான சமயம் எனக் கருதியதுடன் நாட்டுப்புறத்துப் பக்தி வழியின்பால் அவருக்கு விருப்பம் இருந்தது.[3] கிரியெர்சனின் பிந்திய ஆக்கங்கள் மொழியியல் தொடர்பானவையாகவே இருந்தன.
கிரியெர்சன் 1928ல் இங்கிலாந்தின் சரேயில் உள்ள கம்பெர்லியில் காலமானார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads