ஜீவா (திரைப்பட இயக்குநர்)
தமிழ்த் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜீவா, (பிறப்பு 21 செப்டம்பர் 1963, இறப்பு 25 ஜூன் 2007)இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இயக்குநர் ஆவார்.
இவர் பல இளம் நடிகர்களை அறிமுகப்படுத்தியும் உள்ளர். ஷாம், ஆர்யா, வினய், அசின், தனிஷா(தமிழில்) ஆகியோர் இவரின் அறிமுகங்களே. இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை தனது படங்களுக்கு பயன்படுத்தும் இவர் பல சிறந்த இசை வெளியீடுகளையும் வெளியிட்டுள்ளார் (12B, உள்ளம் கேட்குமே, உன்னாலே உன்னாலே). இவர் ரஷ்யாவில் மாரடைப்பினால் 44 ஆவது வயதில் மரணமடைந்தார்.
Remove ads
திரைப்படங்கள்
இயக்குநராக
- 2001 12 பி
- 2003 ரன் (ஹிந்தி)
- 2005 உள்ளம் கேட்குமே
- 2007 உன்னாலே உன்னாலே
- 2008 தாம் தூம் - முடிவடையவில்லை.
ஒளிப்பதிவாளராக
- 1993 ஜென்டில்மேன்
- 1994 காதலன்
- 1995 ஆசை
- 1996 இந்தியன்
- 1997 உல்லாசம்
- 1999 வாலி
- 2000 குஷி
- 2000 சிநேகிதியே
- 2001 12 பி (திரைப்படம்)
- 2002 ரன்
- 2005 சச்சின்
- 2005 உள்ளம் கேட்குமே
- 2005 சண்டக்கோழி
- 2007 உன்னாலே உன்னாலே
- 2008 தாம் தூம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads