சச்சின் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சச்சின் (Sachein) 2005-ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஜான் மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ஜெனிலியா, வடிவேலு, ரகுவரன் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்தவர் தேவி ஸ்ரீ பிரசாத் ஆவார். இது 2002-இல் வெளியான நீத்தோ தெலுங்குத் திரைப்படத்தின் மறுஆக்கம் ஆகும்.[2][3]
Remove ads
நடிகர்கள்
- விஜய் - சச்சின்
- ஜெனிலியா - சாலினி (கனிகாவின் பின்னணிக் குரல்)
- பிபாசா பாசு - மஞ்சு
- வடிவேலு - (அர்னால்டு)
- சந்தானம் - சந்தானம்
- ரகுவரன் - கௌதம், சச்சினின் தந்தை
- தலைவாசல் விஜய் - பிரீத்தியின் தந்தை
- தாடி பாலாஜி - பாலாஜி
- சாம்ஸ் - சுவாமிநாதன்
- மோகன் சர்மா - சாலினியின் தந்தை
- குழந்தை சார்மி - பிரீத்தி
- மயில்சாமி - கண்தெரியாதவர் போல நடிப்பவர்
வெளியீடு
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு 2005 ஏப்ரல் 14 அன்று வெளியான இத்திரைப்படம், இரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி, கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற திரைப்படங்களுடன் வெளிவந்தது. பின்னர் யூடியூப்பிற்காக இந்தியில் கமண்டி என்று மொழிமாற்றம் செய்யப்பட்டது.[4]
சந்தைப்படுத்துதல்
படத்தின் விளம்பரத்தில் ஈடுபட்ட ஐ. டி. சி லிமிடெட், படத்திலிருந்து விஜயின் சில படங்களைக் கொண்ட ஒரு சிறப்பு விளம்பரத்தை அறிமுகப்படுத்தியது.[5]
மறுவெளியீடு
2025 பிப்ரவரி 11 அன்று, கலைப்புலி எஸ். தாணு படம் வெளியான 20 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் கோடையில் மீண்டும் வெளியிடப்படுவதாக அறிவித்தார்.[6] இப்படம் 20 ஆண்டுகள் கழித்து, அதன் அசல் வெளியீட்டிற்குப் பிறகு 2025 ஏப்ரல் 18 அன்று உலகளவில் மீண்டும் வெளியிடப்பட்டது.[7]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads