ஜூலியானா (நெதர்லாந்து)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜூலியானா (டச்சு ஒலிப்பு: [ˌjyliˈjaːnaː]; Juliana Louise Emma Marie Wilhelmina; 30 ஏப்ரல் 1909 – 20 மார்ச் 2004) நெதர்லாந்து அரச குடும்பத்தில் ஒருவர் ஆவார். 1948 முதல் 1980 வரை இவர் நெதர்லாந்து நாட்டின் அரசியாக இருந்தார்.[1][2]
ஜூலியானா நெதர்லாந்து நாட்டின் ராணி வில்ஹெல்மினா மற்றும் இளவரசர் ஹென்றியின் ஒரே மகள் ஆவார். பிறப்பிலிருந்தே நெதர்லாந்தின் அரியணை வாரிசாக அறியப்பட்டவர். தனிப்பட்டமுறையில் இவருக்கு கல்வி வழங்கப்பட்டது. 1937 ஆம் ஆண்டு இளவரசர் பெர்ன்ஹார்டை மணந்தார். இவர்களுக்கு பீட்ரிக்ஸ், ஐரீனி, மார்கரீட், கிறிஸ்டினா என்ற நான்கு குழந்தைகள்.
அரசி ஜூலியானா கிட்டத்தட்ட 32 ஆண்டுகளாக ஆட்சி செய்தார். இவரது ஆட்சிக்காலத்தில் டச்சு கிழக்கிந்திய பகுதிகளான இந்தோனேசியா மற்றும் சூரினாம் நாடுகளில் காலனியாதிக்கம் முடிவுக்குவந்தது. இவர் உலகிலேயே மிக நீண்ட காலமாக வாழ்ந்த முன்னாள் அரசி ஆவார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads