ஜெகத் பிரகாஷ் நட்டா
பாரதிய ஜனதா கட்சியின் 11வது மற்றும் தற்போதைய தலைவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜெகத் பிரகாஷ் நட்டா (Jagat Prakash Nadda) (பிறப்பு: 2 டிசம்பர் 1960), பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார். இவர் பாசகவின் தேசியத் தலைவர் ஆவார்.2014 நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவையில்
சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சராக இருந்தவரும்[1] மற்றும் இமாச்சலப் பிரதேசத்திலிருந்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரும், பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும் ஆவார்.[2]
முன்னர் இவர் இமாச்சலப் பிரதேச மாநில அரசில் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சராக இருந்தவர்.[3]
Remove ads
பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவராக
ஜெகத் பிரகாஷ் நட்டா 17 சூன் 2019 அன்று பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய தேசியச் செயல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]
பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக
ஜெ. பி. நட்டா 20 சனவரி 2020 அன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads