இந்தியக் குடியரசின் 16வது அமைச்சரவை

From Wikipedia, the free encyclopedia

இந்தியக் குடியரசின் 16வது அமைச்சரவை
Remove ads

நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை அல்லது 2014 இந்தியாவின் மத்திய அமைச்சரவை, ஒன்பது கட்டங்களாக ஏப்ரல் 7 முதல் மே 12, 2014 வரை நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து பதவியேற்ற அமைச்சரவையாகும். மே 16, 2014 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பதினாறாவது மக்களவை அமைக்கப்பட்டது. இந்த மக்களவையின் பெரும்பான்மை விருப்பத்தைப் பெற்ற நரேந்திர மோதி 15வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் இவரது அமைச்சர்களும் மே 26, 2014 அன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பல துறைகளை ஒருங்கிணைத்து 71 பேர் கொண்ட முந்தைய அமைச்சரவைக்கு மாறாக 45 பேர் அடங்கிய அமைச்சரவை "சிறிய அரசு சிறப்பான அரசாண்மை" என்ற முழக்கத்துடன் பதவியேற்றது.[1]

விரைவான உண்மைகள் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை, உருவான நாள் ...
Thumb
நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை உறுப்பினர்கள், மே, 2014, ராஷ்டிரபதி பவன்
Remove ads

அமைச்சரவை

  1. நரேந்திர மோடி - பிரதமர், அணுசக்தி, விண்வெளி துறை,

ஒன்றிய ஆய அமைச்சர்

  1. ராஜ்நாத் சிங் - உள்துறை,
  2. சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை,
  3. அருண் ஜெட்லி - நிதி
  4. நிர்மலா சீத்தாராமன்-பாதுகாப்பு,
  5. வெங்கையா நாயுடு - பார்லி., விவகாரம் மற்றும் ஊரக வளர்ச்சி ,
  6. நிதின் கட்காரி - கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
  7. சதானந்த கவுடா - ரயில்வே,
  8. உமா பாரதி - நீர்வளத்துறை,
  9. நஜ்மா ஹெப்துல்லா - சிறுபான்மையினர் நலத்துறை
  10. - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் குடிநீர்
  11. இராம் விலாசு பாசுவான் - உணவு மற்றும் நுகர்பொருள்
  12. கல்ராஜ் மிஸ்ரா - சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்
  13. மேனகா காந்தி - மகளிர் மற்றும் குழந்தைகள் நலம்
  14. அனந்த குமார் - இரசாயனம் மற்றும் உரத்துறை
  15. இரவி சங்கர் பிரசாத் -சட்டம் மற்றும் தகவல், தொலைதொடர்புத்துறை
  16. புசாபதி அசோக் கசபதி ராசு - விமானத்துறை
  17. ஆனந்து கீத்தே - கனரக தொழிற்சாலை மற்றும் பொதுததுறை நிறுவனங்கள்
  18. அர்சிம்ரத் கவுர் பாதல் - உணவு பதப்படுத்துதல்,
  19. நரேந்திர சிங் தோமர் - சுரங்கம் மற்றும் உருக்கு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
  20. ஜூவல் ஓரம் - பழங்குடியினர் நலத்துறை
  21. இராதா மோகன் சிங் - வேளாண்துறை
  22. தவார் சந்த் கெலாட் - சமூக நீதி மற்றும் மேம்பாடு.
  23. இசுமிருதி இரானி - மனிதவள மேம்பாட்டுத்துறை
  24. ஜெகத் பிரகாஷ் நட்டா - சுகாதாரத்துறை

நடுவண் (மத்திய) இணை அமைச்சர் (தனி பொறுப்புகளுடன்)

  1. ஜெனரல் வி.கே. சிங் - வடகிழக்கு மாநில மேம்பாடு,
  2. இந்தர்ஜித் சிங் ராவ் - திட்டம் மற்றும் புள்ளியியல் துறை,
  3. சந்தோஷ் காங்வார் - டெக்ஸ்டைல்ஸ்,
  4. ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் - சுற்றுலா மற்றும் கலாச்சாரம்,
  5. தர்மேந்திர பிரதான் - பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு,
  6. சர்பானந்த சோனாவால் - விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் ,
  7. பிரகாஷ் ஜவடேகர் - தகவல் மற்றும் தொலை தொடர்பு ,
  8. பியுஷ் கோயல் - மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை,
  9. ஜிதேந்திர சிங் - பிரதமர் அலுவலக அமைச்சர் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

நடுவண் (மத்திய) இணை அமைச்சர்

  1. சித்தேஸ்வரா - விமான போக்குவரத்து அமைச்சகம்
  2. மனோஜ் சின்கா - ரயில்வே அமைச்சகம்
  3. நிஹல்சந்திரா - உரம் மற்றும் ரசாயன அமைச்சகம்
  4. உபேந்திரா குஷ்வாஹா - ஊரக மேம்பாடு, பஞ்சாயத்து ராஜ்
  5. பொன். இராதாகிருஷ்ணன் - கனரக தொழில்துறை அமைச்சகம்
  6. கிரண் ரிஜிஜு - உள்துறை அமைச்சகம்
  7. கிரிஷன் பால் - கப்பல், சாலை போக்ககுவத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
  8. சஞ்ஜீவ் குமார் பல்யான் - வேளாண்துறை மற்றும் உணவு பதப்படுத்துதல் அமைச்சகம்
  9. மன்சுக்பாய் தான்ஜிபாய் வாசவா - பழங்குடியினர் நல அமைச்சகம்
  10. ராவ்சாஹிப் ததாராவ் தான்வி - நுகர்வோர் மற்றும் உணவு மற்றும் பொஆது பங்கீடு அமைச்சகம்
  11. விஷ்ணு தியோ சாய் - சுரங்கம், உருக்கு மற்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாயப்பு அமைச்சகம்
  12. ராம்தாஸ் அதவாலே - சமூக நீதி மற்றும் மற்றும் அதிகாரமளிக்கும் அமைச்சகம்
  13. வீரேந்திர குமார் காதிக் - மகளிர் & குழந்தைகள் நல அமைச்சகம் (3 செப்டம்பர் 2017 – 24 மே 2019)
Remove ads

இதனையும் காண்க

மேற்சான்றுகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads