ஜெயப்பிரகாஷ் மல்லா

From Wikipedia, the free encyclopedia

ஜெயப்பிரகாஷ் மல்லா
Remove ads

ஜெயப்பிரகாஷ் மல்லா (Jaya Prakash Malla) (நேபாளி: जयप्रकाश मल्ल) (இறப்பு: 1768) காத்மாண்டு சமவெளியில் அமைந்த காட்மாண்டு நாட்டை 1736 - 1746 மற்றும் 1750 - 1768 ஆகிய காலகட்டங்களில் ஆண்ட மல்ல வம்சத்தின் இறுதி மன்னர் ஆவார். மல்லர் வம்சத்தினர் நேவார் மக்கள் ஆவார்.

விரைவான உண்மைகள் ஜெயப்பிரகாஷ் மல்லா, பிறப்பு ...
Thumb
காட்மாண்டு சதுக்கம், முக்கியப் போர் நடைபெற்ற இடம்

கூர்க்காலிகளின், ஷா வம்ச மன்னரான பிரிதிவி நாராயணன் ஷா, கிபி 1768ல் காட்மாண்டுப் போரில் காத்மாண்டு இராச்சியத்தின் இறுதி மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவை வீழ்த்தி, ஒன்றுப்பட்ட நேபாள இராச்சியத்தை நிறுவினார்.

மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லா, பத்ம சமூச்சயம் மற்றும் மூன்று நாடகங்களை இயற்றி நேபால் பாஷாவிற்கு புகழ் சேர்த்தவர்.[1]

Remove ads

வரலாறு

கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா 1746ல் நுவாகோட் போரில், மன்னர் ஜெயப்பிரகாஷ் மல்லாவின் படைத்தலைவர் காசிராம் தாபா தோற்று ஓடியதால், காசிராம் தாபாவிற்கு மரணதண்டனை விதித்தார்.[2][3][4][5]

1768ல் காட்மாண்டு நகரத்தின் மக்கள் இந்திர விழாவை சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத வகையில், கோர்க்கா நாட்டு மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் படைகள், காட்மாண்டு நகரத்தின் மீது படையெடுத்தனர். இதனால் காட்மாண்டு மன்னர் ஜெயப்பிரகாஷ், அண்டை நாடான லலித்பூர் நாட்டிற்கு தஞ்சம் அடைந்தார். இதனால் கோர்க்காப் படைகள் லலித்பூரை முற்றுகையிட்டது. கீர்த்திப்பூர் போரில் லலித்பூர் நாட்டை தாக்கினர். எனவே லலித்பூர் நாட்டு மன்னர் தேஜ் பிரகாஷ் நரசிம்ம மல்லாவும், ஜெயப்பிரகாஷ் மல்லாவும் சேர்ந்து, பக்தபூர் நாட்டில் தஞ்சம் அடைந்தனர். பக்தபூர் போரில் வென்ற கோர்க்காப் படைகளிடம் ஜெயப்பிரகாஷ் மல்லா, தேஜ் பிரகாஷ் நரசிம்ம மல்லா மற்றும் பக்தபூர் மன்னர் ரணஜித் மல்லா சரண் அடைந்தனர்.

ஜெயப்பிரகாஷ் மல்லா பசுபதிநாத்தில் தங்க வைக்கப்பட்டார். தேஜ் பிரகாஷ் நரசிம்ம மல்லா வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்பட்டார். ரண்ஜித் மல்லா வாரணாசிக்கு நாடு கடத்தப்பட்டார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads