பிரிதிவி நாராயணன் ஷா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிரிதிவி நாராயணன் ஷா (Prithvi Narayan Shah) [3]–1775; நேபாளி: श्री ५ वडामहाराजधिराज पृथ्वीनारायण शाह) ஷா வம்சத்து கோர்க்கா நாட்டின் இறுதி மன்னரும், ஒன்றிணைந்த நேபாள இராச்சியத்தின் முதல் பேரரசரும் ஆவார். ஒன்றிணைந்த நேபாளத்தை நிறுவியர் என்ற பெருமை இவருக்கு உண்டு. [4] மன்னர் நர பூபாள ஷாவின் மறைவிற்குப் பின், 1743ல் கோர்க்கா நாட்டின் மன்னராக தமது இருபதாவது அகவையில் முடி சூட்டப்பட்டார். இவர் திரவிய ஷாவிற்குப் பின்னர் ஷா வம்சத்தின் ஒன்பதாவது தலைமுறையாவார்.
Remove ads
கோர்க்கா நாட்டு மன்னராக
கோர்க்கா நாட்டின் மன்னர் நர பூபால ஷா - கௌசல்யாவதி தேவிக்கும் பிறந்த பிரிதிவி நாராயனன் ஷா ஆவார். மல்லர்களுடன் நடைபெற்ற போரில் நுவாகோட்டை இழந்த மனக்கவலையுடன் நாராயணன் ஷாவின் தந்தை நர பூபாள ஷா காலமானார். 1743ல், தமது இருபதாவது வயதில் பிரிதிவி நாராயணன் ஷா, கோர்க்கா நாட்டின் மன்னராக முடிசூட்டப்பட்டார்.
ஒன்றினைந்த நேபாள இராச்சியத்தை நிறுவுதல்
காட்மாண்டு மற்றும் கோர்க்காவிற்கு நடுவில் இருந்த நுவாகோட் பகுதி, திபெத்திற்கான முக்கிய வணிகப் பாதையும் ஆகும். நுவாகோட் நகரத்தை கிபி 1744ல் மல்ல வம்சத்தினரிடமிருந்து கைப்பற்றினார். 1756ல் திபெத்திற்கு செல்லும் கணவாய் பாதைகளை தன் கட்டுக்குள் கொண்டுவந்தார்.
பின் ஒன்றிணைந்த நேபாளத்தை நிறுவ, பிரிதிவி நாராயணன் ஷா மல்ல வம்சத்தின் ஜெயப்பிரகாஷ் மல்லா போன்றோருடன், 1767 முதல் 1769 முடிய நடைபெற்ற காட்மாண்டுப் போர், கீர்த்திப்பூர் போர், பக்தபூர் போர்களில் கீர்த்திபூர், லலித்பூர், காட்மாண்டு மற்றும் பக்தபூர் நகரங்களை பிரிதிவி நாராயணன் ஷா கைப்பற்றி காத்மாண்டு சமவெளியில் ஒன்றினைந்த நேபாள இராச்சியத்தை நிறுவினர்.
கீர்த்திப்பூர் போர்
காத்மாண்டு சமவெளியின் நேவார் படைகளுக்கும், மன்னர் நாராயணன் ஷா தலைமையிலான கோர்க்கா படையினருக்கும் இடையில், 1767ல் இப்போர் நடைபெற்றது. போரின் முடிவில் நேவார்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது. [5][6] கீர்த்திபூர் நகரம் உள்ளிட்ட அதனுடன் இணைந்த பிற பகுதிகள் முழுவதும் பிரிதிவி நாராயண் ஷாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[7]
காட்மாண்டு போர்
1768ல் நடைபெற்ற காட்மாண்டுப் போரில் [8] பிரிதிவி நாராயணன் ஷா, மல்ல நாடுகளான காட்மாண்டு மற்றும் லலித்பூர் மற்றும் பக்தபூர் மன்னர்களை வென்று அவர்களின் நாட்டையும் கைப்பற்றினார். [9]
பக்தபூர் போர்
1769ல் நடைபெற்ற பக்த போரின் முடிவில் மல்ல வம்சத்தின் இறுதி மன்னர்களான ஜெயப்பிரகாஷ் மல்லா போன்றவர்கள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டு, ஷா வம்சத்தின் ஒன்றிணைந்த நேபாள இராச்சியம் நிறுவப்பட்டது.
Remove ads
மறைவு
சனவரி, 1775ல் தமது 52வது அகவையில் பிரிதிவி நாராயணன் ஷா நுவாகோட் பகுதியின் தேவிகாட்டில் காலமானார்.
பிரிதிவி நாராயணன் ஷாவின் மூத்த மகன் பிரதாப் சிங் ஷா மற்றும் பேரன் ராணா பகதூர் ஷாவும் இணைந்து, குமாவுன், சிர்மூர், கார்வால், மொரங், சிக்கிம் மற்றும் டார்ஜிலிங் பகுதிகளைக் கைப்பற்றி நேபாள இராச்சியத்தை மேலும் விரிவாக்கினார்கள்.
மரபுரிமைப் பேறுகள்
நேபாள இராச்சியத்தை நிறுவிய பிரிதிவி நாராயணன் ஷாவின் 295ம் பிறந்த நாளை முன்னிட்டு, நேபாளத்தில் சனவரி, 11ம் நாளன்று நேபாள ஒற்றுமை நாள் ஆண்டுதோறும் கடைபிடிக்கிறது. [10][11][12]
படக்காட்சியகம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads