ஜேம்ஸ் இரத்தினம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜேம்ஸ் தேவதாசன் இரத்தினம் (James Thevathasan Rutnam, 13 சூன் 1905 - 4 நவம்பர் 1988) இலங்கை வரலாற்றாளரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார்.[1] ஈவ்லின் ரத்தினம் பண்பாடுகளிடை ஆய்வுகளுக்கான நிறுவனத்தை ஆரம்பித்தவர்.
Remove ads
வாழ்க்கைச் சுருக்கம்
யாழ்ப்பாண மாவட்டம், மானிப்பாயைச் சேர்ந்த ஜேம்ஸ் இரத்தினம் இணுவிலில் பிறந்தவர்.[2] தந்தை பண்டத்தரிப்பைச் சேர்ந்தவர், தாயார் (டுவைட்) மானிப்பாயைச் சேர்ந்தவர். ஆரம்பக் கல்வியை மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி, புனித தோமையர் கல்லூரிகளில் கல்வி கற்றார். 1924 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்தார். சில காலம் அங்கு கல்வி பயின்ற பின்னர் கொழும்பு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால், ஓர் ஆண்டிலேயே இடதுசாரி அரசியல் ஆர்வத்தினால் படிப்பை முடிக்காமல் வெளியேறினார்.[1]
பின்னர் பதுளை ஊவா கல்லூரியிலும், பின்னர் கொழும்பு உவெசுலி கல்லூரியிலும் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் மூன்று ஆன்டுகள் நுவரெலியா சென்று அங்குள்ள புனித சேவியர் கல்லூரியின் அதிபராகப் பணியாற்றினார்.[1][3] அங்கு ஏ. ஈ. குணசிங்க போன்றவர்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கினார்.[2] தேசிய உணர்வை வளர்த்தெடுப்பதற்கும், அரசியல் போராட்டத்தௌ வலுப்படுத்தவும் என முற்போக்கு தேசியவாதிகள் கட்சி (Progressive Nationalist Party) என்ற அமைப்பை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவுடன் இணைந்து ஆரம்பித்தார்.[3] பண்டாரநாயக்கா இதன் தலைவராக இருந்தார்.[2][4] ஆனாலும் இப்போராட்டம் தோல்வியடையவே, அவர்கள் இருவரும் இலங்கை தேசியக் காங்கிரசில் இணைந்தார்கள்.[3]
இலங்கை சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் நுவரெலியா தேர்தல் தொகுதியில் ஐந்து தடவைகள் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] 1960 மார்ச் தேர்தலில் கொழும்பு தெற்குத் தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.[5]
Remove ads
ஈவ்லின் இரத்தினம் ஆய்வு நிறுவனம்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads