ஜேம்ஸ் நெய்ஸ்மித்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாக்டர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் (Dr. James Naismith) (நவம்பர் 6, 1861 - நவம்பர் 28, 1939) ஒரு கனடிய [1] விளையாட்டு கல்வி ஆசிரியரும், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். [2] இவர் கூடைப்பந்தாட்ட விதிகளை எழுதி கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து திட்டத்தை நிறுவினார்.[3] 1891ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.
1861ல் கனடாவின் அல்மொன்டே அருகே ஒரு பண்ணையில் பிறந்து வளர்ந்த நெய்ஸ்மித், அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு மொண்ட்ரியாலின் மக்கில் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி பயின்றார். கற்பித்தார். அங்கு 1891 இன் பிற்பகுதியில், மாசசூசெட்ஸில் உடற்கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தார். [4]
கூடைப்பந்தாட்டத்தைக் கண்டுபிடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, நைஸ்மித் 1898 இல் டென்வரில் மருத்துவப் பட்டம் பெற்றார். பின்னர் கேன்சஸ் பல்கலைக்கழகத்திற்கு வந்த இவர், பின்னர் தடகள இயக்குநராகவும் பயிற்சியாளராகவும் ஆனார். [5]
13 ஆண்டுகளுக்குப்பின்னர் 1904 ஒலிம்பிக் போட்டிகளில் சோதனை போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டு 1936 ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக கூடைப்பந்து விளையாட்டு இருந்தது. 1898ல் நெய்ஸ்மித் கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் ஆசிரியரும் முதலாம் கூடைப்பந்து பயிற்றுனராவும் ஆனார்.
Remove ads
ஆரம்ப ஆண்டுகளில்

நெய்ஸ்மித் நவம்பர் 6, 1861 அன்று கனடாவின் மேற்கு அல்மொன்டேயில் (இப்போது கனடாவின் ஒன்ராறியோவின் மிசிசிப்பியின் ஒரு பகுதி) இசுக்கொட்லாந்து குடியேறியவர்களுக்கு பிறந்தார். [6] தனது வாழ்க்கையின் ஆரம்பத்தில் அனாதையாக இருந்த இவர் தனது அத்தை மற்றும் மாமாவுடன் பல ஆண்டுகள் வாழ்ந்து, அல்மொண்டேக்கு அருகிலுள்ள அல்மொண்ட் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அதிலிருந்து 1883 இல் பட்டம் பெற்றார். அதே ஆண்டில், மாண்ட்ரீலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். [7] இவர் ஒரு திறமையான மற்றும் பல்துறை விளையாட்டு வீரராக இருந்தார், கனடிய கால்பந்து, லாக்ரோஸ், ரக்பி, கால்பந்து மற்றும் சீருடற்பயிற்சிகள் ஆகியவற்றில் மெக்கில் பல்கலைக்கழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். இவர் பல்கலைக்கழகத்தின் கால்பந்து அணியில் மையமாக விளையாடினார்.[8] [9]


Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads