ஜொகூர் பாரு மாநகராட்சி
ஜொகூர் மாநிலத்தில் ஒரு மாநகராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); (சுருக்கம்: MBJB) என்பது மலேசியா, சொகூர், மாநிலத்தின் சொகூர் பாரு மாவட்டம்; சொகூர் பாரு மாநகரம்; இசுகந்தர் மலேசியாவின் சில பகுதிகள்; ஆகியவற்றை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[1]
1994 சனவரி 1-ஆம் தேதி சொகூர் பாரு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு சொகூர் பாரு மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், சொகூர் பாரு மாநகரத்தில் உள்ளது.
Remove ads
பொது
இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[1]
வளர்ச்சிப் படிகள்
- ஜொகூர் பாரு நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Town Board); 1910;
- ஜொகூர் பாரு நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Town Council); 1952;
- ஜொகூர் பாரு நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru Municipal Council);1 ஏப்ரல் 1977;
- ஜொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); 1 சனவரி 1994 தொடக்கம்;[2]
மாநகராட்சித் தலைவர்கள்
Remove ads
நிர்வகிக்கும் இடங்கள்
- தெப்ராவ் - Tebrau
- பாசீர் கூடாங் - Pasir Gudang
- ஜொகூர் பாரு - Johor Bahru
- பூலாய் - Kangkar Pulai
கிளை அலுவலகங்கள்
- லார்க்கின் - Larkin Sentral
- பெலாங்கி - Taman Pelangi
- பெர்மாஸ் ஜெயா - Permas Jaya
- பண்டார் பாரு உடா - Bandar Baru UDA
- தம்போய் - Tampoi, Johor
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads