ஞானசௌந்தரி (1948 திரைப்படம்)
1948 இந்திய தமிழ்த் திரைப்படம் எஃப். நாகூர் மற்றும் ஜோசப் தாலியத் ஜூனியர் இயக்கியது மற்றும் சிட் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஞான சௌந்தரி என்பது 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எஃப். நகூர், ஜோசப் தளியத் ஆகிய இருவர் எழுதி, தயாரித்து இயக்கினர். இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், டி. பாலசுப்பிரமணியம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, டி. பாலசுப்ரமணியம், சிவபாக்யம், லலிதா மற்றும் பத்மினி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்..[2] இத்திரைப்படம் அரசன் தர்மரின் மகள் ஞான சௌந்தரியை சுற்றி வரும் கதையாக வருகிறது. சிற்றன்னை அனுப்பிய கூலிப்படையினர் ஞானசௌந்தரியை காட்டுக்கு கடத்திச் சென்று அவரது இரு கைகளையும் வெட்டி எடுத்துவிடுகின்றனர். உயிருக்கு போராடிவரும் அவரை பக்கத்து நாட்டு இளவரசரான பிலேந்திரனால் காப்பாற்றப்படுகிறார்.
இந்தப் படம் நவாப் ராஜமாணிக்கம் நடத்திய மேடை நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த நாடகம் கிறிஸ்தவ நாட்டுப்புறக் கதையைத் தழுவி இயற்றப்பட்டது. படத்தின் திரைக்கதையை நாஞ்சில் நாடு டி. என்.ராஜப்பா எழுதினார். படத்தின் ஒலிப்பதிவை எஸ். வி. வெங்கட்ராமன் மேற்கொண்டார். படத்தின் ஒளிப்பதிவை முறையே ஜித்தின் பானர்ஜி மற்றும் செல்வராஜ் ஆகியோர் கையாண்டனர். படத்தொகுப்பை வி. பி. நாகராஜ் செய்தார். ஞான சௌந்தரி 5,264 மீட்டர் (17,270 அடி) படச்சுருள் கொண்டதாக ₹30,000 மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டது. இந்த படம் தயாரிக்கபட்டபோதே எஸ். எஸ். வாசனும் இதே நாடகத்தின் மற்றொரு பதிப்பை படமாக இயக்கிவந்தார். இந்த படம் 21 மே 1948 இல் வெளியிடப்பட்டு வெற்றி பெற்றது. அதே நேரத்தில் வாசன் இயக்கிய இன்னொரு பதிப்பு தோல்வியடைந்தது.
Remove ads
நடிகர்கள்
|
|
தயாரிப்பு
திருவனந்தபுரத்தில் உள்ள நீதிபதியாக இருந்தவரின் மகனான ஜோசப் தாலியத் ஜூனியரும் எஃப். நாகூர் ஆகியோர் நவாப் ராஜமாணிக்கம் நடத்திய மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு படத்தைத் தயாரித்து இயக்க முடிவு செய்தனர். அது ஒரு கிறிஸ்தவ நாட்டுப்புறக் கதையைத் தழுவி எழுதபட்ட நாடகமாகும்.[a][3][4] அதே நேரத்தில், எஸ். எஸ். வாசனும் அதே நாடகத்தின் இன்னொரு பதிப்பை எம். கே. ராதா மற்றும் கண்ணாம்பா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க திரைப்படமாக உள்ளதாக அறிவித்தார்.[5] இப்படத்தின் இசையமைப்பாளராக எஸ். வி. வெங்கட்ராமனும், ஒளிபதிவாளர்களாக ஜித்தின் பானர்ஜி மற்றும் செல்வராஜ் ஆகியோர் இருந்தனர்.[1]
படத்தின் கலை இயக்குநராக நாகூர் பணிபுரிய, நாகராஜ் படத்தொகுப்பு செய்தார். படத்தின் திரைக்கதையை நாஞ்சில்நாடு டி. என். ராஜப்பா எழுதினார்.[1] படத்தின் தயாரிப்பாளர்கள் முதலில் பானுமதியை நாயகி பாத்திரத்துக்குத் தேர்வு செய்தனர். முதல் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பானுமதி பின்னர் படத்திலிருந்து விலகினார்.[5] இதனால் கன்னட நடிகை எம். வி. ராஜம்மாவை அந்த பாத்திரத்திற்காக தேர்ந்தெடுத்தனர்.[3] அவர் டி. ஆர். மகாலிங்கத்தை விட வயதில் மூத்தவர் என்பதால் ஒப்பனைக் கலைஞர் அரிபாபு தன் தறமையால் அவரை இளமையாகக் காட்டினார்.[5]
இப்படம் ரூ 30,000 பட்ஜெட்டில் (2021 மதிப்பில் ₹2.1 கோடி) தயாரிக்கபட்டது. படத்தில் நடித்த ராஜம்மாவுக்கு ரூ 1,500 மற்றும் மகாலிங்கத்துக்கு ரூ 5,000 கூடுதல் தொகையாக ₹2,500 வழங்கப்பட்டது.[5] ஏசு கிறிஸ்துவின் வாழ்க்கையை பாடல் காட்சி ஒன்றில் திரையில் காட்டிய முதல் தமிழ் திரைப்படம் இது ஆகும்.[6]
Remove ads
இசை
படத்தின் விளக்கக் குறிப்புகளின் படி, படத்திற்கு எஸ். வி. வெங்கட்ராமன் இசையமைத்துள்ளார். என்றாலும் எம். எஸ். ஞானமணி மூன்று பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை கம்பதாசன், பாலசுந்தர கவி, பாபநாசம் சிவன், கே. ஆர். சாரங்கபாணி, டி. என். ராஜப்பா மற்றும் கே. டி. சந்தானம் ஆகியோர் எழுதியுள்ளனர்.[7] "அருள்தரும் தேவமாதா" பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்பாடலைப் பாடியது பி. ஏ. பெரியநாயகி மற்றும் இளம் ஜிக்கி ஆகியோராவர்.[8] பாடல் புத்தகத்தில் உள்ளபடி: பாபநாசம் சிவன் எழுதிய அருணோதயானந்தமே பாடல், காம்போதி, சிம்மேந்திர மத்யம் மற்றும் சாம ராகங்கள் அடங்கிய ராகமாலிகையாக அமைக்கப்பட்டது. பாடலாசிரியர் விவரங்கள் படத்தின் வரவுகளிலிருந்து எடுக்கப்பட்டது.(வெளி இணைப்புகளைப் பார்க்கவும்).
வெளியீடும், வரவேற்பும்
ஞான சௌந்தரி 21 மே 1948 இல் வெளியானது.[9] ஜோசப் தாலியத் ஜூனியரை விட, வாசனின் பதிப்பு பெரியதாக இருப்பதாக விநியோகஸ்தர்கள் உணர்ந்ததால், படத்தை வாங்க எந்த விநியோகஸ்தரும் முன்வரததால், வருவாய்ப் பங்கீட்டின் அடிப்படையில், பாராகான் தியேட்டரில் சொந்தமாக படத்தை வெளியிட வேண்டியிருந்தது. இருப்பினும் வாசனின் படம் வணிகரீதியாக தோல்வியடைந்தது. ஏனெனில் பார்வையாளர்களால் பிராமண பேச்சுவழக்கில் பேசும் கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேநேரம் இந்த பதிப்பு வணிகரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. சிட்டாடல் பதிப்பின் மகத்தான வெற்றிக்கு மரியாதை செலுத்தும் வகையில் எஸ். எஸ். வாசன் தனது படத்தை திரையரங்குகளில் இருந்து விலக்கிக்கொண்டார்.[10]
Remove ads
குறிப்புகள்
- Both Dhananjayan and Randor Guy does not mention the name of stage play and name of folk tale
மேற்கோள்கள்
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads