ஞானா குலேந்திரன்

இலங்கை தமிழ் அறிஞர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முனைவர் ஞானா குலேந்திரன் (Gnaanaa Kulendran) இலங்கை தமிழ் அறிஞரும், எழுத்தாளரும், பேராசிரியையும் ஆவார். இசை, மற்றும் பரத நாட்டியம் தொடர்பாக ஆங்கிலத்திலும், தமிழிலும் பல நூல்களை எழுதியுள்ளார்.[1]

வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கையில் கே. சிவசுப்பிரமணியம் தம்பதிகளுக்குப் பிறந்த ஐந்து பெண்களில் இரண்டாவதாகப் பிறந்தவர் ஞானா குலேந்திரன். கொழும்பு மெதடிஸ்த கல்லூரியில் கல்வி பயின்றவர். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றவர். யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக சேர்ந்தார். பின்னர் இவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பை மேற்கொண்டு, அதே பல்கலைக்கழகத்திலேயே பேராசிரியராகவும், இசை, மற்றும் பரத நாட்டியத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார். பேராசிரியர் ஏ. குலேந்திரன் என்பவரைத் திருமணம் புரிந்தார். இவர்களுக்கு சிறீகிருஷ்ணா, சிறீநாராயணி அபிமன்யு என இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

Remove ads

விருதுகள்

வெளியிட்ட நூல்கள்

தளத்தில்
ஞானா குலேந்திரன் எழுதிய
நூல்கள் உள்ளன.
  • பரத இசை மரபு (1994)
  • Music in the dance of ancient Tamils
  • Musical traditions of Bharathanatyam
  • பரத நாட்டியத்தின் தமிழசைப் பாடல்கள்
  • Karaikkal Ammaiyar - Mother of South Indian Music
  • காரைக்காலம்மையார் - தென்னிந்திய இசையில் தாய் (1996)
  • தெய்வத் தமிழிசை (2008)
  • Music and Dance in the Thanjavur Big Temple (2004)[1]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads