டம்பாச்சாரி
எம். எல். டண்டன் இயக்கத்தில் 1935 இல் வெளியான தமிழ்த்திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டம்பாச்சாரி (Dumbachary) என்பது 1935 ஆம் ஆண்டு மாணிக் லால் டண்டன் இயக்கத்தில் வெளிவந்த சமூக நாடகத் தமிழ்த் திரைப்படமாகும். பம்பாயில் தயாரிக்கப்பட்ட இப்படமானது பயோனீர் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளிவந்தது. இத்திரைப்படத்தில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி, சி. எஸ். சமண்ணா, பி. எஸ். ரத்னா பாய், பி. எஸ். சரஸ்வதி பாய் ஆகியோர் நடித்தனர். பி. எஸ். ரத்னா பாய் மற்றும் பி. எஸ். சரஸ்வதி பாய் ஆகியோர் பாளையங்கோட்டை சகோதரிகள் என்று நன்கு அறியப்பட்டவர்களாவர்.[2]
Remove ads
கதை
செல்வந்த குடும்பத்தில் பிறந்த நாயகன் தன் மனைவியைப் புறக்கணித்துவிட்டு, தன் தந்தை சேர்த்துவைத்த செல்வத்தை தான் மோகித்த பெண்ணுக்குச் செலவிட்டு அனைத்தையும் இழக்கிறான். பின்னர் அவன் தனது முட்டாள்தனத்தை உணர்ந்து மனம் திருந்தி நிறுகும்போது, மனைவி அவனை அரவணைத்து மகிழ்ச்சியான வாழ்க்கைக்குக் கொண்டு செல்கிறாள்.[2]
நடிப்பு
|
|
தயாரிப்பு
தமிழ்த் திரைப்பத் துறையில் பேசும் படங்கள் அறிமுகமான பிறகு, தயாரிக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து படங்களும் தொன்மக் கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. அக்காலத்தின் சமகால வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட முதல் சமூகப் படம் இதுவாகும். தமிழ்த் திரைப்படத் துறையின் ஆரம்ப ஆண்டுகளில் சென்னையில் எந்த படப்பிடிப்பு அரங்குகளும் இல்லாததால், இந்தப் படம் கல்கத்தாவில் (இப்போது கொல்கத்தா) உள்ள பயோனியர் பிலிம் ஸ்டுடியோவில் செல்லம் டாக்கீஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.[2]
எழுத்தாளர் திருவெற்றியூர் காசிவிஸ்வநாத முதலியார் ஒரு பிரபலமான நாடகாசிரியரும், பிரம்ம சமாஜ இயக்கத்தின் உறுப்பினருமாக இருந்தார். பெண் கல்வி, கைம்பெண் திருமணம் போன்ற பல விசயங்களைப் பற்றியும் அவர் எழுதினார். அவர் அக்டோபர் 1871 இல் தனது 66 வயதில் இறந்தார். அவரது நாடகமான டம்பாச்சாரி விலாசம் பலமுறை அரங்கேற்றப்பட்டது.[4] இந்த நடகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் தயாரிக்கபட்டது.
இந்தப் படத்திற்கு உத்தம மனைவி என்ற மாற்றுப் பெயரும் இருந்தது. அந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு மாற்றுப் பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது.
இசை
படத்தின் கதையானது சமூக்க் கதையாக இருந்தபோதிலும், அந்தக் காலத்தில் வெளியான பிற புராணக் கதைப் படங்களையும் போலவே இந்தப் படத்திலும் 38 பாடல்கள் இருந்தன. பெரும்பாலான கலைஞர்கள் கருநாடக இசைப் பாடகர்கள், பார்வையாளர்கள் அவர்கள் 'பேசுவதை' விட அதிகமாகப் பாடுவார்கள் என்று எதிர்பில் வந்தனர். இருப்பினும், இந்தப் படத்தில் இடம்பெற்ற எந்தப் பாடலும் பிரபலமடையவில்லை.[2]
வரவேற்பு
இந்தப் படம் கதை வசனத்திற்காகவும், எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி மற்றும் பாளையங்கோட்டை சகோதரிகளின் நடிப்பிற்காகவும் நினைவுகூரப்படுகிறது.[2]
குறுந்தகவல்கள்
- இத்திரைப்படத்தின் விளம்பரத் துண்டுப் பிரசுரங்கள் விமானம் மூலம் வீசப்பட்டன.[5]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads